Archive for the ‘பொது’ Category

Page 4 of 54« First...23456...102030...Last »

ஆற்றல்மிகு இயங்கு நகரம்!

பவள சங்கரி உலகில் உள்ள சிறந்த 140 நகரங்களில் முதலாவதாக ஆற்றல்மிகு இயங்கு நிலை நகரங்களில் முதலாவதாக பெங்களூரூ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி நகரத்தை மூன்றாவது இடத்திற்குத் தள்ளிவிட்டு முதலாவது இடத்திற்கு வந்துள்ள பெங்களுரூ நகரத்திற்கு வாழ்த்துகள். தொழில் துறை வேலை வாய்ப்பு, ரியல் எஸ்டேட், போன்ற அனைத்துத் துறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் சென்னை 17 வது இடத்திலும், மும்பை, தில்லி 23, 25 வது இடத்திலும் உள்ளன. இந்த 140 நகரங்கள் ஆசிய பசிபிக் நாடுகளில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ... Full story

வேதனையின் உச்சம்!

பவள சங்கரி இந்தியாவில் மொத்த பெண்கள் தொகை 40 கோடி. இதில் 40% பெண்கள் கிராமப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த பணிகளையே மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கென்று சொந்தமாக விவசாய நிலங்களும் கிடையாது. அதனால் இவர்களுக்கு விவசாயி என்ற அங்கீகாரமோ அல்லது அரசின் உதவிகளோ, மானியங்களோ கிடைப்பதில்லை. Full story

உழவர் திருநாள் நற்செய்தி!

பவள சங்கரி   விவசாயிகளின் துயர் துடைக்க செயற்கை மழையை வரவழைத்து பயிர்செய்ய வழிவகுக்க அரசு ஏன் முயலவில்லை? சீனாவின் மஞ்சள் நதி பிரதேசத்தில் வறட்சி ஏற்பட்டபோது ஆண்டொன்றிற்கு 55 பில்லியன் டன் செயற்கை மழையின் மூலமாக நீர் வரவழைத்து விவசாயம் தழைக்கச் செய்துள்ளனர். இன்று 55 பில்லியன் என்ற அளவை நான்கு மடங்காக அதிகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 55 பில்லியன் என்பது 4 காவேரி நீர் வரத்திற்கு இணையாகும்.. ... Full story

சுய மரியாதை!

சுய மரியாதை!
பவள சங்கரி புதுச்சேரி யூனியனின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.. புதுச்சேரி யூனியனை குற்றமில்லா பிரதேசமாக உருவாக்குவோம் என்று உறுதியோடு இருப்பவர். 1972இல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. திகார் சிறையில் கைதிகளின் நலன் கருதி (3C மாடல் அதாவது C-Collective, C-corrective, C-Communicative என்ற பொருளில்) கிரண்பேடி நல்ல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார். டென்னிஸ் போட்டியில் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். அவருடைய கம்பீரமான குரலும், மிடுக்கான ... Full story

வன்முறை தடுப்புச்சட்டம்!

பவள சங்கரி சாதிவாரியான வன்முறைகளில் 1,38077 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 43.3% வழக்குகள் நீதி மன்றங்களால் தீர்க்கப்பட்டுள்ளன. இதில் 25.7% குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. இதில், 2013 - 2015 வரையிலான காலகட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மாநிலம் ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட, மிகவும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மீது மிக அதிகமான தாக்குதல் நடைபெற்றுள்ளன. உத்திரப் பிரதேசம் பீகார் இந்த வன்முறையில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக அரசு அறிவிப்பு தெரிவிக்கிறது. தமிழகம் இதில் ஒன்பதாவது இடத்தில் (5,131 வழக்குகள் பதிவு) இருக்கிறது. 14 மாநிலங்களில் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல்  55

-க. பாலசுப்ரமணியம் வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் (3) இது ஒரு வீட்டில் நடந்த நிகழ்ச்சி. மூன்றாம் வகுப்பில் படிக்கின்ற ஒரு மாணவன் அன்று பள்ளி முடிந்ததும் தனது மாதாந்திர மதிப்பீட்டிற்கான பதிவேட்டினை (Progress report) தனது தாயிடம் அளிக்கிறான். அதைக் கவனித்த அவன் தாய் “கணக்கிலே வெறும் 85 மார்க்குகள்தானா? இப்படி எடுத்தால் எப்படி உருப்படுவாய்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே உனக்கு இடம் கிடைக்கும்?” என்று கேட்கிறாள். அதற்குப் ... Full story

வான்கோழிகளின் தியாகத் திருநாள்!

