Archive for the ‘நறுக்..துணுக்…’ Category

Page 1 of 1212345...10...Last »

நீல வண்ண அரை நிஜார்

-சேஷாத்ரி பாஸ்கர். பள்ளிக்  காலங்களில் எனக்குச் சீருடையைத் தாண்டி பெரிய துணிமணி ஏதுமில்லை. ஏதோ ஒன்றோ  இரண்டோ தான். அதனைப் போஷிப்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் அந்த நீல வண்ண அரை நிஜாரை மறக்கவே முடியாது. அக்கறை இல்லாமல் தைக்கப்பட்ட ஒன்று. அது காஞ்சி பட்டு அல்ல. ஆனால் கஞ்சி பட்டு அதன் நிறம் வெண் நீலம் ஆயிற்று. நல்ல முறுக்கேறிய பருத்தித் துணி. உடம்பு கீறும் அளவுக்கு அதன் மொரமொரப்பு. பணம் கொடுத்து (நாலணா) இஸ்திரி போட வசதி இல்லை. ஆனால் என் தந்தை ... Full story

பெண் காவலர்கள் படும் பாடு!

-சேஷாத்ரி பாஸ்கர் சென்ற வாரம் நாரத கான சபாவில் காபி குடிக்கும் போது திடீரென நான்கு பெண் காவலர்கள் வேகமாக வந்து காபி வேண்டும் எனச் சொல்லி அதனை வேகமாகத் தரச் சொன்னார்கள். அவர்கள் அனைவரும் பந்தோபஸ்து வேலைக்காக வந்தவர்கள். ஆளுநர் அந்தப் பக்கம் வருவதாக அறிந்தேன். நடுவில் ஒருவர் அந்தக் காபிக்கு பணமும் கொடுத்துவிட்டார். ஒரு சின்ன பேச்சும் ஒரு குட்டி இளைப்பாறலும் கிடைத்த சந்தோஷம் அவர்கள் முகத்தில். அவர்கள் குடித்துக்கொண்டுடிருந்த போதே திடீரென அவர்கள் மேலதிகாரியின் விசில் சத்தம் கேட்டு எல்லோரும் கடகடவென எழுந்து ... Full story

புவிசார் விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!

பவள சங்கரி இமாலயப் பிரதேசத்தில் 8.5 ரிக்டர் அளவிலும், அதற்கு மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இதன் பாதிப்பு தெற்கு நேபாளம், வடக்கு இமாலயப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று பங்களூரு நேரு புவியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளனர். நமது இசுரோ விண்வெளி ஆய்வுக்கோள் அனுப்பியுள்ள புகைப்படங்களிலிருந்து ஆய்வு செய்து இதனை அறிவித்துள்ளனர். சுமார் 600/700 ஆண்டுகளாக இதுவரை எந்தவிதமான பாதிப்புகளும் இந்தப்பகுதிகளில் ஏற்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை இது என்றும் இதன் பாதிப்பு வெகு விரைவில் தெரியும் என்றும் ... Full story

உலகின் முதல் பெண் பொறியியலாளர்!

உலகின் முதல் பெண் பொறியியலாளர்!
உலகின் முதல் பெண் பொறியியலாளர் எலிசா லியோனிடா சம்பிரியசுவிற்கு இன்று 131 ஆம் பிறந்த நாளைக்கொண்டாடுகிறது கூகிள். யார் இவர்? எலிசா லியோனிடா, உரோமானியரான, 1887 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பிறந்த இவர் உலகின் முதல் பெண் பொறியியலாளர்களில் ஒருவராக வரலாற்றை உருவாக்கியுள்ளவர். தனது 86 வருட வாழ்க்கையில், ஆண் ஆதிக்கத்தினால் பெண் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்ட காலகட்டத்தில், புவியியல் ... Full story

மொழிப்புலமை!

பவள சங்கரி   நம் இந்தியாவில், 20 முதல் 24 வயதில் உள்ள, நகரங்களில் வாழும் 52% இளைஞர்கள் 2 மொழிகளில் வல்லமை பெற்றிருக்கின்றனர். 18% பேர் 3 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்கள் என்றும் நகர்ப்புறங்களில் வசிக்கக்கூடிய 50 முதல் 69 வயதுடையவர்கள் சரளமாக 3 மொழிகள் பேசக்கூடியவர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கும் இளைஞர்களில் 22% பேர் 2 மொழிகளிலும், 5% பேர் 3 மொழிகளிலும் புலமை உடையவர்களாக உள்ளதாக தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இளைய சமுதாயத்தில் ஆண், பெண் ... Full story

குணாதிசயங்கள்!

