Archive for the ‘பொது’ Category

Page 1 of 5712345...102030...Last »

நீலிக்கண்ணீர் என்றால் என்ன?

பவள சங்கரி வணிகக் குலத்தைச் சேர்ந்த நீலி என்கிற பெண் தீய எண்ணம்கொண்ட தன் கணவனால் கொல்லப்படுகிறாள். பின் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவள் பேயாகி, மனைவி போன்ற தோற்றத்துடனே வருகிறாள். கையில் ஒரு கரிக்கட்டையைக் குழந்தையாகக் கொண்டு மாய லீலைகள் செய்கிறாள். அப்பா என்று குழந்தையும் அன்பாக விளிக்கிறது. அவனோ அச்சத்தில் உடன் செல்ல மறுக்கிறான். நீலி கண்ணீர் மல்க நிற்கிறாள். ஊர் மக்கள் அவள் பேய் என்பதை அறியாமல் அவனை நீலியோடு சென்று குடும்பம் நடத்தவேண்டும் என்று ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
"இடக்கையில் மத்து, வலக்கையில் வெண்ணை உடுப்பிவிலாஸ் கண்ணன் உரத்து- விடுக்கின்றான், " இன்றை யMENUவைக், கன்றது உண்டபின், தின்றிடு பார்த்தாகீ தை"....கிரேசி மோகன்.... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  ’’மேல்கோட்டை செல்ல மகன்(செல்லப் பிள்ளை)தினமும் வள்ளலாய் பால்கொட்டும் கன்றைப் பிரதான -ஸோல்மேட்டாய்க்(SOULMATE) கொண்டதன் காரணம் , காலை(அதிகாலை) தினமுமேகால்(திருவடி) உண்ட பசுவின் உணர்வு’’....கிரேசி மோகன்....! Full story

கல்விக்கு வரதட்சணை

சி. ஜெயபாரதன், கனடா   பல்கலைக் கழகம் பகட்டுப் பணச் சந்தை ஆனது ! பள்ளிக்கூடம் பணக்கூடம் ஆனது ! கல்விக்கூடம் காசுக்கூடம் ஆனது ! மடி நிறையப் பணமிருந்தால் மகளுக்குப் படிப்பு ! வாரிக் கொடுத்தால் தான் பட்டம் கிடைக்கும் ! படிப்புக்கும், பதவிக்கும் லஞ்சமா ??? வள்ளுவரைப் படிக்கவும், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் படிக்கவும், வரதட்சணை வழங்க வேண்டுமா ? வழி தவறிய தமிழ்நாடே !   Full story

பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்கள்

-முனைவர். வே.மணிகண்டன்   சங்கச் சமுதாயத்தில் இடம்பெற்றுள்ள தொன்மங்கள் சங்ககால மாறுதல் நிலையையும் தொன்மையான சமுதாய எச்சத்தையும் வெளிக்காட்டுவனவாய் அமைந்துள்ளன. சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில் பெண் தொன்மங்களாக கொற்றவை, கொல்லிப்பாவை திருமகள், அருந்ததி, துர்க்கை, கண்ணகி ஆகியோர் பற்றிய பதிவுகள் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. மேலும்,  ஆண் தெய்வங்களான முருகப்பெருமான், திருமால், தேவர்கள் குறித்த தொன்மச்செய்திகளும் இவ்விலக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தில் பெண் தெய்வங்கள் என்னும் இவ் ஆய்வுக்கட்டுரை பெண் தொன்மங்களுக்கு முதன்மை தந்து படைக்கப்படுவதுடன் ஆண் தொன்மங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. கொற்றவை பற்றிய தொன்மம் பதிற்றுப்பத்தில் பாலை ... Full story

நலம் .. நலமறிய ஆவல் (77)

நலம் .. நலமறிய ஆவல் (77)
நிர்மலா ராகவன் பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான்! தீபாவளிக்குச் சில நாட்களே இருந்தன. பல வருடங்களுக்குமுன், என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்மணி கேட்டாள், “பண்டிகைக்கான ஆயத்தங்களை ஆரம்பித்துவிட்டாயா?” “என் மாமியார் வீட்டில் அழைத்திருக்கிறார்கள். அதனால் நான் ஒன்றும் செய்யப்போவதில்லை!” என்றேன். “அப்படியானால், குழந்தைகளுக்கு பண்டிகை வரும் மகிழ்ச்சியே இருக்காதே!” பண்டிகை என்றாலே கொண்டாட்டம்தான். பெரியவர்களுக்கு வேலை அதிகம் என்றாலும், பழைய ... Full story

தீபாவளி பலகாரம்!

பவள சங்கரி தீபாவளி நெருங்குகிறது.  கடைகளில் பலகாரம் வாங்குவோர் கவனம்! டெங்கு, விசக்காய்ச்சல்கள் என நோய்கள் தீவிரமாகியுள்ள இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்! பதிவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே இனிப்பு வகைகள் வாங்கவேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுரை! தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். கலப்பட பொருட்கள், அதிகமான நிறமிகள் உபயோகிக்கக்கூடாது. பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் பெயர் போன்றவைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிக்கும் இடம், விற்கும் இடம் சுத்தமாக ஈ, கொசு, பூச்சிகள் ... Full story

அமெரிக்காவில் நீதித்துறையிலும் இனதுவேஷம்!

-நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கா என்ற நாடு உருவானதிலிருந்தே இனத்துவேஷம் அங்கு இருக்கிறது.  அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பின்னால் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுக் குடிமையுரிமைகளும் பெற்றனர்.  ஆயினும் இன்றுவரை அமெரிக்காவில் கருப்பர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்போல்தான் நடத்தப்படுகின்றனர்.  கருப்பர்கள் பலர் காவல்துறை அதிகாரிகளால் எவ்வித முகாந்திரமும் இன்றிச் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்.  ஒரு வெள்ளை இனப் பெண்மணியைக் காரில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்தியிருக்கிறார்.  அந்தப் பெண்மணி பயந்துகொண்டே ... Full story

முகநூல் மோகம்?

பவள சங்கரி உலக அளவில் முகநூல், சிட்டுரை போன்ற இணைய தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவோர்  இந்தியர்களே! இதில் பெண்களே மிக அதிகமாக  பங்கேற்கிறார்களாம். பத்திற்கு எட்டு பெண்களுக்கு இதன் மூலமாக பல்வேறு விதமான தொல்லைகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக நட்பு வட்டத்தில் இருப்பவர்களாலேயே அத்தகைய பல பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது...  எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளாலும் நன்மை, தீமை இரண்டும் சம அளவிலேயே இருக்கின்றன. அதை உணர்ந்து எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் பயன்படுத்துவது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை விளங்கச் செய்கிறது.. Full story

தம்படம் மோகம்!

பவள சங்கரி எச்சரிக்கை! தம்படம் (செல்ஃபி) 4 முறைகளுக்கும் மேல் எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களாம்.. அதன் பிறகு தன்னிலை மறந்து ஓடும் ரயில், மலை முகடுகள், அதள பாதாளம், பொங்கி வரும் அலைகள் போன்ற எதைக்கண்டும் அஞ்சாமல், இயற்கையின் இயல்பைக்கூட உணரமுடியாமல் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 400 பேர் இதனால உயிரிழந்திருப்பது அதிர்ச்சியான தகவல்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் :-( தம்படம் எடுக்கும் உபரி உபகரணங்கள் (செல்ஃபி ஸ்டிக்) பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக விதவிதமாக விளம்பரம் செய்து குறிப்பாக இளைஞர்களை ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
’‘என்றும் புதியது, ஏகன் புதியது, கன்றும் புதியது , கேசவ்ஜி- நன்றிதை ஊரறியச் செய்திடும் உம்கை புதியது, FOR-EVER கண்ணன்காப் பார்’’....கிரேசி மோகன்....! லவ்லி கேசவ்....மாஸ்டர் ஃபீஸ்.... -------------------------------------------------------------------------------------------------------------------------------------- மருமகன் வேலனோ தகப்பன்சாமி, தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி....குழந்தைகளிடமிருந்து INSPIRATION....! கண்ணனுக்குப் பிடித மடிகள் ரெண்டு....1) தாய் மடி 2) தாய்ப்பசு மடி ....!... Full story

குறுந்தொகை நறுந்தேன் – 5

குறுந்தொகை நறுந்தேன் - 5
-மேகலா இராமமூர்த்தி இரவுநேரத்தில், வீட்டிலுள்ளோர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுத் தலைவி தன் காதற்தலைவனைச் சந்திக்க வெகுதொலைவு வருவதென்பது தினமும் ஏலாத காரியமாகையால் பெரும்பாலும் இரவுக்குறி வீட்டினர் அறியாவகையில் தலைவியின் இல்லத்துக்குள்ளேயோ, அல்லாதவிடத்து வீட்டுக்கு மிக அணித்தே வீட்டிலுள்ளோர் குரல் கேட்கும் தொலைவிலோதான் நிகழ்வது வழக்கம். அத்தோடு இரவுக்குறி பகற்குறிபோல் எளிதானதும் அன்று. இரவென்பதால் தலைவன் பல்வேறு இடையூறுகளைக் கடந்தே தலைவியைச் சந்திக்க இயலும். அவ்விடையூறுகள் யாவை? துஞ்சாக் கண்ணரும் அஞ்சாக் கொள்கையருமாய் ... Full story

‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.

'1000 கவிஞர்கள் கவிதைகள்' உலகளாவிய பெருநூல் வெளியீட்டு விழா.
21.10.2017, சனிக்கிழமை, காலை 09.30 மணி வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம், இலங்கை கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என ... Full story

மிட்டாய் மலை இழுத்துச் செல்கின்ற எறும்பு!

-ராஜகவி ராகில் கூந்தல் விரித்துத் தரையில் நீ நடந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில் பச்சைப் புல்வெளி ஆனதாம் கறுப்பாய் நான் அறிந்திருந்தேன் உன் நிழல் பார்த்து மயங்கி விழுந்தபோது உன் அழகு நிஜத் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிவிட்டதாய்! பலநிறப் பூக்கள் வாழும் வாசப் பிரதேசம் மலர்களெல்லாம் வெண்மையான ஒரு திடீர்ப் பொழுது நீ வந்து கொண்டிருந்தாய் புன்னகை வெயிலெறித்தபடி! ஈர்ப்பு பூமிக்கு இருப்பதாக நியூட்டன் சொன்ன கருத்து மறுத்து இதுவரைப் ... Full story

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சரஸ்வதி மஹா யாகம்

சரஸ்வதி துதி சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை “ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்” ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் “ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டும் மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற வருகிற 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று ... Full story
Page 1 of 5712345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.