Archive for the ‘பொது’ Category

Page 10 of 52« First...89101112...203040...Last »

அடியாரும் ஆன்மீகமும்! (1)

அடியாரும் ஆன்மீகமும்! (1)
பவள சங்கரி ‘பெரிய புராணம்’ எனும் தெய்வீக நூலில், அடியார்களைப் பற்றிப் பாடும்போது சேக்கிழார் பெருமான், கேடு மாக்கமுங் கெட்ட திருவினார் ஒடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார் கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார். குறைவதும் மிகுவதும் இல்லாத நிலைத்த ஐசுவரியத்தை உடையவர்கள், பிச்சைபுக்கு மண் ஓட்டையும் பசும் பொன்னையும் ஒன்று போலவே காண்பவர்கள். இறைவனை ... Full story

நிலை மாறும் உலகில்……..

நிலை மாறும் உலகில்........
பவள சங்கரி வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பது இதுதானோ!! ஒரு காலத்தில், இந்தியா உள்பட தெற்காசிய கண்டத்தில் உள்ள பல நாடுகளை பிரிட்டன் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்திருந்தது. இன்று நிலைமையைப் பாருங்களேன்.... இதைச் சாத்தியமாக்கிய அத்துனை இந்தியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள்! இந்திய கோடீசுவரர்கள் அனைவரும் பிரிட்டனில் வீடு மனை விற்பனைத் துறையில் ... Full story

அவர் ஏன் பெருந்தலைவர்?

அவர் ஏன் பெருந்தலைவர்?
பவள சங்கரி இன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள். அவர் ஏன் பெருந்தலைவர்? தன் தாய்க்கு மாதம் 120 ரூபாய் சாப்பாட்டு செலவிற்குக் கொடுப்பாராம். ஒரு முறை அவருடைய தாயார், மகனிடம், செலவிற்கு பணம் போதவில்லை கொஞ்சம் சேர்த்து கொடுக்கும்படி கேட்டாராம். ஆனால் நம் தலைவரோ முடியாது என்று மறுத்துவிட்டாராம். முதல் அமைச்சரின் தாயார் என்பதால் அடிக்கடி அவரைக் காண வருபவர்களுக்கு காபி, தேநீர் கூட கொடுக்க முடியவில்லையே என்று ... Full story

அறிந்துகொள்வோம்!

அறிந்துகொள்வோம்!
-மேகலா இராமமூர்த்தி மன்னுயிர்க்கெலாம் அன்பு செய்த மாமனிதர் - ஆல்பர்ட் சுவைட்சர் ஜெர்மனியிலுள்ள கய்சர்பர்க் (Kayserburg) எனும் கிராமத்தில், சனவரி 14, 1875-இல், தேவாலயத்தில் கிராமபோதகராய்ப் பணிசெய்துவந்த (the local Lutheran-Evangelical pastor) ஒருவரின் மகனாய்ப் பிறந்தவர் ஆல்பர்ட் சுவைட்சர் (Albert Schweitzer) எனும் பெருமகனார். மெய்யறிவாளர், மதபோதகர், இசைத்துறை வல்லுநர், புகழ்பெற்ற மருத்துவர் இப்படிப் பன்முக ஆற்றலளாராய் மிளிர்ந்த சுவைட்சர், மன்னுயிர்பால் நேயம் கொண்ட மாமனிதராய்த் திகழ்ந்து மன்பதையில் அழியாப் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ... Full story

தல விருட்சம்

தல விருட்சம்
பவள சங்கரி அனைத்து கோவில்களிலும் தல விருட்சம் என்று இருக்கிறதே. அதன் தாத்பரியம் என்ன என்று தெரியுமா? ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் காடுகளில் குடில் அமைத்து கூட்டமாக வாழ்த்து வந்தனர். பெரிய கட்டிடங்கள் எல்லாம் இல்லை. அந்த காலத்தில் மரத்தினடியில் இறை உருவை எழுந்தருளச் செய்து வழிபட்டு வந்தனர். பின்னர் நாகரீக வளர்ச்சியில், காடுகள், நாடு, நகரமாகவும் மாறி, கட்டிட அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பிரம்மாண்டமான ஆலயங்களும் ... Full story