பவள சங்கரி ஒருவரின் பலதரப்பட்ட குணநலன்கள் ஒன்றையொன்று தாமே தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன. கலைவாணர் என்.எசு. கிருட்டிணன் மிகச்சிறந்த நகைச்சுவையாளர் மட்டுமல்ல. ஆகச்சிறந்த சீர்த்திருத்தவாதியும் கூட. அவர்தம் கருத்துகளை வாயளவில் பேசித் திரிபவராக மட்டும் இல்லை. அப்படியே வாழ்ந்தும் காட்டிய நல்லார். ஒரு முறை இவர்தம் நகைச்சுவை கலையுணர்வில் மயங்கிய மகாராசா ஒருவர் அவரை அழைத்து விருந்துபச்சாரம் செய்து மகிழ்வித்ததோடு அவர்தம் திறன்களில் உச்சி குளிர்ந்து அதற்கு வெகுமதியாக, தம்முடைய மாளிகைகளில் ஒன்றை பரிசாகக் கொடுத்திருக்கிறார். கலைவாணர் சர்வ சாதாரணமாக அதை மறுத்திருக்கிறார். மகாராசர் ... Full story

மெய்யியல் ஞானம்!

பவள சங்கரி சைவத் திருமுறை நூல்கள் மொத்தம் 12. அதில் பத்தாம் திருமுறையாக வருவது திருமூலர் எழுதிய திருமந்திரம். 3000 பாடல்களைக் கொண்டது திருமந்திரம். அத்துணையும் நம் வாழ்வியலுக்குத் தேவையான முத்து முத்தான பாடல்கள்! பக்திப்பனுவல் என்ற வகையில் சேர்க்க இயலாத மெய்யியல் ஞானம் அருளும் பதிகங்கள் அனைத்தும். உண்மை நெறியைக் கண்டறியும் தவம் என்றே கூறலாம்! இதோ ஒரு பானை சோற்றின் ஒரு பருக்கை ...... நெறியைப் படைத்தான்; நெருஞ்சில் படைத்தான்! நெறியில் வழுவின் நெருஞ்சில் ... Full story

நல்ல நெறி!

பவள சங்கரி கொம்புஉளதற்கு ஐந்து ; குதிரைக்குப் பத்துமுழம் ; வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே ; வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி (நீதிவெண்பா) (வெம்புகரி = மதயானை வம்புநெறி = தொல்லைமிக்க) கொம்பு உள்ள விலங்குகளை விட்டு ஐந்துமுழம் தூரமும், குதிரையை விட்டுப் பத்து முழம் தூரமும், மதம் மிகுந்த யானையை விட்டு ஆயிரம் முழம் தூரமும் விலகியிருக்க வேண்டும். ஆனால் தீயவர்களின் கண்ணுக்குத் ... Full story

நடுவண் அரசின் சிறப்பான நடவடிக்கை!

பவள சங்கரி மத்திய அரசு மக்கள் நலனுக்காக எடுத்துள்ள சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டுகள்! இதுவரை தங்கம், வெள்ளி போன்ற பொருட்களுக்கு மட்டும் இருந்த தரக்கட்டுப்பாடு சென்ற வெள்ளிக்கிழமை முதல் சேவைத்துறைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாடு தங்கத்திலிருந்து, குடிக்கும் நீர் வரை, தொலைத்தொடர்புத் துறையிலிருந்து, விமானச்சேவை, இணையம் மூலமான வர்த்தகம், மருத்துவ சேவை போன்ற 12 வகையான சேவைகளும் தரக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சுற்றுலா, தங்கும் விடுதி, உணவு விடுதி, போக்குவரத்து, நிதி நிறுவனச் சேவை மற்றும் வழக்கறிஞர் சேவை போன்ற அனைத்தும் இதற்குள் அடங்கும்! Full story

ராஜஸ்தானின் கலைநுட்பம் அமெரிக்காவில்!

