Archive for the ‘பொது’ Category

Page 30 of 55« First...1020...2829303132...4050...Last »

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா. பெஞ்சமின் லெபோ பகுதி 10-ஈ : அதுவா? இதுவா - ஐயா? அய்யா? ஔவை? அவ்வை? சென்ற பகுதியில், 'தொல்காப்பியர் கருத்துப்படி, 'ஐ' என்பது 'அய்' ஆகலாம் என்று' எழுதி  இருந்தேன். தொல்காப்பியர் 'அய்' என்ற வடிவத்துக்குப் பச்சைக் கொடி காட்டி இருந்தாலும் பழந்தமிழ் இலக்கியத்தில், 'ஐ'வடிவே புழங்கி  வந்திருப்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அகநானூறு 143,  ஆலம்பேறிச் சாத்தனார், பாலைத் திணை – தோழி கூற்றாக வரும் பாடலில்,... Full story

முறையற்ற திடீர் உயர்வுகள்…!

சித்திரை சிங்கர் மத்திய அரசு உயர்த்திய பெட்ரோல் விலையினை திடீரெனக் குறைத்ததால் கொஞ்சம் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில், தன்னை அசுர பலத்துடன் ஆட்சியில் அமரவைத்த தமிழக மக்களுக்கு, உள்ளாட்சி மற்றும் இடைதேர்தலிலும் அறுதிபெரும்பான்மை பலத்துடன் வெற்றிக்கனியினை மீண்டும் அம்மாவின் கரத்தில் அன்புடன் கொடுத்த தமிழக மக்கள் மீது அம்மாவுக்கு என்ன கோபமோ தெரியவில்லை....! யாருடைய நிர்பந்தமோ தெரியவில்லை...! பஸ் கட்டணத்தை ... பால் கட்டணத்தை உடனடியாக உயர்த்தி அம்மா அவர்கள் தனது நன்றிக்கடனை தமிழக மக்களுக்கு செலுத்தியவிதம் கண்டு அனைத்துத் தரப்பு பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்கள் ... Full story

குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள்!

தாமரை - கவிஞர் அன்புள்ள செய்தி ஆசிரியர் / ஊடக நண்பர்கள் / தோழர்கள், வணக்கம். மூன்று தமிழர்களின் உயிர்கள் தூக்குக் கயிற்றின் கீழ் ஊசலாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியாவெங்கும் - குறிப்பாக தமிழகத்தில் - மரண தண்டனைக்கு எதிராகப் பரவலான குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. காந்தி தேசத்தில் இருந்து மரண தண்டனையை ஒழித்தாக வேண்டும் என்பதே படைப்பாளிகள் பலரின் குரலாக உள்ளது.  அத்தகையவர்களின் குரல்களை ஒருங்கிணைத்து , தூக்குக் கயிற்றின் கீழ் துடிக்கும் இந்த மூன்று தமிழர்களின் உயிரையும் காக்குமாறு குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். உலகளாவிய படைப்பாளிகள் ... Full story

வளர்ந்த குழந்தைகளின் கொண்டாட்டம்

தூரிகை சின்னராஜ் குழந்தைகள் தினவிழா என்றாலே குழந்தைகள் மட்டுமே பங்கேற்று கொண்டாடிவரும் வேளையில், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வளர்ந்த குழந்தைகளான ஆசிரியர்கள் கொண்டாடிய வண்ணமயமான குழந்தைகள் தினவிழா நம்மை வியக்க வைத்தது. தஞ்சையில் அமைந்துள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்கள் மேடை ஏறி அசத்தினார்கள். தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் பாட்டு , நடனம், மாறுவேடம், நாடகம், என விதவிதமான தோற்றத்தில். மேடைஏறி குழைந்தைகளை மகிழ்வித்தனர். "இறுக்கமான இன்றைய குழந்தைகளின் மனநிலையை போக்கிட இத்தகைய  விழாக்கள் உதவுவதுடன் மாணவர்களிடையே கற்றலில் நெருக்கமான ஒரு இணக்கத்தை ஏற்படுத்த இயலும்" என்று குறிப்பிடுகிறார் பள்ளியின் முதல்வர் ஏ. ... Full story

