Archive for the ‘மகளிர் தினம் – 2012’ Category

காலங்களில் அவள் வசநதம்!

காலங்களில் அவள்  வசநதம்!
விமலா ரமணி மார்ச் 8 ஆம் தேதி வருகிறது எங்கோ தூக்கிப் போட்டிருந்த சிம்மாசனத்தை எடுத்து தூசு தட்டி பெண்ணைத் தேடி கண்டுபிடித்து அதில் அவளை உட்கார வைத்து மேடை போட்டு பெண்ணியம் பற்றி பேசி நமககு நிறைய வேலைகள் இருக்கின்ற்ன. மகளிர் தினம் காதலர் தினம் அன்னையர் தினம் முதியோர் தினம் என்று நாம் தினங்களைக் கொண்டாடுகிறோம் கொள்கைகளைக் கொண்டாடுகிறோமா? மறுக்கப்பட்ட கல்வி பெண்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட பெண்மைக்கு விடுதலை ஆனால் எது விடுதலை ... Full story

சாதனை அரசிகள்!

சாதனை அரசிகள்!
ராமலஷ்மி தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை தன் வலிமை, அறிவு, திறமை, ஆற்றல் இவற்றை வெளிப்படையாக உலகறிய நீரூபிக்கும் பெண்கள் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். உழைப்பும் முயற்சியும் சேராமல் வெற்றி எளிதாக வாய்த்திடுவதில்லை. போற்றப்படும் எல்லாப் பெண்களின் வெற்றிக்கும் காரணிகளாக அவை இருப்பதை மறுக்கவே முடியாது. சிலருக்குச் சாதகமான சூழல்கள், குடும்பம் மற்றும் நட்புகளின் ஆதரவு, தட்டத் தட்டத் திறக்கும் வாய்ப்புகள் இவற்றால் ஓடும் களம் அதிக மேடு பள்ளங்களற்று அமைகின்றன. சிலருக்கோ முட்களும், ... Full story

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்…

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்...
  இராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையை போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாக கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்றபல நாடுகள் விடுமுறை தினமாக பிரகடனப் ... Full story

பகலின் நீட்சி

பகலின் நீட்சி
  தி. சுபாஷிணி இருபத்து ஐந்து வருடங்களுக்குமுன், இதுபோல் -ஓர் இரவுதான் அதுவும். எந்தச் சூழ்நிலையிலும் நான் பொருந்துவேன் என்று தெளிந்து என்னை அறிந்து என்னைப் பெற்றவர்களிடம் விடை பெற்று, என் வாழ்வின் அடுத்த கட்டமாகிய குடும்ப வாழ்வைத் தொடங்குவதற்குப் புறப்பட்டு வந்தேன். முப்பத்து முப்பது கோடித் தேவர்களும் நட்சத்திரங்களாய் என்னுடன் வந்து வழியனுப்பியதாய் மகிழ்ந்து இருந்தேன். அது உண்மையெனும்படிதான் அன்று நான், ஏன் பல வருடங்கள் கழித்தும் அது பொருள்படா எண்ண ஏற்றம் என்று எண்ணவில்லை. ஆனால் ... Full story

அமெரிக்கப் பெண்களின் நிலை

அமெரிக்கப் பெண்களின் நிலை
நாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்கப் பெண்களின் நிலையையும் இந்த மகளிர் தினத்தன்று பார்ப்போம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என்று பல பெண்கள் குரல் எழுப்பினாலும் அமெரிக்கப் பெண்களுக்கு 1919-ஆம் ஆண்டில்தான் ஓட்டுரிமை கிடைத்தது. அப்போதும் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கவில்லை. ஓரளவாவது படித்திருக்க வேண்டும், சொத்து இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இருந்தன. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் எல்லோருக்கும் ஓட்டுரிமை கிடைக்க பல தசாப்தங்கள் பிடித்தன. அதே மாதிரிச் சொத்து ... Full story

