Archive for the ‘பொது’ Category

Page 20 of 57« First...10...1819202122...304050...Last »

அ..ஆ..இ..

அ..ஆ..இ..
மாதவன் இளங்கோ மனிதனின் இடுப்புச் சுற்றளவு - 0.001 கிலோ மீட்டர் (என்று வைத்துக்கொள்வோம்) பூமியின் சுற்றளவு - 40075 கிலோமீட்டர் வியாழனின் சுற்றளவு - 448969 கிலோமீட்டர் சூரியனின் சுற்றளவு - 4368175 கிலோமீட்டர் ரைஜலின் சுற்றளவு - 340717650 கிலோமீட்டர் மு-செபேயின் சுற்றளவு - 2839313750 கிலோமீட்டர் கேனிஸ் மேஜோரிசின் சுற்றளவு - 6202808500 கிலோமீட்டர் இப்படி விரிந்துகொண்டே போகிறது பிரபஞ்சம்... மேலே நான் குறிப்பிட்டுள்ள அந்த நட்சத்திரத்தை விட 6202808500000 மடங்கு சிறிய இந்த மனிதனாகிய எனக்கு ஏன் இவ்வளவு அ..ஆ..இ.. இன்னொரு மனிதனோடு என்னை ஒப்பிட்டுப் பார்த்து? அகம்பாவம்... ஆணவம்... இறுமாப்பு...! அந்த மனிதன் ஒருவேளை அந்த நட்சத்திரத்தை விட ஒரு ... Full story

திருமால் திருப்புகழ் (89)

திருமால் திருப்புகழ்   (89)
  கிரேசி மோகன் Krishna for today Makhan chor series. Keshav கண்ணன் திருப்புகழ்(வெண்பா).... ------------------------------------------------------------ ’’கண்ணன் அந்தாதி’’ ------------------------------------ Kaliyamardhana. Chinese brush. #KrishnafortodayKeshav முந்திவந்து வாய்நிறைய மண்ணினை உண்டபின், அந்தநாள் அன்னை அனுபவித்த, -விந்தையைக்,... Full story

மழை

மழை
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி - இலங்கை  வற்றிக் கிடக்கும் வறண்ட பூமியைத் தொட்டுத் தழுவும் உனது தூய கரங்களுக்குத்தான் எத்தனை குளிர்ச்சி! இரவென்ன…பகலென்ன…                            வானம் கருக் கொண்டால் பூமி மகிழ்கிறது!  நீ  இல்லாத நாட்களில் பொல்லாத புழுக்கம்!  இருக்கின்ற நாட்களில் ... Full story

ஆண்டவன் உலகத்தின் முதலாளி!

ஆண்டவன் உலகத்தின் முதலாளி!
-கவிஞர் காவிரிமைந்தன் திரைப்பாடல்களில் உள்ள வரிகளைச் சிலர் மனனம் செய்துவிடுகிறார்கள்.  ஏன் தெரியுமா?  உண்மையை உயிரோட்டமான வரிகளாய்க் கவிஞர்கள் புனைந்திடுவதால்!  அவை காந்த சக்தியைப் போல் இதயம் கவர்ந்துவிடுகின்றன!  அதுவும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகன் திரையில் அப்பாத்திரத்தை ஏற்று உச்சரித்து நடிக்கும்போது, உயிர்க்காவியமாய் அப்பாடல் நிலைபெற்று விடுகிறது. அட.. அப்படிப்பட்ட பாடல் எது என்று கேட்கிறீர்களா? கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களது கற்பனையில் பிறந்த வரிகளைத் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஏழிசை வேந்தர் டி.எம்.செளந்தரராஜன் பாடியிருக்கிறார்.  இந்தப் பாடலின் விசேஷம் என்னவென்றால், முதன் முறையாக எம்.ஜி.ஆர் ... Full story

கம்பனே…!

கம்பனே...!
-பிச்சினிக்காடு இளங்கோ கம்பனே… நான் இதுவரை நான்தான்! நீ                                                                                                                           என் தூரத்து நண்பனாகவே இருந்தாய்! குருகுலக் கல்வி உன்னிடமிருந்து எனக்கில்லை! இருந்திருந்தால் என் சுயத்தின் சாயம் தெளிவற்றிருக்கும்! எனக்கென ஒரு சுயம் இல்லாதுமிருந்திருக்கும்! பள்ளிப் ... Full story

ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்…சில விளக்கங்கள்!

