Archive for the ‘பொது’ Category

Page 52 of 52« First...102030...4849505152

கவிதை நூல்கள் திறனாய்வுக் கூட்டம்

வசுமித்ர -ஆதிரன் ஆகியோர் எழுதிய ’கள்ளக்காதல்’, வசுமித்ர எழுதிய ’ஆகவே நீஙகள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’ என்ற கவிதை நூல்களின் திறனாய்வுக் கூட்டம், சென்னையில் 2010 ஜூலை 20ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற உள்ளது. திறனாய்வுக்கு உரிய நூல்கள்: ’கள்ளக்காதல்’ - (வசுமித்ர -ஆதிரன்) ’ஆகவே நீஙகள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன’ (வசுமித்ர) நாள் : 20 ஜூலை 2010, செவ்வாய் நேரம் : மாலை 6 மணி இடம்: ... Full story

கவிதைப் பட்டறையில் பங்கேற்க வாரீர்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தஞ்சாவூரில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையமும் இணைந்து கவிதைப் பட்டறை ஒன்றை நடத்த உள்ளன. அது தொடர்பான  செய்திக் குறிப்பு வருமாறு: நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? ஏதாவது வலைத்தளத்தின் இலக்கியப் பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து கவிதை பட்டறை ஒன்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடக ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 2

பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி: தேவ் எழுப்பிய கேள்விகள்: 1. தமிழ்ச் சொற்களுக்கான வேர்களின் தொகுப்பு தனியாக இருக்கிறதா? 2. இந்தச் சொல்லுக்கு இதுதான் வேர் என்று கணடறிவது எப்படி? 3. தற்சமம், தற்பவச் சொற்களின் தொகுப்பு தனியாக வெளியிடப்பட்டுள்ளதா? 4. திருவாளர்கள் அருளி, தேவநேயர் போன்றோர் தொகுத்த வேர்ச்சொல் அகராதி இலக்கண முறைப்படி அமைந்ததுதானா? 5. இவர்களுக்குமுன் அறிஞர்கள் இத்தகைய முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை? 6. தமிழில் பிராகிருதம், பாலி மொழிகளின் பாதிப்பு உண்டா? பேராசிரியர் ... Full story

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 1

பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்கள், தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குப் பதில் அளிக்க இசைந்துள்ளார் என வல்லமை இதழில் அறிவித்திருந்தோம். அதன்படி வந்த கேள்விகள் சிலவற்றுக்குப் பேராசிரியர் பதில் அளித்துள்ளார். அவை இங்கே: Full story

‘பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு’ நூல் வெளியீட்டு விழா

காந்தளகம் பதிப்பித்துள்ள, ஒலியியல் பேராசிரியர் புனல் க. முருகையன் அவர்களின் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா, சென்னையில் 2010 ஜூன் 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் அமைந்துள்ள பவள விழாக் கலையரங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக, சென்னைப் பல்கலைக்கழக மொழியியல் ஆய்வுப் பிரிவு இயக்குநரும் தமிழ் மொழித் துறைப் பேராசிரியருமான  ந.தெய்வ சுந்தரம் அழைப்புக் கடிதம் அனுப்பியுள்ளார். Full story

கொழும்பு திரைப்பட விழாவில் பங்கேற்காதீர்கள்… -அனைத்து நடிகர்களுக்கும் சீமான் வேண்டுகோள்!

ரஜினி, அமிதாப், கமலுக்கு நன்றி - சீமான் சென்னை: எமது தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தால் நனைந்த இலங்கையில், தமிழர் படுகொலையைக் கொண்டாடும் வகையில் இரக்கமற்று நடத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய நடிகர் - நடிகையர் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறிப் பங்கேற்போருக்கு எதிராக பெரும் போராட்டம் தொடரும்" என்று நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். Full story

சிறுவர்களுக்கு கவ்பாய் தொப்பி அன்பளிப்பு

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில்  - சிம்புதேவன் இயக்கத்தில் – ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்துள்ள ‘இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது நூற்று இருபத்து நான்கு திரையரங்குகளில்..இருபத்தைந்து நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. Full story

சரோஜினி நாயுடு பரிசு – 2010

2010ஆம் ஆண்டுக்கான சரோஜினி நாயுடு பரிசுக்காக, ‘பெண்களும் பஞ்சாயத்து ராஜூம்’ என்ற கருப்பொருளில் அச்சிதழ்களில் வெளியான கட்டுரைகளை, 'தி ஹங்கர் புராஜக்ட்' வரவேற்கிறது. இந்தக் கட்டுரைகள், 2009 ஜூலை 31 முதல்,  2010 ஜூலை 15 வரையான காலத்தில் பிரசுரமாகியிருக்க வேண்டும். இது தொடர்பாக, இந்த அமைப்பின் தமிழ்நாடு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: Full story

பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா

செய்தி மற்றும் படங்கள்: புதுவை எழில், தகவல்: ஆல்பர்ட், அமெரிக்கா. பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா - 12ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்  இனிதே நடைப்பெற்றது இலக்கிய விழா: முத்தமிழ் மன்றமும் 'தமிழ் வாணி' இணையத்தளத் தாளிகையும் சேர்ந்து ஆண்டுதோறும் தமிழ் இலக்கிய விழா நடத்துவது வழக்கம். இவ்விரண்டின் நிறுவனரும் தலைவருமான அடியார்க்கன்பன் கோவிந்தசாமி செயராமன், இந்த ஆண்டும் நடந்தது. சிரமங்கள் இருந்தாலும் சிகரம் தொடும் அளவுக்குச் சிறப்பாகவே நடத்தி முடித்தார். விழா நடந்த இடம்: Maison de l'Inde, 7 (R) Boulevard Jourdon, 75014 PARIS. நாள்: சனிக்கிழமை மதியம் 3 மணி அளவில்  விழா தொடங்கியது. திரு & திருமதி வீரபத்திரன் இணையர் மங்கல விளக்குக்கு ஒளியூட்டினர். 'அகர முதல...' எனத் தொடங்கும் திருக்குறளைத் தம் கணீரென்ற குரலில் கடவுள் வாழ்த்தாகப் பாடிய ஆசிரியர் பி. சின்னப்பா,  தொடர்ந்து,   ''வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே..." என்ற பாவேந்தன் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடினார். (புதுச்சேரி மாநிலத்தில் இந்தப் பாடலைத்தான் தமிழ்த் தாய் வாழ்த்தாகப் பாடுவது மரபு). Full story
Page 52 of 52« First...102030...4849505152
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.