பெண்ணின் பெருமை

பெண்ணின் பெருமை
இன்னம்பூரான் உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘சக்தி’ மகத்தான ஆற்றல் படைத்த பெண் தெய்வம் என்று ஹிந்து மத வழிபாடு தெரிவிக்கிறது. மனித உருவில் அதனுடைய சாதனையை கேளுங்கள். முதல் உலக யுத்தத்தின் போது சோற்று பஞ்சமும், நிம்மதியற்ற வாழ்க்கையும் ரஷ்ய பெண்ணுலகத்தை பெரிதும் பாதித்தது. இன்னலும், கொடுமையும் தாங்கமுடியாமல் பெண்ணினமே போர்க்கோலம் பூண்டது; கொதித்தெழுந்தார்கள்; புரட்சி செய்தார்கள். இது நடந்த தினம்: பிப்ரவரி மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை. (கிரகேரியம் நாட்காட்டி படி, மார்ச் 8, 1917) நாலே நாட்களில் ஜார்ஜ் மன்னன் முடி துறந்தான். புரட்சியில் வாகை சூடி ... Full story

உத்தியோகம் பெண்கள் லட்சணம் – நந்தினி

உத்தியோகம் பெண்கள் லட்சணம் - நந்தினி
மலர் சபா "ஏ மனோ..பேங்க் போயிட்டு வந்துர்றியாப்பா..வீட்டு வாடகை, பால் காசு, மளிகைக் காசு குடுக்கணும்..""இதோ கிளம்பிட்டேம்மா...வேற ஏதும் வாங்கிட்டு வரணுமா.." "அப்பா கண்ணாடி ரிப்பேர்க்குக் குடுத்துருந்தார்..ஒரு எட்டு வாத்தியார் கடைக்குப் போய் அத வாங்கிட்டு வந்துரு..." "ஏன்..திரும்பியும் ரிப்பேரா...ஃப்ரேம் சுத்தமாப் போய்ருச்சும்மா..ரிப்பேர் பண்ணால்லாம் வேலைக்கு ஆவாது...என்ன பெரிசா செலவு ஆய்றப் போது..புதுசு வாங்கச் சொல்லுங்க." "ஆமாண்டா....செலவைக் குறைச்சு உங்க அக்கா சுமையைக் குறைக்கணும்னு பாக்குறேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு கண்ணாடி..இன்னும் ... Full story

மகளிர்தின வாழ்த்து…

மகளிர்தின வாழ்த்து...
    செண்பக ஜெகதீசன் அன்புடன் அழகும் சேர்ந்ததாலே அதனுடன் பண்பும் கலந்ததாலே,பொன்னகை மிஞ்சிடும் புன்னகையும் பூப்போல் மென்மையும் இணைவதாலே,அன்னையாய் அனைத்தும் படைப்பதாலே ஆண்மையின் முகவரி தருவதாலே,என்றுமே தாய்க்குலம் வாழ்கவென இனிய தமிழில் வாழ்த்துவேனே...! படத்திற்கு நன்றி : http://www.hindustantimes.com/photos-news/Photos-Lifestyle/aishwaryaraisbabyshower/Article4-779142.aspx   Full story

உலகோர் உள்ளம் நிறைந்த அன்னை

உலகோர் உள்ளம் நிறைந்த அன்னை
அவ்வை மகள் "பரம்பொருளுக்கு மட்டுமே நான் அடிபணிபவள்; எந்த எஜமானனுக்கும், எந்த விதிக்கும், எந்தச் சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் நான் அடிமை செய்வதில்லை. எனது சித்தமும், எனது வாழ்வும், நான் எனும் சுயமும் பரம்பொருளுக்கு அர்ப்பணமாகி விட்டன. அப்பரம்பொருளின் விருப்பம் அதுதானென்றால், எனது இரத்தம் முழுவதையும் சொட்டுச் சொட்டாய் வழங்க நான் என்னைத் தயார் செய்து கொண்டு விட்டேன். பரம்பொருளின் சேவையில் எந்த ஒன்றும் தியாகமில்லை. அது ஒரு பேரானந்தம்." இது அன்னை ... Full story

