Archive for the ‘newsletter’ Category

சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்

சென்னையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம்
-முனைவர் மு. இளங்கோவன்   தனித்தமிழ் இயக்கத்திற்கு அறிஞர்களின் பங்களிப்பு என்னும் தலைப்பில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஆய்வரங்கம் சென்னை, நீலாங்கரையில் 06.11.2016 (ஞாயிறு) காலை 10 மணிமுதல் மாலை வரை நடைபெறுகின்றது. திரு. இ. பி. கனகசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கவும், பாவலர் இரா. தேவதாசு அவர்கள் முன்னிலையுரையாற்றவும் பாவலர் செவ்வியன் அவர்கள் வரவேற்புரையாற்றவும் உள்ளனர். காலை 10 மணிக்கு அமையும் முதல் அமர்வில் மறைமலையடிகளாரின் தனித்தமிழ் ... Full story

நாள் முழுவதும் உணர்ந்து ஓதுவோர் உலகெலாம்!

நாள் முழுவதும் உணர்ந்து ஓதுவோர் உலகெலாம்!
மறவன்புலவு க. சச்சிதானந்தன் நாள்மாறும் நெடுங்கோட்டுக்குக் (180 பாகை கி.) கிழக்கே அவாய்த் தீவு. அங்கே நாள் நேற்று. நாள்மாறும் நெடுங்கோட்டுக்குக் கிழக்கே பிசித் தீவு. அங்கு நாள் இன்று. பிசித் தீவில் (17.42 பாகை தெ. / 178.30 பாகை கி.) தென் இந்திய ஐக்கிய சன்மார்க்க சங்கத்தினர் கட்டி எழுப்பிய அழகிய முருகன் கோயில். வானோங்கும் வாயில் கோபுரம். காலை 0600 மணிக்கு ... Full story

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!

அறிவார்ந்த தேடல் அற்ற சூழலின் இன்னொரு பரிமாணம்!
நினைவுகளின் சுவட்டில் (34) வெங்கட் சாமிநாதன் புர்லாவுக்கு வந்த பிறகு (1951) தான் தினசரி பத்திரிக்கை படிப்பது என்ற பழக்கம் ஏற்பட்டது. அதாவது ஆங்கில தினசரிப் பத்திரிக்கை. தினசரிப் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் கும்பகோணத்திலேயே, மகாமகக் குளத்தெருவில் குடியிருந்து படித்த காலத்தில் ஆரம்பித்தது என்றாலும் அது பக்கத்துத் தெருவில் இருந்த திராவிட கழக ரீடிங் ரூமுக்குப் பத்திரிக்கைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து தொடங்கியது. அது திராவிட கழகப் பத்திரிக்கைகளுக்கிடையே கிடந்த விடுதலையையும் படிக்கத் தொடங்கியதிலிருந்து ஏற்பட்ட பழக்கம். திராவிட ... Full story

வழி காட்டும் ஜோதிடம்

வழி காட்டும் ஜோதிடம்
காயத்ரி பாலசுப்ரமணியன்    வேதத்தின் அங்கமாகக் கருதப்படும் ஜோதிடம் ஒரு வழிகாட்டும்  கலையாகும். இதனுடன் ஆன்மீகம் சேரும் போது, அது மேலும் பொலிவு பெற்று, பலவிதங்களிலும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளது.  ஆதலால்தான் ஆய கலைகள் அறுபத்து நான்கில், ஜோதிடமும் சேர்க்கப் பட்டுள்ளது. வாழ்வை வளம் பெறச் செய்யும் ஜோதிடத்தில் பல பிரிவுகள் உண்டு. அவற்றைப் பற்றி நாம்  தெரிந்து கொள்வோம். கணிதம்: இது பெரும்பாலும், ஜாதகத்தோடு தொடர்பு கொண்டு, ... Full story

இரத்த நாளங்களில் அடைப்பு

இரத்த நாளங்களில் அடைப்பு
இருதய மருத்துவம் சார்ந்த கேள்வி - பதில் இருதய நோய் வல்லுநர் - டாக்டர். ஸ்ரீதர் ரத்தினம் மதுசூதனன் - சென்னை. ஹலோ டாக்டர் இரத்த நாளங்களில் (blood vessels) 60% அடைப்பு இருந்தாலும் ஆப்பரேஷன்(operation) அவசியமா?இல்லை மருந்து மாத்திரையிலேயும் டயட்டிலேயும் சரி பண்ணிவிடலாமா? இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. நான் முன்பே கூறியதுபோல் மற்ற முக்கிய ... Full story

