Archive for the ‘நேர்காணல்கள்’ Category

Page 1 of 41234

வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி!

வீரத்தமிழனின் ஏறுதழுவல் ஆதரவுப் பேரணி!
பவள சங்கரி சங்கே முழங்கு.. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு திங்களொடு செழும்பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்க ளோடும் மங்குல் கடல் வற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்,ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் ... Full story

கிரேசி குழுவினரின் நகைச்சுவைத் தூது

கிரேசி குழுவினரின் நகைச்சுவைத் தூது
பவள சங்கரி கூகிளில் கடோத்கஜன் - புத்தம் புதிய நாடக ஆக்கம்!   பொதுவாக நல்லிணக்கத் தூதுக்குழுவினர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று மக்களுடன் கலந்துறவாடி அந்தந்த நாட்டினருடன் ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தையை வளர்க்கும் விதமாக நல்ல இணக்கத்தை ... Full story

தேசிய தமிழ் காவலர்!

தேசிய தமிழ் காவலர்!
பவள சங்கரி சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் - இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது. நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த ... Full story

‘சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை!

'சொல்லின் செல்வரின்’ சமுதாய அக்கறை!
பவள சங்கரி ஈரோடு கொங்கு கலையரங்கில் நேற்று (24/07/2016) சி.கே.கே. அறக்கட்டளை சார்பில், சமுதாய அக்கறை உள்ளதா என்பது குறித்த பட்டி மன்றம் நடந்தது. ‘சொல்லின் செல்வர்’ திரு சுகி.சிவம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடந்த இந்த பட்டி மன்றத்தில் சமுதாய அக்கறை குறைந்துள்ளது என்ற அணியில் பேரா. ராமச்சந்திரன், திரு.மோகனசுந்திரம், பேரா. ... Full story

தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்

தமிழ்த் தேசியவாதியுடன் சிறப்பு நேர்காணல்
பவள சங்கரி தமிழ்த் தேசியவாதி ஐயா திரு பழ.நெடுமாறன் 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் , கி. பழநியப்பனார் மற்றும் பிரமு அம்மையாருக்கும் தவப்புதல்வனாய்ப் பிறந்தவர். இவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றியவர். 1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவர்தம் ... Full story

ஔவை நடராசன் – 81

ஔவை நடராசன் - 81
புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில்,  செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் இங்கே. https://soundcloud.com/annakannan/81a-1   Full story

‘கடலோடி’ நரசய்யா (2)

‘கடலோடி’ நரசய்யா  (2)
பவள சங்கரி நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றியவரும், நம் நாடு சுதந்திரம் பெற்றிருந்த காலகட்டங்களில் பொறுப்பான பதவிகளில் இருந்தவர் மட்டுமல்லாது, ஒரு மீப்பெரும் எழுத்தாளராகவும் இருக்கும் ஒரு ஆளுமையைச் சந்திக்கப்போகிறோம் என்ற பேராவல் உடன்வர பேராசிரியர் நாகராஜன் ஐயா அவர்களும் நான் நரசய்யா ஐயாவை சந்திக்கப்போவது தெரிந்தவுடன் உடன் வருவதாகக் கூறிவிட்டார்கள். அவர்தம் இல்லத்தின் எல்லையைத் தொட்டவுடன் கட்டிடப் பாதுகாவலர், ‘இதோ இந்த வீடுதான். ஐயா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறார்’ என்றார். வீட்டிற்குள் ... Full story

’கடலோடி’ நரசய்யா

’கடலோடி' நரசய்யா
பவள சங்கரி வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். வள்ளுவனார் வழியில் வாழ் அறிவுடையார் இவர் என்பதை இவருடன் சிறிது பொழுதே உரையாடும் எவரும் எளிதில் உணரக்கூடும். நம் இந்தியக் கப்பற்படையில் பணியாற்றிய பெருந்தகை, கடலாய்வறிஞர், வரலாற்றாய்வாளர், சிறந்த கட்டுரையாளர், கதாசிரியர், தேச பக்தர், மனிதாபிமானி என பன்முகங்கள் கொண்ட ஆளுமை இவர். கப்பற் பொறியியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற இவர் ‘நரசய்யா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்பெறும் , ஒரிசா மாநிலத்தின், பெரகாம்பூர் என்னும் இடத்தில் பிறந்தவரான, ... Full story

தேசிய இளைஞர் தினம்!

