Archive for the ‘இலக்கியம்’ Category

Page 1 of 53312345...102030...Last »

காதலதிகாரம் (1)

காதலதிகாரம் (1)
விவேக் பாரதி Full story

நலம் .. நலமறிய ஆவல் (61)

நலம் .. நலமறிய ஆவல் (61)
நிர்மலா ராகவன் நீங்கள் குதர்க்கவாதியா? `குதர்க்கம்!’ யாராவது உங்களை இப்படிப் ழித்திருக்கிறார்களா? பெருமைப்படுங்கள்! நீங்கள் சுயமாகச் சிந்திக்கிறீர்கள். உங்களுக்குக் கற்பனைத்திறன் அதிகம் என்பதைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் தனித்திறமையைக் காட்ட வரைவது, எழுதுவது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட ஆரம்பிக்கவில்லையா இன்னும்? ஒருவர் எப்போது எழுத்தாளனாக ஆசைப்படுகிறார் என்றால், பிறரது எழுத்தை நிறையப் படித்தபின், `இதைவிட நன்றாக என்னால் ... Full story

நீயிருப்பதால்

நீயிருப்பதால்
விவேக் பாரதி நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன் ! நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன் ! தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் ! திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய் ! பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய் ! தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய் ! தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய் ! நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய் ! ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய் ... Full story

கற்றல் ஒரு ஆற்றல் -83

கற்றல் ஒரு ஆற்றல் -83
க. பாலசுப்பிரமணியன்  வகுப்பறைகளில் கற்றலின் வேறுபட்ட முறைகளின் பாதிப்புக்கள் பார்வைகளின் உந்துதல்களால்(visual inputs)ஏற்படும் கற்றல் மற்றும் செவி, செயல் சார்ந்த  (auditory and kinesthetic ) உணர்வுகளின் உந்துதல்களால் ஏற்படும் கற்றல் திறன்கள் அநேகமாக அனைவருக்குமே உண்டு. ஆயின், சிலருக்கு ஒரு குறிப்பிட்ட முறையின் அதிகபட்ச தாக்கம் இருக்க வாய்ப்புக்கள் உண்டு. இத்தகைய அதிக பட்சத் தாக்குதல்களால் மற்ற ... Full story

குறளின் கதிர்களாய்…(172)

செண்பக ஜெகதீசன்     அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்                                          வழுக்கியுங் கேடீன் பது.        -திருக்குறள் -165(அழுக்காறாமை)   புதுக் கவிதையில்...   பகையென தனியே வேண்டாம், பொறாமை குணம் கொண்டவர்க்கு.. அதுவே பகையாகி அழித்திடும் அவரை...!   குறும்பாவில்...   பொறாமை குணம் கொண்டோர்    பகையென ஏதுமின்றி,     அதுவே பகையாகி அழிவர்...!   மரபுக் கவிதையில்...   மனதில் பொறாமை கொண்டவரை      முழுதாய் அழித்தே ஒழித்திடத்தான்... Full story

இன்றைய கோப்பு: [3]

இன்றைய கோப்பு: [3]
இன்னம்பூரான் ஜூன் 25, 2017 ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் முதல் பகுதி: “தனிமனிதன் இன்புறவேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்கவேண்டும். சமுதாயம் பழங்காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்கவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு ... Full story

இவ்வார வல்லமையாளர்

இவ்வார வல்லமையாளர்
இவ்வார வல்லமையாளர்- விஷ்வேச தீர்த்த ஸ்வாமி உடுப்பியில் உள்ள புகழ் பெற்ற கண்ணன் ஆலயத்தில் திருகோயில் சார்பில் இஸ்லாமிய சமூகத்தினர்க்கு இப்தார் விருந்தளித்து மதங்களுக்கிடையேயான சகோதரத்துவம் நிலைநாட்டபட்டது. இந்த நிகழ்வுக்கு ஆலோசனை அளித்து, நடக்க தூண்டுதலாக இருந்தவர் பார்யாய பேஜாவர் மடத்தின் தலைவரான விஷ்வேச தீர்த்த் ஸ்வாமிகள் ஆவார் சுமார் 1500 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். மாலை 6.59 மணி அளவில் தன் நோன்பை முறித்த பின் வாழைப்பழம், ஆப்பிள், பேரிச்சை ஆகிய உணவுகளுடன் கஷாயமும் வழங்கபட்டன. நிகழ்வில் உரையாற்றிய விஷ்வேச தீர்த்த ஸ்வாமிகள் "கர்நாடகாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரதன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும்" என வேண்டுகோள் ... Full story

கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன்
விவேக பாரதி    கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து....இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்.... வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ? வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ? ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ? ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ? ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல, ... Full story

நாளையென்ன நாளை

  நாளையென்ன நாளையைய்யா வரதராஜா ! - உன் . நல்லருளை இன்றனுப்பு வரதராஜா ! நீளுகின்ற காத்திருப்பு போதும்ராஜா - உன் . நிர்மலக்க ழல்காட்சி சிந்துராஜா ! தோளிலென்னை வேஷபாரம் தாக்குகின்றதே - மனம் . தோற்றபடி வெந்தழுது வீங்குகின்றதே ஆளுமாக பாதஜாலம் காட்டுராஜா - அட . அம்பிகையின் சோதரனே வரதராஜா ! காலமென்னை ஆட்டுவிக்கக் கண்டிருப்பதோ - உன் . ... Full story