உடலியல் உளவியல் அராஜக அரசியல்

உடலியல் உளவியல் அராஜக அரசியல்
-- எஸ். வி. வேணுகோபாலன்.   யோகாவை முன்னெடுக்கும் உடலியல் உளவியல் அராஜக அரசியல்   உடலினை உறுதி செய் என்றார் மகாகவி பாரதி. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்ற சித்த மரபில் அவரது புதிய ஆத்திச்சூடியில் வந்து விழுந்த வாக்கு அது. சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பது காது அறுந்து விழும் வண்ணம் பெரியோர்கள் நமக்குச் சொல்லிச் சென்றது. நாம் அடுத்த தலைமுறைக்குக் கையளித்துக் கொண்டிருப்பது. உடற்பயிற்சி என்பது தொடக்கநிலை பள்ளிக்கூடங்களிலிருந்தே சொல்லித் ... Full story

JAFFNA HINDU KING SANKILI AND GOA

JAFFNA HINDU KING SANKILI AND GOA
JAFFNA HINDU KING SANKILI AND GOA BY Maravanpulavu K. Sachithananthan I am in Goa. Nostalgic memories of King Sankili of Jaffna plagued my mind. During 1977, I was initiated by Prof. Dr. Pathmanathan’s (now Chancellor University of Jaffna) narrations into the ... Full story

ஓய்வூதியம்

- எஸ்ஸெம்  நிலாம், இலங்கை ஒப்பந்தத்தில் ஒப்பமிடும்போதே இளமை முழுவதையும் குத்தகைக்கு எடுத்து விடுகிறார்கள்! உடம்பின் வலுவத்தனையையும் பூரணமாய்ச் சுரண்டி விட்டு முடிவில்... விட்டெறியும் பிச்சைக் காசு! சுதந்திர வாழ்க்கையைச் சுத்தமாய்ச் சிறையெடுத்து விட்டு "இப்படித்தான்" வாழுவென ஆணை வேறு!... Full story

நான் அறிந்த சிலம்பு – 171

நான் அறிந்த சிலம்பு - 171
-மலர் சபா மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை மேலான தன் கணவன் கூறியதைப் பின்பற்றி, அக்குரங்கு இறந்த பின்னும் கூட அதன் தீய பிறவி ஒழிய வேண்டும் எனக்கருதி  தானம் செய்கையில் அதற்கான ஒரு பங்கை ஒதுக்கி வந்தாள் அப்பெண். மத்தியதேசத்தில் வாரணாசி என்ற ஊரில் உத்தர ... Full story

ரமலான் வருக! வருகவே!!

ரமலான் வருக! வருகவே!!
-கவிஞர் காவிரிமைந்தன் உலகமெலாம் செழிக்கவேண்டி உள்ளமெலாம் ஒளியையேந்தி     வான்பிறையின் வழித்தடத்தில் வயிற்றுப்பசி தான் உணர்ந்து மாதம் ஒரு முப்பது நாள் மாண்புடனே நோன்பிருந்து தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும் தத்துவத்தைத் தான் அறிந்து இறையருளின் கருணையினால் ஈகைக்குணம் நிறையக்கண்டு ஒருமித்தக் கருத்தாலே ஒன்றிவாழும் அனைவருக்கும்... Full story

அறிந்துகொள்வோம்!

அறிந்துகொள்வோம்!
-மேகலா இராமமூர்த்தி தேனின் மகத்துவம்! ’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!’ என்றார்கள் முருக பக்தர்கள். ’முருகன்’ என்ற சொல் போலவே ‘தேன்’ என்ற சொல்லைச் சொல்லும்போதும் நம் நாவும் மனமும் இனிக்கவே செய்கின்றது. அதனால்தான், மணிவாசக அடிகளும் தம் திருவாசகத்தில் ’தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்’ என்று சிவனைத் தித்திக்கும் தேனுக்கு ஒப்புமை காட்டுகின்றார் போலும். இனிமைக்கு மட்டுந்தான் தேன் உரியதா? இல்லை…அதையும் தாண்டிய அபூர்வ மருத்துவ ... Full story

எனக்கான நேரமில்லை!