ராஜஸ்தானின் கலைநுட்பம் அமெரிக்காவில்!
பவள சங்கரி   இந்திய கலைநுட்பம் அமெரிக்காவில் மிகச்சிறப்பாக பாராட்டைப் பெறும் வகையில் இத்தாலிய மற்றும் ராஜஸ்தான் பளிங்குக் கற்கள் மூலம், அதி அற்புத கலை வேலைப்பாடுகளுடன், நியூஜெர்சி, ராபின்ஸ்வில்லில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சுவாமி நாராயண ஆலயம், இந்திய அமெரிக்க நட்புறவிற்கு ஒரு சிறந்த பாலமாக அமைந்திருக்கிறது. பல நாட்டவர்களும், குறிப்பாக அமெரிக்கர்களும் மிக ... Full story

நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி!

பவள சங்கரி   இதுவரை இலஞ்சம் வாங்கினால் மட்டும் தண்டனை என்று இருந்தது, இனி இலஞ்சம் கொடுப்பவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று பாராளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதெல்லாம் சரிதான் ... இதே சட்டம் வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்கு இலஞ்சமாகக் கொடுப்பதற்கும் பொருந்துமா? ... Full story

வாழ்வியல் ஞானி!

பவள சங்கரி சீனப் பயணி யுவான் சுவாங் நம் இந்தியாவிற்கு வந்த போது, நாட்டு அரசாங்கத்திடமிருந்து எதிர்ப்பு, இயற்கை சீற்றம், வழியில் சாப்பாடு கூட கிடைக்காமல் துவண்ட நிலை இப்படி எத்தனையோ கடும் இன்னல்களைக் கடந்துதான் இந்தியா வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு முறை சில கொள்ளையர் அவரை சிறை பிடித்தனர். அவர்களுக்கு கொள்ளையில் அதிகமான வருமானம் கிடைத்துவிட்டால், துர்கா தேவிக்கு ஒரு ஆண் மகனை பலி கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது. அன்று அப்படி அவர்கள் பலி கொடுக்க வேண்டிய தருணத்தில் இளந்துறவியான ... Full story

நயமான நான்கு மணிகள்!

-மேகலா இராமமூர்த்தி நான்மணிக்கடிகை எனும் தமிழ் நீதிநூல் ஒன்றிருக்கின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாக வைத்தெண்ணப்படும் இது இரத்தினத் துண்டுகள் போல் நான்கு அருமையான நீதிகளைச் சொல்லிச்செல்கிறது. அதனால் பெற்ற காரணப்பெயரே நான்மணிக்கடிகை என்பது. அதிலிருந்து ஓர் அழகிய பாடல்! கொடுப்பின் அசனங் கொடுக்க - விடுப்பின் உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற் கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல்.  ஒருவருக்கு நாம் ஒன்றைக்கொடுக்க விரும்பினால் அவர்கள் வயிறுநிறைய உணவைக் கொடுக்க ... Full story

இராணுவ வீரர்களின் தற்கொலை?

பவள சங்கரி   எல்லைப் புறங்களில் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர்கள், பணியில் இறப்பதைவிட தற்கொலை செய்து இறப்பது அதிகமாக உள்ளதாம். இந்தப்போக்கு 2011இல் 100 பேர் பணியில் இறந்தால், தற்கொலை செய்து இறந்தவர் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. ஆனால் 2016/17 களில் இந்த நிலை பன்மடங்கு அதிகரித்து பணியில் இறப்பவர்கள் எண்ணிக்கை 700 ஆகவும் தற்கொலை செய்து இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக சுமாராக 950 ஆக உள்ளது. இந்த தற்கொலைக்கான காரணங்கள், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் என்று கூறப்படுவது கருத்தில் கொள்ளவேண்டியது. அரசு இந்தப் ... Full story

4,500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி!

  பவள சங்கரி   செருமனியில் உள்ள மாஃக்சு பிளான்க் என்ற அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வன உயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய மொழி சார்ந்த ஆய்வின் முடிவில், தமிழ் உள்ளிட்ட 82 மொழிகளைக் கொண்ட திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்றும் குறிப்பாக தமிழ் மொழி மிகப்பழமையான மொழி என்றும், செழுமையோடு இன்றளவிலும் பயன்பாட்டில் உள்ள மொழி என்றும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சமசுகிருத மொழியும் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் தமிழ் மொழியின் இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் போன்றவைகள் சிதையாமல் உள்ளது ... Full story
Page 1 of 1212345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.