அன்புள்ள வல்லமை வாசகர்களுக்கு, திங்கட் கிழமை (12/05/2014) அன்று வல்லமை இதழில் வெளியான ’ஆத்திசூடி யார்? - ஓர் சுவையான கருத்தாடல்’ என்ற பகுதியின் இறுதிப் பத்தியில்  "எனவே, ஆத்திசூடி நூலின் கடவுள்வாழ்த்தில்  ’ஆத்திசூடி’யாகக் குறிப்பிடப்படுவர் சமண தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரே என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது முனைவர் நா. கணேசன் அவர்களின் கருத்தே அன்றி வல்லமை ஆசிரியர் குழுவின்  தீர்மானமன்று! நன்றி!   Full story

பொம்மைகள்!

பொம்மைகள்!
பிச்சினிக்காடு இளங்கோ      நாங்கள் பொம்மைகள் அல்ல… உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சி! பிள்ளைகளைப் பெற்றதால்                                                                      உங்களுக்கு மகிழ்ச்சி! எங்களைப் பெற்றால் உங்கள் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி! எங்களை வாங்காமலிருந்தால் உங்களுக்கு நட்டமில்லை! பிள்ளைகளின் முகத்தில் மகிழ்ச்சியைக் காணாமலிருந்தால் உங்களுக்கு லாபமில்லையே! நினைவில் வையுங்கள்... உங்களைப்போலவே   நாங்களும் உங்கள் பிள்ளைகளுக்காகவே இருக்கிறோம்! நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுகிறீர்கள்! உங்கள் பிள்ளைகள் எங்களுடன் விளையாடுகிறார்கள்! உங்கள் கைகளில் பிள்ளைகள்! பிள்ளைகளின் கைகளில் நாங்கள்! மீண்டும் நினைவுபடுத்துகிறேன்... நாங்கள் பொம்மைகள் அல்ல… உங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சி! மகிழ்ச்சியை வாங்குங்கள்! மகிழ்ச்சியாய் வாங்குங்கள்! (சிராங்கூன் சாலையில் ஒரு பொம்மைக்கடைக்குப் போனபோது ஒரு கவிதை எழுதுங்களேன் என்றார்கள். விளைவு இந்தக் கவிதை!) Full story

சிறுகை அளாவிய கூழ் (20)

சிறுகை அளாவிய கூழ்  (20)
இவள் பாரதி   ஏதேதோ காரணங்களால் அவசரப்பட்டு அடித்துவிட்டு துடித்துக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொருமுறையும் அடித்த மறுநொடி மடிநோக்கி வரும் குழந்தையை முத்தமிட்டுக் கொஞ்சும்போதெல்லாம் குற்ற உணர்வில் குமைகிறேன் இயற்கையே வரம் தருவாய் அத்தனை துயரிலிருந்தும் விடுபட்டு நானுமொரு குழந்தையாய் மாற -------------------- எந்தக் காதல் பாடல்களைக் கேட்டாலும் எங்கே காதல் கவிதைகளைப் படித்தாலும் உனக்காக நான் ... Full story

திருமால் திருப்புகழ் (59)

திருமால் திருப்புகழ்    (59)
    கிரேசி மோகன் மாம்பலம் கோதண்ட ராமர்.... --------------------------------------------------------- தான்தன தானந்த தான தான்தன தானந்த தான தான்தன தானந்த தான -தனதான.... ------------------------------------------------------------- ''பாண்டியன் ஊர்வந்த போது, மாண்டது யாரென்ற கேள்வி ... Full story

வர்ணம்

அன்று காலை. பெல்கிய நாட்டின் லூவன் நகரில் ஒரு மின்னணு சாதன அங்காடியில் அந்த மனிதருக்காக (attender) காத்துக் கிடந்தேன். வந்தவர் என்னைத் தவிர்த்து விட்டு எனக்கருகே நின்ற, எனக்கடுத்து வந்த சீமாட்டியிடம் என்னவென வினவிவிட்டு கவனித்தார். சில மணித்துளிகள் காத்திருப்பில் கழிந்தது. திரும்பி வந்தவரிடம் மீண்டும் கேட்க முற்பட்டேன். "ஒரு நிமிடம்!" என அவர் மொழியில் தெரிவித்துவிட்டு, இன்னொரு கனவானை கவனிக்கச் சென்றார். அவரும் எனக்கடுத்து வந்தவரே! இன்னும் சில மணித்துளிகள் விழுந்து முடிந்திருந்தது. திரும்பி வந்தவர் மீண்டும் இன்னொரு கனவானை நோக்கிச் சென்றார். பொறுமை இழந்தவனாய் உரக்க உரைத்தேன், "மன்னிக்கவும்." நான் ... Full story