கலக்கும் பெண்கள், கலங்கும் கண்கள்

கலக்கும் பெண்கள், கலங்கும் கண்கள்
காயத்ரி பாலசுப்ரமணியன் இன்று பெண்கள் கால் பதிக்காத துறை என்று எதுவுமே இல்லை எனலாம். விமானம் ஓட்டுவது முதல், அகழ்வாராய்ச்சி வரை எல்லாவற்றிலும், பெண்கள் சாதனை படைக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். அதற்காகப் பாடுபடுவதோடு அதற்குரிய புகழையும் பெறுகிறார்கள். ஆணுக்குச் சரி நிகர் சமானமாக, வேலைக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், பல தரப்பட்ட பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளையும் அள்ளித் தருகிறார்கள் மிகுந்த பெருமையாய் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கவும், கேட்கவும்! இது ஒரு புறம் இருக்கட்டும். ... Full story

யானைக்கு அங்குசம்

யானைக்கு அங்குசம்
காயத்ரி பாலசுப்ரமணியன் மீரா தன் அலங்காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியில், ஒரு முறை பார்த்துக் கொண்டாள். அதற்குள் அப்பாவும், அம்மாவும் கூப்பிடும் குரல் கேட்டது. "இதோ வந்துட்டேன்" என்று சொன்னவள், அவர்களுடன் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். மீராவிற்குத் திருமணம். அதற்குத் தன் தாய் வழித் தாத்தாவை நேரில் சந்தித்து, அவரின் ஆசி பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனைவரும் செல்கிறார்கள். இதற்கு மீராவின் அப்பா, லேசில் ஒத்துக் கொள்ளவில்லை.... Full story

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்

மகளிர் தின மகிழ்ச்சி வாழ்த்துகள்
இராஜ ராஜேஸ்வரி சர்வதேச அளவில் பெண்மையைப் போற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட மார்ச் எட்டாம் நாளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என அழைக்கப்பட்ட இந்த மகளிர் தினம், பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் சாதனை புரிய முயலும் பெண்களின் மீது மரியாதை, மதிப்பு, அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் பொதுவாகக் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தினை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் போன்ற ... Full story

தாய்மை தவறும் அம்மாக்கள்

தாய்மை தவறும் அம்மாக்கள்
அவ்வை மகள் எவரொருவருக்கும் தாய் போல் ஒரு உறவை எவராலும் தர முடியாது. மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவா போகிறோம் என்று, ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தமக்கிடையே பேதமிருப்பினும், அவற்றை ஒதுக்கித் தள்ளி ஒற்றுமையுடன் வாழ்வது கண்கூடு. அன்பென்றாலே அது அம்மா தான். மற்ற உறவுகளெல்லாம் சும்மாதான்!! ஆனால் மாறி வருகின்ற உலகச் சூழல்களில் - அம்மாக்களின் பாரம்பரியக் குணாதிசயங்களான பொறுப்புணர்வு, கடைமையுணர்வு - கட்டுப்பாட்டுக் கோட்பாடு ஆகியன ... Full story

அதிதி தேவோ பவ

அதிதி தேவோ பவ
விசாலம் நடேசன் தன் குளுகுளு அறையில் அமர்ந்திருந்தார். தில்லியில் ஒரு கம்பெனியில் அவருக்கு மிகப்பெரிய பதவி தான். அவர் அதில் சேரும் போது சாதாரண குமாஸ்தாவாகத்தான் சேர்ந்தார். ஆனால் அவர் அறிவும் உழைப்பும் "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற கருத்தும் அவரை வெகு வேகமாக மேலே உயர்த்தி விட்டன. கால்பெல்லை அழுத்தவும் ஒரு காக்கிச் சட்டைக்காரன் உள்ளே வந்தான் "எஸ் சார்" "அந்த மோகன் லாலை உள்ளே வரச்சொல்" "கியா ... Full story

மகளிர் வாரம் – குடத்திலிட்ட தீபம்-சாவித்திரிபாய் ஃபுலே

மகளிர் வாரம் - குடத்திலிட்ட தீபம்-சாவித்திரிபாய் ஃபுலே
சாந்தி மாரியப்பன் “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண்இளைப்பில்லை காண்”என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை அலங்கரிக்கும் பிரதீபா பாட்டில் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.