கண்ணைப் போல காப்போம்

உயிரினம் இல்லா உலகை – நாமும் நினைத்துப் பார்க்க முடியுமா? உண்மை இல்லா வாழ்க்கையை – நாமும் வாழ்ந்து காட்ட முடியுமா? புழுக்களும் பூச்சிகளும் இல்லா – உலகில் நாமும் வாழ முடியுமா? பூக்களும் செடிகளும் இல்லா – உலகை நினைத்துப் பார்க்க முடியுமா? புல்லும் மரமும் இல்லா – நாட்டை எண்ணிப்பார்க்க முடியுமா? விலங்கும், பறவையும் இல்லா – காட்டை யோசித்துப் பார்க்க முடியுமா? காடுகள் இல்லா நாடுகள் – ஏது கண்ணால் காட்டு பார்க்கலாம் காடுகள் தந்த நாடுகளை – நாம் கண்ணைப் போல காத்திடலாம் குழந்தை பாடல்: -மொ.பாண்டியராஜன் ஓவியம்: தூரிகா Full story

சைனிக் மற்றும் மிலிட்டரி பள்ளிகள்

சைனிக் மற்றும் மிலிட்டரி பள்ளிகள்
கேப்டன் கணேஷ் இந்திய பாதுகாப்புப் படைகளான இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளில் உயர் நிலை அதிகாரிகளாய் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக பள்ளி வயதில் இருந்தே மாணவர்களைத் தயார் செய்ய மத்திய அரசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான் சைனிக் பள்ளிகள் (Sainik Schools) மற்றும் மிலிட்டரி பள்ளிகள் (Military Schools).  நாடு முழுவதும் மொத்தம் பதினெட்டு சைனிக் பள்ளிகளும் ஐந்து மிலிட்டரி பள்ளிகளும் உள்ளன.  இவைகளில் சேர்வதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் ... Full story

வல்லமையில் புதிய பகுதி – சட்ட ஆலோசனை

வல்லமையில் புதிய பகுதி - சட்ட ஆலோசனை
அன்பு நண்பர்களே, முனைவர் நாக பூஷணம் , M.A., M.L., Ph.D. வழக்கறிஞர், ஓய்வு பெற்ற சட்டக் கல்வி பேராசிரியர், T.N. Dr. அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர், எழுத்தாளர், ஆய்வாளர், வானொலி தொலைக்காட்சி பங்கேற்பாளர்,  மொழி பெயர்ப்பாளர் என பன் முகங்கள் கொண்ட பேரறிஞர். இவருடைய எழுத்துப் பணி : சட்டத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் . முனைவர் ஆய்வுக் கட்டுரை " Social Justice and Weaker Sections-Roll of ... Full story

பஜன் சாம்ராட் – தொலைக்காட்சி நிகழ்ச்சி

பஜன் சாம்ராட் - தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் விரைவில் ‘பஜன் சாம்ராட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.  இந்த நிகழ்ச்சி இளைய தலைமுறையின் திறமைகளை ஊக்குவிக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி.  இளைய தலைமுறையினரை பக்தி மார்க்கத்தில் இணைக்கவும், சங்கீத ஞானங்களை வெளிக் கொணரவும், நமது பாரம்பரிய சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லும்படியும் அமையவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது.  இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு போட்டியிடுவதற்கு முன் சென்னை, கோவை, தஞ்சாவூர், பெங்களூரு, ஹூப்ளி போன்ற ஊர்களில் முதற்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பஜன் குழுவிலும் 15 முதல் ... Full story

முறையற்ற செயல்கள் (மகிழ்ச்சி) என்றும் நிரந்தரமில்லை…!

