Archive for the ‘தலையங்கம்’ Category

Page 1 of 1512345...10...Last »

சென்னை விமான நிலையத்தின் மற்றுமொரு மைல்கல்!

பவள சங்கரி தலையங்கம் விமானம் ஓடு பாதையில் விமானங்கள் 75 முதல் 80 வினாடிகளில் பறந்துவிட வேண்டும் என்றிருந்ததை இனி 70 வினாடிகளுக்குள் பறந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இது மேலும் 60 வினாடிகளாகக் குறைப்பதே நமது விமான நிலையத்தின் குறிக்கோளாக உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரு மணிக்கு 32 விமானங்கள் என்று இருப்பதை இனி ஒரு மணிக்கு 36 விமானங்கள் பறகும். இது நமது சென்னை விமான நிலையத்தின் பொருளாதார வளர்ச்சியையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதாக உள்ளது. விமானத்தில் நுழைவதற்கு இருக்கை எண்ணுடன் ... Full story

பொருளாதார மாற்றங்களால் இன்றைய நிலை

பவள சங்கரி தலையங்கம் உயர்மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு புதிய வரிவிதிப்பு கொள்கை, ஜி.எஸ்.டி. அறிமுகம் தினசரி பெட்ரோலியப்பொருட்களின் விலைவிதிப்பு, வங்கிகளுக்கு வானளாவிய அதிகாரங்கள் என பொருளாதார மாற்றங்களை நடுவண் அரசு பெருமளவில் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்களால் அரசிற்கோ அல்லது பொது மக்களுக்கோ, அல்லது அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கோ எந்த அளவில் பயன் ஏற்பட்டுள்ளது? இந்த மாற்றங்களால் அரசின் வரி வருமானம் அதிகரித்துள்ளது என்பதில் ஐயமில்லை. கடந்த சூலை மாதத்தில் 70 சதவிகித கணக்குகள் மூலமாகவே உரூ 90,000 கோடி ... Full story

முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா?

பவள சங்கரி தலையங்கம் முதியோர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது நியாயமா? தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதற்காக முதியோர் சிறுசேமிப்பு செய்த பணத்தை டெபாசிட் செய்கிறவர்களின் தலையில் கை வைப்பது நியாயமா? முதியோரின் மன நிலையை ஆட்சியாளர்கள் அவசியம் உணர வேண்டும்.. இறுதிக் காலத்தில் யாரிடமும், பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும், கையேந்தாமல் தன்னிறைவு பெறவேண்டும் என்ற முனைப்பில் அரும்பாடுபட்டு சேமித்து வைத்து அதை அரசு வங்கிகளை மட்டும் நம்பி வைப்புத்தொகையாக வைத்து, வட்டியை மட்டும் வாங்கி செலவு செய்துகொண்டிருக்கும் முதியவர்களின் நிலை ... Full story

ஏவுகணைகள் – சிஏஜி அறிக்கை

பவள சங்கரி தலையங்கம் சிஏஜி யின் அறிக்கையின்படி நமது ஏவுகணைகள் எட்டுவித காரணங்களால் தரம் தாழ்ந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகளைக்கொண்டு சீனாவோடு போர் மூண்டால் அதிக காலம் போரில் நிலைத்து நிற்பது சிரமம் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இன்று பாகிசுதானில் அந்நாட்டு பிரதமர் தவறு செய்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டு பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளதோடு இனி வாழ்நாள் முழுவதும் அரசு மற்றும் அரசியலில் பங்குகொள்ள இயலாதவாறு செயல்படுத்தப்படுகிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரை குறுகிய காலம் நிர்ணயிக்கப்பட்டு ... Full story

வளமான பாரதம் எப்போது?