சிறுகை அளாவிய கூழ் – 14

இவள் பாரதி ஓடி ஒளிந்து கொள்ளுமென்னைத் தேடி வரும் கொலுசொலி கதவருகே வந்து எட்டிப் பார்த்து சட்டென மாறுகிறது சிரிப்பொலியாய் ------------- Full story

‘ப்ரமான் சூபியங்க’

அன்று அதிகாலை ஒரு முழுநாள் தேர்வுக்காக லூவன் நகரிலிருந்து ப்ரசல்சு நகரம் செல்ல வேண்டியிருந்தது.  லூவன் எகானோம் டாக்சி நிறுவனம், சொன்னதற்குப் பத்து நிமிடங்கள் முன்னதாகவே வண்டி அனுப்பி இருந்தார்கள். பென்சு காரில் ஏறி அமர்ந்தவுடன் கோனிங்கு போடெவெய்ன்லான் நெடுஞ்சாலையில் காரை விரட்டினார் என் சாரதி.  'ஹுய மார்ஹன்' என்பதற்குப் பதிலாக 'குட் மார்னிங்' என்று கூறிய பாங்கும், அவரது உருவ அமைப்பும் அவர் நிச்சயம் ஃபிளம்மியர் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.  "ஆர் யூ ஃப்ரம் போலன்ட்?" என்று கேட்டேன்.  "இல்லை, ரஷ்யா!" என்று கூறியவர், "தாங்கள் பாகிஸ்தானியா?" என்றார்.... Full story

முடிதிருத்தகமும் மனிதமும்..

மாதவன் இளங்கோ பெல்கிய நாட்டின் லூவன் நகர பிரசல்ஸ் தெருவில் உள்ள ஒரு முடிதிருத்தகம். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன்.  சிறுவயதிலிருந்து இன்று வரை மாறாத பல பழக்கங்களில் ஒன்று - 'முடிதிருத்தும் போது தூங்கிவிடுவது'. ஒரு குட்டித் தூக்கம் போட்டு முடிப்பதற்குள் வெட்டி முடித்து விட்டார் அந்தக் கலைஞர். அதோடு விடாமல், ... Full story

திருடனுக்கு கிடைக்காத பணம்

விசாலம் ஒரு வியாபாரி அதிக பணத்துடன் ரயிலில் ஏறினான். அவன் மாதா மாதம் தில்லிக்குச் சென்று வியாபாரம் செய்த பின் சென்னை திரும்புவான். ஒரு தடவை இவனிடம் நிறைய பணம் இருப்பதைக் கண்டுகொண்டு ஒரு திருடன் அவனது எதிர் சீட்டில் அமர்ந்துகொண்டான். எப்படியாவது பணத்தை வியாபாரிக்குத் தெரியாமல் எடுத்துகொண்டு விட வேண்டும் என்றும் எண்ணினான். இரவில் தூங்கும் நேரம் வந்தது. வியாபாரி அந்த நேரம் தன் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தான். அடிக்கடி எதிரே அமர்ந்த திருடனையும் கண்காணித்தான். இதனால் திருடன் தான் பாத்ரூமுக்கு போவது போல் ... Full story

யாத்ரானுபவம்-2013

யாத்ரானுபவம்-2013
பெருவை பார்த்தசாரதி இன்று நாம் எந்த ஒரு மருத்துவரிடம் சென்றாலும், அவர்கள் மருத்துச் சீட்டோடு கூடவே பரிந்துரைப்பது நடைபயிலுதலும் ஒன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அன்றாடம், அதிகாலை நடைபயிலுதல் என்பது மனிதனுக்குள்ள அத்தியாவசியக் கடமைகளுள் ஒன்றாகிவிட்டது. ஆனால் இன்று இருக்கும் அவசர யுகத்தில் தினமும் நடைப் பயிற்ச்சி முடித்துவிட்டு அலுவலகம் செல்வதென்பது பலருக்கு சற்று சிரமம்தான். அனுதினமும் நடக்கமுடியவில்லையே?..என்பவர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒரு நாளாவது எங்காவது நடந்து செல்ல ... Full story
Page 20 of 57« First...10...1819202122...304050...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.