வான்கோழிகளின் தியாகத் திருநாள்!
-மேகலா இராமமூர்த்தி நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமையை நன்றியறிதல்நாளாக (Thanksgiving Day) அமெரிக்கர்கள் கொண்டாடுவது வழக்கம். அமெரிக்க உள்நாட்டுப்போர் (American Civil War) நடந்துகொண்டிருந்த காலகட்டமான 1863-ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் அவர்கள் அவ்வாண்டின்  நவம்பர் 26-ஆம் நாள், நன்றியறிதல்நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதன்பின்னர் அந்நடைமுறை இன்றுவரைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அமெரிக்காவில்! நன்றியறிதல்நாள் தற்போது கனடா உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருவது இவ்விழாவின்மீது உலகமக்களுக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகின்றது. இந்நன்றியறிதல்நாள் விழாவில் மக்களின் ... Full story

தண்டனை

க. பாலசுப்பிரமணியன் நாட்டின் தலைநகரான புதுடில்லியில் நேற்றும் இன்றும் காணக்கிடைக்காத காட்சி... உண்மை…. கண்களை அகலமாய் திறந்து பார்த்தாலும் உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனங்களோ அல்லது மனிதர்களோ  கண்ணில் பட மாட்டார்கள் .. இது பனிமூட்டமல்ல.. புகைமண்டலம்! குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சுமார் 1800 பள்ளிகள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டன. மாலை நேரத்தில் காற்றில் மிதந்துநின்ற கரித்துகள்களும் தூசியும் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த கலவைப் பொருள்களும் கீழிறங்கி வந்து புகைமண்டலமாக மனிதர்கள் மூச்சு விடுவதற்கே தடையாகவும் ஆபத்தாகவும் அமைந்தது. சுவாசிப்பதில் சாதாரணமாக இருக்கும் மனிதர்களுக்கே இந்த கதியென்றால் ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (216)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் தாம் வாழும்காலம் மட்டும் உடல்நலக் குறைவுகளை நிவர்த்தி செய்யும் உரிமை ஒரே விதத்தில்தான் அமைந்துள்ளது. ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறையில் சாத்தியப்படுகிறது என்பது கேள்விக்குறியே! ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார நிலையும் வித்தியாசப்படுவது இயற்கையே. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் வைத்திய வசதிகள் அவர்களின் பொருளாதாரத்தில் தங்கியிருப்பது இந்த 20ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வா? எமது பின்புல நாடுகளில் பணமிருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தமது வசதிகளுக்கேற்ப நவீன வசதியுடன் சிகிச்சைகளைப் பெறுவதும், வறுமையின் ... Full story

தாய்மொழி!

பவள சங்கரி உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு 45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்... பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்! பள்ளியில் சேர்வதற்கு முன்பாகவே மழலைப்பள்ளியில் படித்துவிட்டு ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (212)

அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். பகலும், இரவும் மாறி மாறி வருவது போல, கோடையும், வசந்தமும் மாறி மாறி வருவது போல, இன்பமும், துன்பமும் மாறி மாறி வருவது போலத்தான் அரசியல் உலக மாற்றங்களும்.  அரசியல் என்றால் என்ன? ஏதோ நாம் அறியாத எமக்குப் புரியாத ஒரு மந்திரமா? அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்தி அரசியலுக்குள் நுழைபவர்கள் அனைவரும் என்ன அதற்காகவே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டுக் கையில் தாம் நினைத்தவுடன் அனைத்தையும் சரிசெய்துவிடும் மந்திரக்கோலைக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டவர்களா? இல்லையே!... Full story

என் காளிக்கு..

என் காளிக்கு..
இசைக்கவி ரமணன்   பச்சைரத்தம் சொட்டச்சொட்டப் பட்டைநாக்கு பளபளக்கப் பரபரப்பாய் எதைவிழுங்கப் பார்த்திருக்கிறாய்? நீ படைக்குமுன்னே யாவும்விழுங்கித் தீர்த்திருக்கிறாய்! அச்சமஞ்சும் உன்வடிவை அகம்குலைக்கும் உன்னுருவை அள்ளிப்பருகத் துள்ளிவந்த பிள்ளையைப் பாராய்! அவன் அழகுத்தமிழின் மழலைகேட்க அம்மா வாராய்! இச்சைபோன்ற இடரையெலாம் மிச்சமின்றி விழுங்கிவிடு என்னையுன்றன் பிள்ளையாக வளையவரவிடு, என்றுமெதிரில் நின்றுனன்பில் அளையும்சுகம்கொடு! கச்சைக்கட்டிக் கொண்டுவரும்... Full story

எளிமை – வலிமை!

எளிமை - வலிமை!
பவள சங்கரி நம் முன்னாள் பிரதமர் உயர்திரு லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கும் இன்று பிறந்த தினம். அவர் சிறுவனாக பள்ளி செல்லும்போது அவரும் நம் இந்தியாவும் மிகவும் ஏழ்மையில் இருந்த காலகட்டம் :-( அப்பொழுது ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்லும் நிலைமை. பாலம் ... Full story

போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!

போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!
'அய்யனார் வீதி ' படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக பொன்வண்ணனும் நடித்துள்ள னர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது. பொதுவாக சினிமா ... Full story

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ…

ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ...
பவள சங்கரி ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆரிரரோ... குழந்தையின் தாலாட்டு! இந்த இரு சொற்களில் எத்தனைத் தத்துவங்கள்! தால் என்பது நாவைக் குறிக்கும் சொல். நாவை ஆட்டி இசையாய் எடுத்து, ஊட்டி செல்லக்குழந்தையை ஆராட்டுதல் “தாலாட்டு” எனப்படுகிறது. இந்தத் தாலாட்டில் வல்லினமும், மெல்லினமும் தவிர்த்து, இடையினத்தில் மென்மையாக இசைப்பதே இனிய தாலாட்டுப் பாடலாம். (கசடதபற வல்லினம், ஙஞணநமன மெல்லினம், யரலவழள இடையினம்) ... Full story
Page 4 of 54« First...23456...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.