தேசிய இளைஞர் தினம்!
பவள சங்கரி சுவாமி விவேகானந்தர்  பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள் தமிழ்நாடு தேசிய சிந்தனைக் கழகமும் ரோட்டரேக்ட் சங்கமும் இணைந்து ஈரோடு வேளாளர் கல்லூரியில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு 13.01.2016 அன்று “சுவாமி விவேகானந்தர் பாதையில் இன்றைய இந்திய இளைஞர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில் தேசிய சிந்தனைக் கழகத்தின் சென்னை மாநிலக் குழு உறுப்பினரான திருமிகு இசைக்கவி இரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் ... Full story

நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்!

நிறைகுடமாய் நீண்டதொரு பயணம்!
சாக்லேட் கிருஷ்ணா பவள சங்கரி ‘மார்க்கபந்து... மொதல் சந்து... அடடா பேரு கவிதை மாதிரி இருக்கே’ - வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் , திரு. கிரேசி மோகன் எழுதி, திரு கமல்ஹாசன் பேசிய ஆரம்ப நகைச்சுவை வசனம் இதுதான்.. படம் முழுக்க வயிறு நோக சிரிக்காமல் வெளியில் வர முடியாது! உலகம் முழுவதும் 285 திரையரங்குகளில், சுமார் 400 மில்லியன் இந்திய ரூபாய்களை வசூல் ... Full story

உடலும் , மனமும் இணையும் தருணம்!

உடலும் , மனமும் இணையும் தருணம்!
பவள சங்கரி அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில், கிளப்மெட்ரோ என்ற உடற்பயிற்சி நிலையத்தின் யோகாசனப் பயிற்சியாளர் திருமிகு லிண்டா அவர்களுடன் ஒரு நேர்காணல்! இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் மனமும், உடலும் ஒருசேர அமைதி பெற மிக நல்ல உபாயம் யோகாசனம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை. யோகாசனம் என்பது உடற்பயிற்சி மற்றும் ஆசனங்களைக் குறிப்பது . ... Full story

திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ….

திருமதி செல்லபாப்பா கீரன் அவர்களுடன் ....
பவள சங்கரி இறையருள் பெற்ற பிரபல சொற்பொழிவாளர், உபன்யாசகர், கனீர் என்ற வெண்கலக் குரலுக்குச் சொந்தக்காரர், அமரர் புலவர் கீரன் அவர்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. புலவர் கீரன் அவர்களின் கம்பராமயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம், திருவெம்பாவை போன்ற சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். மடை திறந்த வெள்ளம் போல, தெளிவான, எளிமையான விளக்கங்களுடனான அவருடைய உபன்யாசம் கேட்போரை மெய்மறக்கச் செய்யும் வல்லமை பெற்றவை. அவர்தம் உரையில் பாடல்களுக்கு அழகாகப் பதம் பிரித்து, எளிய நடையில் விளக்கங்களும் அளித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பொழிவாற்றுவார்.... Full story

ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!

ஸ்ரீ ஹரி ஓம் அம்மா!
பவள சங்கரி “துறவியரில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் காமத்தையும் செல்வத்தையும் துறந்துவிட்ட பிறகும்கூட, பெயர், புகழ் ஆசையால் விலங்கிடப்படுகிறார்கள். மாபெரும் உள்ளங்களுக்கும் கடைசியாக உள்ள பலவீனம் புகழில் உள்ள ஆசை” சுவாமி விவேகானந்தர் நம் இந்தியத் திருநாடே ஆன்மீகம் என்னும் அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட ஒரு மாபெரும் கோட்டை என்பதே உலகறிந்த உண்மை. நம் நாட்டில் மட்டுமே பல மதங்கள், பல இனங்கள், பல தெய்வங்கள், ஒவ்வொன்றிற்கும் ஒருவிதமான தத்துவங்கள், எண்ணற்ற வழிபாட்டு முறைகள் என்று திரும்பிய புறமெல்லாம் ஏதோவொரு ஆன்மீகச் ... Full story

திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடனான நேர்காணல்

திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடனான நேர்காணல்
'With You, Without You' திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ... Full story

வள்ளி தனக்கே குறவர் மலையாட்சி!

வள்ளி தனக்கே குறவர் மலையாட்சி!
பவள சங்கரி 2009 - 2010 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற திருமிகு. விஜயா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல் மதுரை மீனாட்சியம்மை குறம் குமரகுருபரரால் படைக்கப்பட்டது. மீனாட்சியம்மை சொக்கலிங்கப் பெருமான் மீது அன்பில் உறைந்திருந்த போழ்தில் பொதிய மலையில் வாழும் குறத்தி ஒருத்தி குறி சொல்வதாக அமைந்துள்ள பாடல்: அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் குறவனெங்கள் வீட்டிற் கொண்ட வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி... Full story
Page 1 of 41234
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.