Archive for the ‘பொது’ Category

Page 5 of 54« First...34567...102030...Last »

“செக்கிழுத்த செம்மல்”

பவள சங்கரி "செக்கிழுத்த செம்மல்" என்று போற்றப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை - வ.உ.சி அவர்கள் பிறந்த புனித நாள் இன்று. ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பின்னர் வந்த முகலாய மன்னர்கள் போன்றவர்களின் ஆட்சிக்காலங்களில் பிரபலமாக இருந்த கப்பல் போக்குவரத்து மற்றும் பிரம்மாண்டமான கப்பல்கள் என அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனி நம் இந்திய நாட்டில் நுழைந்து முன்னூறு ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காலங்களில் முற்றிலும் செயலிழக்கச் செய்யப்பட்டன. ... Full story

கிளிகள் பேசுமா?

கிளிகள் பேசுமா?
உண்மையில் கிளிகள் பேசுமா? ஆம் கிளிகளின் மூளையில் உள்ள வித்தியாசமான கட்டமைப்பு தான் அவைகளை மனிதன் பேசுவதை உள்வாங்கிப்பின் அதே போல் பேச வைக்கிறது என்று அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மற்ற பறவைகளுக்கு இல்லாத இந்த விசேசமான தன்மை கிளிகளுக்கு மட்டுமே உள்ளது. மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப முடிகிறது கிளிகளால். பயிற்சி அளித்தால் ஒரு சில வார்த்தைகளைக்கூட பேசமுடியும். கிளிகளின் மூளை உடற்கூறு ... Full story

தட்டொளி

தட்டொளி
பவள சங்கரி தட்டொளியின் புறக்காட்சிகளனைத்தும் அறச்சீற்றத்தின் அகக்காட்சிகள்!  தட்டொளி - உலோகத்தாலான கண்ணாடி உக்கம் - விசிறி ஆண்டாள் சந்நிதியின் நேர் எதிரில் வெண்கலத்தால் செய்யப்பட்ட தட்டொளி இருக்கிறது. (படத்தில் உள்ளது). இதில் தான் ஆண்டாள் தன் முகத்தை பார்த்தாளாம். தற்போது பளபளப்பு குறைந்துள்ளது. ஆண்டாள் திருப்பாவையில், ‘உக்கமும் தட்டொளியும்' என்று குறிப்பிட்டிருக்கிறாள் - கோதைத்தமிழ்! ஆண்டாள் அருளிய திருப்பாவை (493)... Full story

இந்த வார வல்லமையாளர்

செ. இரா.செல்வக்குமார் இப்பதிவு சூலை 18, திங்கட்கிழமைக்கான வல்லமையாளர் தேர்வுக்குரியது. அக்கிழமையின் வல்லமையாளர் விருதுக்காக, 2016 ஆண்டுக்கான கார்னிகி கார்ப்பொரேசன் கிரேட்டு இம்மிகிரண்டு (பெரும்புகழீட்டிய குடியேறியவர்) விருது பெற்ற திரு. அரி சீனிவாசன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஒவ்வொரு ஆண்டும் கார்னிகி நிறுவனத்தார் பெரும்புகழ் ஈட்டிய குடியேறிய அமெரிக்கர்களுக்கு விருதுகள் வழங்குகின்றார்கள். 2016 இல் நான்கு இந்திய கொடிவழி குடியேறிகளுக்கு இவ்விருது வழங்கப்பெற்றது. 30 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 42 ... Full story

வாசுகியாயணம்!

வாசுகியாயணம்!
பவள சங்கரி 1330 குறட்பாக்களும் இரண்டடியில் எழுதிவைத்த வள்ளுவப்பெருந்தகை, தமது மனைவி வாசுகி அம்மையாருக்காக எழுதிய வெண்பா மட்டுமே 4 வரிகளில் எழுதியுள்ளார்! இதோ: அடிசிற் கினியாளை அன்புடை யாளை படிசொற பழிநாணு வாளை ... அடிவருடி,ப் பின்தூங்கி முன்னெழூஉம் ப யான்பிரிந்தால் என்தூங்கும் என்கண் எனக்கு. பின்னே, திருமணம் ஆன நாளிலிருந்து இறக்கும் தருணம் வரை திருவள்ளுவர் அன்றாடம் உணவு அருந்தும்போது தமதருகில் வைக்கச்சொன்ன ஒரு கொட்டாங்குச்சியில் தண்ணீரும், ஒரு ஊசியும் ... Full story

உலகிலேயே மிகவும் நாகரீகம் அடைந்த நாடு!