பாரதில் மாகவி பாரதி உதித்த தினம்

பாரதில் மாகவி பாரதி உதித்த தினம்
சக்தி சக்திதாசன்============================தரணியில் நீ பிறந்தநாள்தாய் எந்தன் தமிழ்தங்கமாய் ஜொலித்த் நாள்இல்லை உனக்கு செல்வம் ஒன்றும்இருந்தும் சிங்கமென‌இனிய தமிழில் கர்ஜித்தாயே !எத்தனை துயர் கண்டாய்எமதினிய பாரதியே !அத்தனை கணங்களையும்அன்னைத் தமிழ் பாடிஅரவணைத்துக் கொண்ட‌அரிய எம் தமிழ் ஆழி நீவருடங்கள் தோறும் தவறாமல்வந்தேகும் ஜயன் உனக்குப் பிறந்தநாள்வாழும் தமிழ் அன்னை சொந்தங்கள்வகுத்தொட்டோமா ... Full story

கரித்துண்டினால் ஓவியம்!

கரித்துண்டினால் ஓவியம்!
ஓவியர் திரு சங்கர நாராயணன்- சங்கருடன் நேர்காணல். விஜய திருவேங்கடம் கரித் துண்டினால் ஓவியம் என்பது கற்கால விடயமாக இருந்து, அவ்வப்போது, ஆங்காங்கே, அகன்ற வீதிகளில் அல்லது கடற்கரையோரம், ஏதேனும் ஓர் ஏழை ஓவியன் தெய்வத் திருவுருவங்களை கரித்துண்டினால்வரைந்திருப்பது வழிப்போக்கர் பலரையும் கவர்ந்திருக்கலாம். இவ்வாண்டு அறிஞர் மு வ வின் நூற்றாண்டு என்பதால் அவரது புதினம் "கரித்துண்டு" நினைவிற்கு வரலாம். பென்சிலால் வரையப்படும் ஓவியம் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் முடிந்து போன விடயமாகக் கருதப் படலாம்.... Full story

ஓவியர் திரு சங்கர நாராயணன்- சங்கரின் கரித்துண்டு ஓவியங்கள்

ஓவியர் திரு சங்கர  நாராயணன்- சங்கரின் கரித்துண்டு ஓவியங்கள்
 சத்திராஜூ சங்கரநாயணன்     அண்ணாதுரை அப்துல்கலாம் எம்.எஸ்.சுப்புலட்சுமிதிருவள்ளுவர்பாபுபானுமதி... Full story

நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்(பகுதி-3)

நும்மினுஞ் சிறந்தது நுவ்வை ஆகும்(பகுதி-3)
தி.சுபாஷிணி வசந்தவல்லி என்று ஒரு இளம் நங்கை, வழக்கம் போலப் பந்தாட வருகிறார். பந்தாடவும் செய்கிறார். ஆட்டம் விறுவிறுப்பாக நடக்கிறது. அங்கு அக்கூட்டம் ஆரவாரமாய் வருகிறது. குற்றாலநாதன் வசந்தவல்லியை ஆசையோடு பார்க்க வருவது போல் பவனி வருகின்றான். முதலில் வசந்தவல்லி கவனிக்கவில்லை.ஆட்டத்திலேயே நோக்கமாய் இருந்தவர்,திடீரென்று எப்படியோ குற்றாலநாதரைப் பார்த்து விட்டார். அவ்வளவுதான். குற்றால நாதரின் எடுப்பும், தோரணையும், மிடுக்கும், ஒய்யாரமும் உருக்கி விட்டன வசந்த வல்லியை. அவளால் நிலைகொண்டு நிற்க முடியவில்லை. இவளைக் கண்ட ... Full story

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் – பகுதி (2)

சட்டத்தின் வட்டத்துள் வாழ்வாங்கு வாழ்வோம் - பகுதி (2)
முனைவர். நாக பூஷணம் சென்ற முறை சட்டத்தின் பல பிரிவுகள் குறித்துப் பார்த்தோம். இம்முறை குழந்தைகள் நலம் பேண என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் இருக்கின்றன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்". சமுதாய உயர்வு தாழ்வு , ஆண் , பெண் என்ற வேறுபாடு , சிறார் முதியோர் என எந்த வகையான பாகுபாடும் சட்டத்திற்கு இல்லை. சட்டத்தின் வரம்பிற்குள் வாழ்வோருக்கு அதன் பாதுகாப்பும் , ... Full story

