Archive for the ‘வரலாறு’ Category

தமிழ் எழுத்தின் பழமை-1

கணியன்பாலன்   தமிழ்மொழியும் அதன் இலக்கியங்களும் மிகப் பழமையானது என்பதற்கு அதன் ‘தமிழி’ எழுத்துத் தோன்றிய காலத்தை அறிதலே போதுமானது. தமிழகத்தில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நடந்த அகழாய்வின்போது  கிடைத்த மட்பாண்டங்களில் இருந்த இருநெல் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass  Spectrometry  by the Beta Analytic Lab , USA ), அவைகளின் காலம் கி.மு.490, கி.மு. 450 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இந்த மட்பண்டங்களில் ... Full story

அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்

அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில், கும்பகோணம்
சேசாத்திரி சிறீதரன்   தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன. இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம் செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே ... Full story

பழந்தமிழக வரலாறு -3

பழந்தமிழக வரலாறு -3
               காலகட்டக் கணிப்பும், துல்லியமும்  கணியன்பாலன்               வரலாறு என்பது தற்செயலான நிகழ்வுகளால் ஆனது போல் தோன்றினாலும் அது தனக்கென வகுத்தளிக்கப்பட்ட விதிப்படிதான் இயங்கி வருகிறது. சமூகத்தின் பொருளாதார உற்பத்தி முறைதான் வரலாற்றின் திசைவழியை நிர்ணயிக்கிறது.  மனித வரலாற்றில் ஆண்-பெண் உறவு நிலையை எடுத்துக்கொண்டால், காட்டுமிராண்டி காலத்தில் குழு மணமும், அநாகரிக காலத்தில் இணை மணமும் இருந்தது. நாகரிக காலத்தில் குடும்பமும், ஒருதார மணமும் உருவாகியது. நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த ... Full story

பழந்தமிழக வரலாறு -2

பழந்தமிழக வரலாறு -2
காலமும்  வரலாறும்  கணியன்பாலன் காலம் குறித்தப் புரிதலோ, காலம் குறித்தத் தெளிவோ இன்றி எழுதப்படும் வரலாறு, ஒரு முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கி.பி. 17ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும், கி.பி. 21ஆம் நூற்றாண்டு உலகத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமிடயேயான வேறுபாடுகள் உள்ளன. இந்த இரண்டு காலகட்ட உலகமும் வேறு வேறானவை. அதில் வாழ்ந்த, வாழ்ந்து வருகிற மனிதர்களும் வேறு வேறானவர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது என்பது இயலாத காரியம். ... Full story

பழந்தமிழக வரலாறு -1

பழந்தமிழக வரலாறு -1
கணியன்பாலன்           சங்க இலக்கியமும் பழந்தமிழக  வரலாறும்   கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற சங்ககாலப்புலவர் பொருள் தேடி ஆழ் கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த சங்க காலத்தலைவன் குறித்துப்பாடிய அகம் 255ஆம் பாடல், “உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம்” எனத்தொடங்கி “வருவர் மன்னால்-தோழி!” என முடிகிறது. இப்பாடலில், ‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.