பவள சங்கரி முந்தைய காலத்தில் தமிழ், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் நூல் இல்லை. எபிரேயம் என்ற ஹீப்ரு மொழி மற்றும் சீன மொழியில் சில எழுத்துக்கள் இருந்திருக்கின்றன. பைபிளின் பழைய ஏற்பாடு தோன்றியதும்கூட கி. மு.1000 ஆண்டுகளில்தான். ஆனால் இதெல்லாம் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே அதாவது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, கடோபநிததத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தோன்றிய நசிகேதன் எனும் சிறுவன் எமனை வாக்குவாதத்தில் வென்று மூன்று வரங்கள் வாங்கி வருகிறான். அதேபோல் கார்க்கி போன்ற சில இந்துப் பெண்மணிகளும் சாதித்துள்ளனர். புத்தர், மகாவீரர், கன்பூசியசு, ... Full story

மனிதாபிமானம்

பவள சங்கரி ஒரு பிரபலமான வங்கியில் முதியோர் ஓய்வூதியம் வாங்க வந்திருந்த ஒரு தம்பதியரின் மிக மோசமான நிலையை அறிந்தபோது இதயம் துடித்தது. வங்கி மேலாளரிடம் ஓய்வூதிய மனு நிரப்பும்போதே அடுத்த மாதத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்துவிடுமா என்று கேட்க அவர் சிரித்துவிட்டு ஒரு ஆண்டு ஆகும், இன்னும் எத்தனை வேலை இருக்கிறதே என்கிறார். கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார் போன்றோரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள்… நொந்துபோய் வந்தவரிடம் ஒருவர் தலைக்கு 2000 செலவு செய்தால் ஒரு மாதத்தில் பென்சன் கிடைத்துவிடும் என்று ... Full story

பொது சார்புக் கோட்பாடு

பொது சார்புக் கோட்பாடு
பவள சங்கரி புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கண்டறிந்த பொது சார்புக் கோட்பாடு - theory of relativity என்ற தத்துவம். இதைத்தானே நம் பாட்டனார்கள் மிக இயல்பாக ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்’ என்று பண்டைக்காலம் தொட்டே கூறி வந்திருக்கிறார்கள். ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இந்த தத்துவத்தை அதாவது "நாம் காண்பதெல்லாம் உண்மையல்ல" ... Full story

பூமியின் புதல்வர்கள்

பூமியின் புதல்வர்கள்
சேசாத்ரி பாஸ்கர் இந்த வெயில் என்றில்லை.நமக்கு எப்போதும் தேவை பச்சை மரங்கள்.அவை பூமியின் புதல்வர்கள். குளிர்விக்க வந்த குட்டி தேவதைகள்.நம்மால் இயன்ற வரை மரங்களை பேண வேண்டும்.அவை நமக்கு என்றும் ஆதரவு.- மரங்கள் அடர்த்தியானால் சூரியன் உக்கிரம் குறையும்-.வாட்டும் வெயில் பூமியில் படர திணற வேண்டும். தனி நபர் முயற்சி, குழுக்களின் முயற்சி தாண்டி அரசு சட்ட ரீதியாக மரம் நடுதலை ஊக்குவித்தால் மனங்கள் குளிரும்.-மனம் குளிர்ந்தால் பதட்டமும் ... Full story

’நான்’