தமிழ் – கிரந்தம் – சீயமொழிகளில் திருமுறை

தமிழ் – கிரந்தம் – சீயமொழிகளில் திருமுறை
மறவன்புலவு க. சச்சிதானந்தன் சாலைகளில், மருத்துவ மனைகளில், தொடர்வண்டி நிலையங்களில், வானூர்தி நிலையங்களில், படங்கள் செய்திகளைச் சொல்கின்றன, மக்களை வழிகாட்டுகின்றன. அப்படங்கள் மொழிகளுக்கு அப்பாலானவை. மொழி எல்லைகளைக் கடந்தவை. சீனரின் பட வரிவடிவங்கள், எகிப்தியரின் பட வரிவடிவங்கள், இந்துச் சமவெளியின் பட வரிவடிவங்கள் இத்தைகய இணைப்பு நோக்குக் கொண்டன. வீட்டில், அயலாருடன் எந்த மொழியிலும் பேசலாம், உரையாடலாம். ஒரே மொழியின் வட்டார வழக்கில் பேசலாம் உரையாடலாம். பலர், அதுவும் பல் மொழியாளர் கூடும் இடங்களுக்குப் ... Full story

நிற்பதுவே..பறப்பதுவே!(பகுதி-1)

நிற்பதுவே..பறப்பதுவே!(பகுதி-1)
வி. டில்லிபாபு உலகின் முதல் விமானி பறக்கவேயில்லை. ஏனெனில் வானில் பறந்த முதல் மனிதப் படைப்பு, காற்றாடி.  பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிநாதம் இயற்கை தான் என்றாலும் சில கண்டுபிடிப்புகள் இயற்கையை மிஞ்சுவதும் உண்டு. பறவைகளின் இயங்கு நுட்பங்களை ஆராய்ந்து விமானங்கள் வடிவமைக்கப்பட்டாலும், முதுகு கீழாக விமானங்களால் மட்டுமே பறக்க இயலும். ஓடு பாதைகளுக்கு அருகில் இறைச்சிக் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் அனுமதியில்லை, ஏனெனில் இவைகளின் கழிவுகள், பறவைகளைக் கவர்ந்திழுக்கும். விமானம் ... Full story

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!

தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி 10-ஊ : அதுவா? இதுவா? இரண்டுமா? பேராசிரியர் பெஞ்சமின் லெபோ அப்பாடா... ஒரு வழியாக, இத்துடன் இப்பகுதியை மூட்டை கட்டி விடலாம்.பலரும் பெரு மூச்சு விடுவது கேட்கிறது.... சிலர் சுறுசுறுப்பாக (சுருசுருப்பாக?) விடுவது மகிழ்ச்சிப் பெருமூச்சு!(அப்பாடா, ஆளை விடுங்க!) சிலர் விறுவிறுப்பாக (விருவிருப்பாக ) விடுவது ஏக்கப் பெரு மூச்சு (ஐயோ, இனி தொடராதா?) இத்தொடரைத் தொடங்கியதின் நோக்கம் : இணையதளத்தில் பரவலாகப் ... Full story

உலக வரிவடிவங்களில் தமிழ்

உலக வரிவடிவங்களில் தமிழ்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்தமிழின் 247 வரிவடிவங்களால் மட்டும் தமிழை எழுதுகிறோமா? அவ்வாறு கருதுவோர் பலர். மொழிதல் என்பதால் மொழி. எழுத்து மொழிக்குத் துணை. எழுத்தே மொழியாகுமா? தமிழின் 247 வரிவடிவங்களும் தொடக்க காலத்தில் இருந்தே இன்றுள்ளவாறே உள்ளனவா? ஒலிகள் மாறவில்லை. வரிவடிவங்கள் மாறிவந்தன. உலகெங்கும் பரவிய தமிழர் மொழிதலை மறக்கவில்லை, ஆனால் வரிவடிவங்களை அங்கங்கே மறந்தனர்.நியுசிலாந்து வெலிங்ரன் ... Full story

உலகப்புகழ் புதினங்கள்!

உலகப்புகழ் புதினங்கள்!
நினைவுகளின் சுவட்டில் - (33)  வெங்கட் சாமிநாதன் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட The Great Purges - பற்றி எழுதிக்கொண்டு வரும்போது கம்யூனிஸக் கொள்கைகளால் கவரப்பட்டு பின்னர் ஸ்டாலின் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளிலும், ஸ்டாலினின் கொடூர யதேச்சாதிகாரத்திலும் வெறுப்புற்று வெளியேறியவர்கள் எழுதிய The God that Failed புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்தேன். அதில் சில பெயர்கள் என் மறதியில் விட்டுப் போயின. அதன் பின் எனக்கு ஒரே ஒரு பெயர்தான் நினைவுக்கு வந்தது. ஆர்தர் கெஸ்லர் என்னும் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.