-கனவு திறவோன் என் நேரத்தைக் கேட்கிறாயே என்ன செய்வேன்? கவிதையைக் கேட்டிருந்தால் தந்திருப்பேன்! நீ வாழும் என் சரிதம் அது மட்டும்தான் என்பதால் ஊருக்கே காட்டுகிறேன் உனக்குத் தர மாட்டேனா? என் மன வானத்தைக் கேட்டிருந்தால் தந்திருப்பேன் கற்பனையில் வாழ்ந்து களைத்துப் போயிருக்கிறேன்! உடல் உந்தி வாழுதல் உவப்பில்லை சிறகாய் இணைந்திட வா சேர்ந்தே பறப்போமே! சுவாசத்தைக் கேட்டிருந்தால் தந்திருப்பேன் நீ இருக்கிறாய் என்பதின் சாட்சியமே அதுதான்! நற்சாட்சிகள் இருந்து என்ன பயன்? கணக்குப் பிழைகள் தானே வழக்கை முடிக்கின்றன! என் நேரத்தைக் கேட்டால் எப்படித் தருவேன்? அஃது எனதல்ல... நீயே என் நேரத்தை நிர்ணயிக்கிறாய் சில நாட்களை நிமிடங்களில் முடிக்கிறேன் சில நாட்களை மாமாங்கமாய்க் கடக்கிறேன் நீட்டிப்பதும் சுருக்குவதும் உன் செயல் தான்! உனக்கான என் நேரத்தை கேட்பது மரபோ? என் நேரத்தைச் சபிப்பதும் ஆசிர்வதிப்பதும் நீ தான்! வரம் தந்தவளே கரம் ஏந்தலாமா? என் நேரத்தைக் கேட்கிறாயே என்ன செய்வேன்?   Full story

சம்பளத்தின் மரணம்

-கவிஜி பித்த நிலைக்குள் போகும் உன்னதத் தருணம் மொத்தக் கொடியில் ஒத்த ஆடை... தாவரங்கள் துருவங்கள் இலைமறையாய் உள்ளங்கை மறைக்கும் உயிரோசைக்குள் காடு கொண்ட ஒற்றையடி... மதி கொண்ட நிறத்தின் மௌன மொழி மண்டிய பயத்தில் முயங்கித் திரிவது பூனை மறந்த மதில்... சொல்லுதல் செய்தல் இடைவெளி இல்லாத நூலகத்தில் பாசி படர்ந்து தூசுகளூடே சிறு கீற்று வெளிச்சம்... தத்தம் கண்களின் கவிதை கொன்று குவிக்கும் குருட்டுச் சிந்தனைக்குள் மயிரடர்ந்த மயக்கத் தாழ்... இரு கைகள் ஆணி இறங்க இன்னும் இரு கைகள் நீட்டியவனே சம்பளம்...   Full story

ஞானம் தேடுகிறேன்

-கனவு திறவோன் புத்தருக்கு ஞானம் தந்த போதி மரம் எனக்கு ஜன்னல் தந்தது கதவு தந்தது கட்டில் தந்தது கோவில் கூரை தந்தது புத்தரின் சிலையும் தந்தது எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஞானம் தேடுகிறேன். Full story

அயல்நாட்டு மோகம்!

-ரா.பார்த்தசாரதி வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம் புதிய தேசம் புதிய மனிதர்களின் நேசம் மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே ! அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை பெற்ற மகன் மகளின் ஸ்பரிசம் இல்லை அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை ! அன்னமில்லை நேரத்திற்கு நமக்கு ஆகாரமில்லை பண்டிகை இல்லை அன்புகாட்ட  யாருமில்லை உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை வேதனையையும் துன்பத்தையும் வெளிக்காட்டாத நிலை ! பணமிருக்கும் நாட்டில் நல்ல மனதிற்கு இடமில்லை குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள் வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் ! கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம் வேலை கிடைத்து  வெளிநாட்டில் ... Full story
Page 10 of 52« First...89101112...203040...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.