பவள சங்கரி தலையங்கம் இந்தியாவில் 89% அதிகப்படியான மழையோ, பெய்யவேண்டிய அளவான மழையோ பெய்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 600 பேர் பெரும்மழையினால் உயிரிழந்துள்ளனர். இரண்டு இலட்சத்து இருபதினாயிரம் மக்கள் தங்கும் வீடுகள் இழந்து பாதுகாப்புப் பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அசாமில் மட்டும் 1 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். வடக்கே கங்கை, பிரம்மபுத்ரா ஆகிய நதிகளிலும் பெரும் வெள்ளம். இந்த வெள்ளம் ஒரிசாவையே புரட்டிப் போட்டுள்ளது. குஜராத் மக்களும் தாங்கொணாத் துயரில் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் குடி நீர் கூட இல்லாமல் மக்கள் அல்லலுற்று ... Full story

மீண்டும் முதல்வராகிறார்!

பவள சங்கரி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பிரதமர் அவரைப்பாராட்டி தமது சுற்றுரையில் இனி ஊழலை ஒழிப்பதில் இருவரும் இணைந்து பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்! நிதிஷ்குமார் மீண்டும் பீகார் மாநில முதல்வராக உறுதிமொழி எடுக்கிறார். பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சுசில் மோடி அவர்கள் துணை முதல்வராகிறார். நடு இரவில் ஆளுநரைச் சந்தித்து நிதிஷ்குமார் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்குமாறு கோரினார். அவருடைய கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது! Full story

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

பவள சங்கரி பயங்கரவாதிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகளை நீக்கி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் நிதி ஆதாரங்களை முடக்கி வைத்ததை இரத்து செய்தும் அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலமாக விடுதலைப் புலிகளின் அமைப்பின் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைத்திருக்கிறது. Full story

2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடா?

பவள சங்கரி தலையங்கம் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் குறைந்து கொண்டு வருகின்றன. மத்திய வங்கி படிப்படியாக 2000 ரூபாயை நிறுத்த முடிவு செய்துள்ளதா என மக்கள் மனதில் ஐயம் தோன்றியுள்ளது. மத்திய வங்கியிலிருந்து மற்ற வங்கிகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவே அனுப்பப்படுவதாக செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இன்று வங்கிகள் அளிக்கக்கூடிய 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் மறு சுழற்சியில் வரக்கூடியவை மட்டுமே. மத்திய அரசின் ஆணைப்படி சேமிப்பு வங்கிக் கணக்குகள், நடப்புக் கணக்குகள் ஆகியவைகளில் ... Full story

பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் அறியாமையா?

பவள சங்கரி நடந்து முடிந்துள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் 99% மேலாக வாக்களித்து நமது பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இவர்களில் 77 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லாத வாக்களித்துள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய விசயம். இந்த 77 உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு 20,000 வாக்குகள். இந்த 20,000 வாக்குகள் என்பது பல இலட்சம் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் கேலி செய்யும் விதமாகவே உள்ளது. தங்களுடைய முதலாவது, இரண்டாவது விருப்ப வாக்குகளை பதிவு செய்யாது இருந்தாலே அந்த வாக்குகள் செல்லாத ... Full story

சொந்தமண் இழந்தும் நம்பிக்கை இழக்கவில்லை!

பவள சங்கரி தலையங்கம் வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு தமிழ் ஈழம் இழந்து 10 ஆண்டுகளுக்கு முன் தாயகத்திற்கு அகதிகளாக வந்து, சென்னை, ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தும், அல்லது அங்கிருந்து வெளியே வந்து தங்கியிருந்தும் கல்வி ஒன்றே தங்கள் நிலையான எதிர்காலம் என்பதை உணர்ந்துகொண்டு மிகச்சிறந்த முறையில் 10 ஆம் வகுப்பில் 92%, 12ஆம் வகுப்பில் 95%, குறிப்பாக பெண்கள் அதிகளவில் வெற்றி பெற்றும், இளநிலை பட்ட வகுப்பில் 500 பேருக்கு மேல் தேர்ச்சி ... Full story

ஜவுளித் துறையின் அவல நிலை..