முறையற்ற செயல்கள் (மகிழ்ச்சி) என்றும் நிரந்தரமில்லை...!
சித்திரை சிங்கர் முறையற்ற செயல்கள் கொஞ்ச நாட்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த மகிழ்ச்சி ரொம்ப நாட்கள் நிலைக்காது என்பது இந்த "அங்காடி தெருவுக்கு வந்த ஆபத்து" மூலமாக அனைவரும் உணர முடிகிறது. இந்த அங்காடிகளினால் பெரும் பணம் பார்த்தது வியாபாரிகள்தான். அங்கு உழைத்த பணியாளர்கள் நிலை கொஞ்சம் மோசமானதாகத்தான் இருந்தது என்பது நேசமான உண்மை. இப்பகுதியில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் என்பது ஒருபுறம் உண்மை என்றாலும், அந்த வியாபார இடங்களின் நெருக்கடி ... Full story

ரீச் ஃபவுண்டேஷன் தங்களை வரவேற்கிறது!

ரீச் ஃபவுண்டேஷன் தங்களை வரவேற்கிறது!
நன்றி - ஜெ.சந்திர சேகரன் பொது உறவு அதிகாரி ரீச் ஃபுவுண்டேஷன். Full story

சாதனைச் சிறுமி வர்ஷா

சாதனைச் சிறுமி வர்ஷா
(நறுக்.. துணுக் - 5) சாந்தி மாரியப்பன் ஊக்குவிக்கப்படும் குழந்தைகள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பதற்கு டெல்லியின் நொய்டாவைச் சேர்ந்த வர்ஷா குப்தா ஒரு நல்ல உதாரணம். ‘உலகிற்கு இந்தியாவின் கொடை’ என்ற தலைப்பில் தேடுபொறியான கூகிளின் இந்தியப் பிரிவிற்கான லோகோவை வடிவமைப்பதற்காக முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்காகக் கூகிள் நிறுவனம் ஒரு போட்டி நடத்தியது. சுமார் 1,55,000 பேர் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் தானும் கலந்து ... Full story

வனமின்றி போனால் நம் இனமின்றி போகும்

வனமின்றி போனால் நம் இனமின்றி போகும்
தூரிகை சின்னராஜ் வனமின்றி போனால் நம் இனமின்றி போகும் ... Full story

நூறு சத உறுப்பினர்கள் கொண்ட நேரு தபால் தலை மன்றம்

தூரிகை சின்னராஜ் கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் நகரில் உதகை சாலையில் இருக்கும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களும் நேருவின் பெயரில் அமைந்துள்ள தபால் தலை சேகரிப்பு மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். 1999 இல் தொடங்கப்பட்ட நேரு தபால் தலை மன்றம் ஆண்டுதோறும் தபால் தலை கண்காட்சியை நடத்தி வருகிறது. பள்ளி ... Full story

இல்லை….. இல்லை.

தூரிகை சின்னராஜ் கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி இல்லை. ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே உயிருடன் இருப்பது இல்லை. நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் இல்லை. கிவி பறவைக்கு இறக்கை இல்லை. உயிரினங்களில் ஈசலுக்கு  வயிறும், ஜீரண உறுப்பும் இல்லை. பறவை இனத்தில் குயில் கூடு கட்டுவதில்லை. பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே உயிர் வாழ்வதில்லை. Full story

வண்ண வண்ண புரட்சிகள்

தூரிகை சின்னராஜ் மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது - இளஞ்சிவப்புப் புரட்சி. என்பது மீன் உற்பத்தியை பெருக்குவது - நீலப் புரட்சி உணவு உற்பத்தியை பெருக்குவது - பசுமைப் புரட்சி பால் உற்பத்தியைப் பெருக்குவது - வெண்மைப் புரட்சி எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது - மஞ்சள் புரட்சி Full story
Page 30 of 55« First...1020...2829303132...4050...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.