காலமெலாம் வாழுகிறாய்

காலமெலாம் வாழுகிறாய்
  எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் அவுஸ்த்திரேலியா  எங்கள்கவி கண்ணதாச என்றும்நீ வாழுகிறாய் தங்கநிகர் கவிதந்த தமிழ்க்கவியே நீதானே தங்கிநிற்கும் வகையினிலே தரமிக்க கவிதைதந்து எங்களுக்கு அளித்தவுன்னை எம்மிதயம் மறந்திடுமா பொங்கிவரும் கடலலைபோல் புதுப்புதிதாய் பாட்டெழுதி எங்கும்புகழ் பரப்பியதை எம்மிதயம் நினைக்கிறதே... Full story

காலத்தால் அழியாக் கவிஞன்

காலத்தால் அழியாக் கவிஞன்
சக்திசக்திதாசன் ஜூன் 24 எப்படி தன்னைப் பெருமையாக்கிக் கொண்டது ? இந்த தினத்தில் எத்தனையோ நிகழ்வுகள் நடந்தேறியிருக்கலாம். . எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருக்கலாம் அன்றி இறந்திருக்கலாம். ஆனால் இத்திகதி தமிழர்கள் அனைவரையும் தன்பால் இழுக்க வைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வுக்கு வித்திட்டது. ஆம் தாய்த்தமிழகம் என நாம் போற்றும் தமிழ்நாட்டில் சிறுகூடல் பட்டியில், மலையரசித் தாயின்மடியில் முத்தாக ஒரு முத்தையாவை தமிழன்னை விசாலாட்சி எனும் ... Full story

பந்தயம்

நிர்மலா ராகவன் அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன. தோரணங்கள் என்ன, மேடையைச் சுற்றி வண்ண வண்ண விளக்குகள் என்ன என்று, கல்யாணக்கோலத்தில் இருந்தது மண்டபம். இருபதுக்குக் குறையாத வாத்தியங்கள் அன்று நிகழப்போகும் பாடல் போட்டியின் இறுதிச் சுற்றுக்குக் கட்டியம் கூறிக்கொண்டிருந்தன. அந்த மேடைமேல் தானும் இருக்கப்போகிறோம்! கடந்த வாரம்வரை ஓர் இன்பக் கனவென அதை ஆவலுடன் எதிர்பார்த்து வந்தவருக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. அருகிலிருந்த இருக்கையைப் பிடித்துக்கொண்டு ... Full story

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (240)

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (240)
சக்திசக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் இவ்வாரம் உங்களை இம்மடல் மூலம் வந்தடைவதில் மகிழ்கிறேன்.. இங்கிலாந்து நாட்டினை வெப்பாலை கடந்த சில நாட்களாக தகிக்கப் பண்ணிக் கொண்டிருக்கிறது. என்னடா இது ? இங்கே சுட்டுப் பொசுக்கும் வெப்பத்தில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு இங்கிலாந்தின் வெப்பத்தைப் பற்றி இதென்ன புதுக்கதை ! என்று அங்கலாய்ப்பது புரிகிறது. ஆனால் இங்கிலாந்து நாட்டின் சாதாரண காலநிலைகளையும், வெப்பச்சூழலையும் பொறுத்த அளவில் இது அசாதாரணமானதுவே. .நேற்றைய வெப்பநிலை வெப்பமானியில் அதியுச்சமாக 34 பாகைகளை எட்டிப்பிடித்தது./ இது இங்கிலாந்தின் ஜூன் மாத அதியுச்ச ... Full story

காலப் பெண்ணே

தில்லித் துருகர்செய்த வழக்கமடி" மற்றும் "மன்னர் குலத்தினிடை பிறந்தவளை" என்ற பாரதி பாட்டின் சந்தமெட்டு ! என்னை அலையவைத்துச் சிரிப்பதென்ன - அடி எங்குந் திகழ்கின்ற காலப்பெண்ணே ! உன்னைப் புகழ்வதன்றி இந்தச்சிறுவன் - எழில் ஊறுஞ் சொல்வேறு சொல்லியதுண்டோ ? மின்ன லெனப்போகும் காலப்பெண்ணே ! - எனை மீட்டி இயக்கிடுவை காலப்பெண்ணே ! சின்னஞ் சிறுவனென நானிருப்பதால் ... Full story

சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (7)

சிறுவர் இலக்கியம் படைப்பது எப்படி? (7)
பவள சங்கரி குழந்தைகளைச் சுண்டியிழுக்கும் முதற்கதை : வண்ணமயமான படங்களுடன் அதிசய மனிதர்களும், மிருகங்களும், இயற்கைக் காட்சிகளும் குழந்தைகளை குதூகலம் கொள்ளச்செய்கின்றன. ஜீபூம்பா கதை, அரக்கனின் அச்சமூட்டல்கள், குட்டிச்சாத்தானின் குறும்புகள், இவையனைத்திலிருந்தும் குட்டிகளைக் காக்கும் கதாநாயகனின் சாகசங்கள் போன்றவைகள் குழந்தைகளை ஆச்சரியத்தில் கண்கள் மலரச்செய்கின்றன. கற்பனைப் பாத்திரங்களை உற்ற தோழனாகக் கருதுகின்றனர். பெற்றவர்களை விட்டுச்சென்று தனியே ... Full story
Page 1 of 53312345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.