பவள சங்கரி தலையங்கம் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தக்கூடியதும், ஏற்றுமதி, உள்நாட்டு சந்தை போன்றவைகளால் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெருமளவில் உறுதுணையாக இருக்கக்கூடியதுமான ஜவுளித்துறைக்கு பாதகம் ஏற்படும் வகையில் 70 ஆண்டுகளாக இல்லாத வரி விதிப்பை தவிர்த்து பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற அரசு வழி வகுக்கவேண்டியது அவசியம். ஜவுளித் துறையினர், அனைத்திந்திய அளவில் போராட்டங்கள் நடத்தி வரும் இந்த மூன்று நாட்களில் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், பொருளாதார இழப்பும் சந்தித்துள்ளனர் என்பது வேதனையான செய்தி. நமது ... Full story

இலவசங்களால் தள்ளாடும் தமிழ்நாட்டின் பொருளாதாரம்!

பவள சங்கரி தலையங்கம் 2006இல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதல்வர் திரு. கருணாநிதி அவர்களால், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், அரிசி போன்றவைகள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட இலவசங்கள் ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்ந்து கொண்டிருந்தன. இதனால் இன்று தமிழகத்தின் கடன் சுமை 2.56 இலட்சம் கோடியாக ஆகியுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது அதிர்ச்சியான செய்தி. தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் கல்வியறிவு பெற்றவர்கள் 80.09% . அதாவது அனைத்திந்திய அளவில் 16வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இவ்வளவு இலவசங்கள் வழங்கியும் 21.2% மக்கள் அதாவது மொத்த ... Full story

நீட் தேர்வு!

பவள சங்கரி தலையங்கம் நீட் தேர்வில் தமிழகத்திலிருந்து 80,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் 15,000 மாணவர்கள். இதில் அதிக மதிப்பெண்களைப்பெற்ற 25 மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழ் மாணவர்கூட இடம் பெறவில்லை. நமது அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவைச் சார்ந்த மாணவர்கள் 8 இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்த மதிப்பெண்களில் நமது தமிழக மாணவர்கள் சராசரியாக 50% மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளனர் என்பது வருத்தமான செய்தி. நேற்று சட்டசபையில், ... Full story

பொறியியல் மாணவர்களுக்கு நல்ல செய்தி!

பவள சங்கரி தலையங்கம் 30 சதவிகிதத்திற்குக் குறைவாக தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் மாணவர்களை தேர்ச்சியடையச் செய்யத் தவறும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று AICTE தலைவர் அறிவித்துள்ளார். பொறியியல் கல்லூரியில் பணியில் அமர்பவர்கள் 4 மாத பயிற்சியில் தேர்ச்சியடைய வேண்டியது அவசியம். இல்லையென்றால் கல்லூரிப் பணியில் அமர முடியாது! Full story

பொறியியல் கல்லூரிகளின் இன்றைய நிலையும் பரிதாபமான மாணவர்களும்!

பவள சங்கரி தலையங்கம் தமிழ் நாட்டில் மொத்தம் இருப்பது 535 பொறியியல் கல்லூரிகள். மருத்துவப் படிப்பிற்கு அடுத்ததாக பொறியியல் வல்லுநர் ஆவதே இன்றைய சமுதாயத்தின் பெருங்கனவாக உள்ள நிலையில் பெரும்பாலான கல்லூரிகள் வணிக நோக்கில் மட்டுமே செயல்படுவது வருத்தமளிக்கக்கூடியது. தேர்வுகளில் மொத்த கல்லூரி மாணவர்களில் ஒருவரைக்கூட வெற்றி பெற வைக்க இயலாத பொறியியல் கல்லூரிகளை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது? (தமிழ்நாட்டில் தற்போது இரண்டு கல்லூரிகள் இந்த மோசமான நிலையில் உள்ளன) கல்லூரியின் மொத்த மாணவர்களில், ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டும் தேர்வில் ... Full story
Page 1 of 1512345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.