சேசாத்ரி பாஸ்கர் என்னுள் இருக்கும் "நான்" போக வேண்டும்.சரி.அதை சொல்வது யார்.இந்த நான் தான். சரி நான் போய் விட்டது எனில் மிச்சமிருப்பது என்ன ? அதுவும் நான் தான்.போக சொல்வதும் அது தான்.போவதும் அது தான் எனில் விஞ்சியிருப்பது என்ன ? நானற்ற பெருநிலை எனில் அது போனதை மனதுக்கு உணர்த்தியது யார்? நான் வெளியே செல்லும் சுவாசம் அன்று.அது உணர்தல்.-உணர்தலில் வண்ணம் இல்லை. கசடு இல்லை. நினவு தகட்டின் கீறல் இல்லை.அப்படியே அது இருப்பினும் பெரு உணர்தலில் அது கரைசலுக்கு உட்பட்டது.நான் அகற்றும் புத்தி ... Full story

சிவவாக்கியர்

சிவவாக்கியர்
பவள சங்கரி ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே உயிராவது எதுவடா? உடம்பாவது எதுவடா ? உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது எதுவடா? உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானியே சொல்லடா ? - சிவவாக்கியர் பொருள் : ஒரு முழுமையான உயிரினமாய் இந்த பூமியில் வலம்வரும் ... Full story

ஆணவ மலம்

ஆணவ மலம்
பவள சங்கரி இவ்வுலகில் அழிவின்றி நிலைத்திருப்பவையாக நம் சைவச் சித்தாந்தங்கள் கூறுபவை - பதி, பசு, பாசம் என்பன. பதி எனும் இறையை அடைவதற்கு பசு எனும் உயிர்களுக்குத் தடையாக இருப்பவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களே. உயிர்கள் சத்தியம், அசத்தியம் எனும் இரண்டையும் பகுத்துணர இயலாத இருளாக அறிவொளியை மறைக்கக்கூடியதே இந்த ஆணவ மலம். இறை ... Full story

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

கேசவ் வண்ணம் - கிரேசி எண்ணம்
  ’’கண்ணன் அனுபூதி’’ ---------------------------------------- நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில் இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த இடப்பயல் தாளே இருப்பு....(10) இருப்பதிங்(கு) ஒன்றே இதன்பேர் கண்ணன் மறுப்பதை விட்டென் மனமே -கருப்பொருளைப் பார்க்காத போதும் பாடப் பரவசத்தில் கார்கால மேகத்தில் காண்....(11) காணவனைக் காற்றில் கலந்துவரும் கீதத்தில் நானென(து) இல்லாத மோனத்தில் ... Full story

பஞ்சமாபாதகம்

பவள சங்கரி கொலை, பொய், களவு, கள்ளூண், குருநிந்தை ஆகிய பஞ்சமாபாதகங்கள் என்பது மிகவும் பெரியதொரு பாவம் என்றுதான் நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றுக்கெல்லாம் கூடப் பரிகாரமும் கழுவாயும் உண்டு என்கிறது புறநானூறு. வேதத்தில் வல்லவர்களான அந்தணர்களைக் கொல்வது, பெண் கொலை புரிவது , குழந்தைகளை அழிப்பது போன்றவைகள் கொடும் பாவம் என்று கருதப்பட்டாலும் இந்தப் பாவங்களையெல்லாம் விடக் கொடுமையானது பொய் சொல்வதுதானாம். பொன்ற வான்அந்தணர் பெண் புதல்வரைக் கொன்ற பாதகத்தில் கொடும் பொய் என்பது செஞ்சடை வேதிய தேசிகர் ... Full story

“ வழுக்கை “

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன் முடிமாற்று சிகிச்சையின் பலனாய் உயிரிழந்தவர் ஒரு மருத்துவர் என்று வழுக்கை விழுந்த யாரோ ஒருவர் தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு அறிவாளிகளுக்கு வழுக்கை விழும் என்று சொன்னதை நம்பி வழுக்கை விழுந்த பலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் ( இளநீருக்கும் வழுக்கை உண்டு ) நம் தலையில் வழுக்கை விழக் காரணம் அறிவை உபயோகப்படுத்துவது அல்ல ஏனென்றால் நமக்கிருக்கும் அறிவில் இரண்டு சதவிகதம் கூட நாம் இன்னும் உபயோகிக்கவில்லை என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஆகவே அதிகமான உபயோகத்தால் தலை சூடாகி ... Full story
Page 5 of 54« First...34567...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.