Archive for the ‘கவிதைகள்’ Category

Page 1 of 23212345...102030...Last »

இன்றைய சமூகம் !…….

 முனைவர் சு.சத்தியா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பான் செக்கர்ஸ் மகளிர்   கல்லூரி, தஞ்சாவூர்.   கூடி  வாழ்ந்து  கோடி  நன்மை   பெற்ற காலம்போச்சு!... நாடி  எங்கும்  கேடு  செய்யும் உலகமாச்சு!.... மனிதன  மனிதன்  மதிக்கும்  காலம் மாண்டுபோச்சு!... மனிதன்  எங்கே  வசிக்கிறான்? என்ற நிலையாச்சு!.... அன்பு   என்றால்  என்ன? என்பதாச்சு!..... வம்பு  என்பதே  இன்று வாடிக்கையாச்சு!.... கருணை  என்பது  முதியோர் இல்லமாச்சு!.... காசு  மட்டுமே  இன்று வாழ்க்கையாச்சு!.. அது இல்லாதவர் வாழ்வோ கல்லறையாச்சு!.... உழவனின்   வாழ்வோ உதிர்ந்துப்போச்சு!.... நாற்பது  பக்க சுயவிவரம் செல்லாகாசாச்சு!.... நாற்பது  லெட்சம்   கையூட்டே   இன்றைய நாகரீகமாச்சு!.... இதுதான்   இன்றைய  சமூகம் என்பதாச்சு!...     Full story

கடைசி அலை !

சந்திரா  மனோகரன்     அவள்  மென்முறுவலில் என்  வனம்  நனைந்து  சிலிர்க்கிறது பச்சையோ  சிதறி புதுப் புது  பட்சிகளால் உயிர்த்தெழுகிறது ! ஆனாலும் --- என் இதயமோ  கற்பாறையாய் இறுகியே  கிடக்கின்றது அந்த  சிசுப்பாதங்களின் பதிவுகள் பாதையெங்கும்  தழும்புகளாய் முளைத்துக் கிடக்கின்றன பெருங்காற்றின்  சுழற்சியில் அவள்  முணுமுணுப்பு என் மனதைக்  கலங்கடிக்கிறது ஊற்றெடுக்கும்  ஈரக்கசிவில் பூத்திருந்த பகைமை உடைத்தெறியப்படுகிறது வலுவிழந்த  மனதின் வலி வீழ்ந்து  நொறுங்கிப் போகிறது அடர்ந்த  இலைகளுக்குள் மெல்லத்  தேய்ந்துபோகும்  இருள் ! நேற்றுவரை  அறுந்த  கம்பி ! இன்று மென்சிறகுகளால் போர்த்தப்படுகிறேன் அவள்  வருகை  மாயையின் பிம்பமா ? இல்லை , பேரொளியின் அதிர்வு ! மென்தளிர்போல்  மென்மையாய் மொழியற்ற  சந்திப்பில்  இருவரும் ... கடலில்  எது  கடைசி அலை  ? எனக்குள் புதிதாய்  ஓரு பேரலை  !         Full story

விடியல் கவிதை

  முனைவர் க. முத்தழகி உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.     ஞாயிறு எழுந்து வர! ஞாலமெல்லாம் ஒளிப்பெற! நண்டுவளை திறந்திட நல்லன பூரிக்க! புதுமையாய் நாள் புலர்ந்ததுவே! ஏழையும் எழுந்திட எஜமானும் எழுந்திட உதித்தது ஞாயிறு தானே! காலைக் கதிரவனே! காரிருளை அகற்றியவனே! கானக் குயில் பாடிடவே! அன்னமென பெண் நடந்திடவே! அரியணையில் வீற்றிடவே! வீர நடை நடந்திடவே! விடிவெள்ளியாய் வந்த ஆதவனே! சோம்பலை போக்கிட்டு இருள் கதவை திறந்திட்டு சுறுசுறுப்பை உலவ விட்டு சுடரொளியாய் வந்தவனே! உச்சத்தில் தோன்றுமுன் - உன் வரவை எதிர் நோக்கி - ஓடோடி வரச் செய்த சுடரொளியே! வாசலில் வந்து நின்று விடியல்! விடியல் ! என்று விடியும் என் வாழ்வு என்று பச்சிளங் குழந்தையும் உன் வரவை ... Full story

வாராமல் காத்திடுவோம் !

      ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )     நீரிழிவு எனும்வார்த்தை பாரினையே கலக்கிறது யாருக்கு வருமென்று யாருக்கும் தெரியாது எல்லோரும் நீரிழிவை எதிரியாய்ப் பார்க்கின்றார் வல்லவரும் நல்லவரும் நீரிழிவால் வாடுகிறார் !   நல்லகாலம் இருப்பார்க்கு நீரிழிவு வருவதில்லை அல்லல்தரும் நோயெனவே அனைவருமே எண்ணுகிறார் அறுசுவையுள் பலவற்றை அணுகிடவே முடியாமல் அடக்கிவைக்கும் நோயாக நீரிழிவு வந்திருக்கு !   நீரிழிவு இப்போது யாரையுமே விடுவதில்லை ஏழை பணக்காரென்று பாரபட்சம் பார்ப்பதில்லை குழந்தைமுதல் கிழவர்வரை கொடுக்கிறது தொல்லையினை நலமிழந்து வாடிநிற்க நீரிழிவு செய்கிறது !   உணவைக் குறையுங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள் நலன்கெடுக்கும் வகையினிலே நடக்காது இருந்திடுங்கள் பசித்தவுடன் உண்ணுங்கள் புசித்தவுடன் உறங்காதீர் எதற்குமே பதட்டமதை இயன்றவரை தடுத்திடுவீர் !   இனிப்புக் ... Full story

கபீர்தாசரின் கவிதைகள் (தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்)

கபீர்தாசரின் கவிதைகள்  (தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்)
க. பாலசுப்பிரமணியன் கைகளில் மாலைகள் உருண்டிட நாவினில் சொற்கள் உருண்டிட நினைவோ எங்கெங்கோ உருண்டிட இதுவோ மனிதா! இறைவன் பக்தி?   குயவனைப் பார்த்து மண்ணே சொன்னது எத்ததனை நாட்கள் உருட்டுவாய் என்னையே எனக்கென ஒருநாளும் உண்மையில் வந்திடும் உருட்டுவேன் உன்னையே இந்த மண்ணினில்!   மற்றவரிடம் கேட்பது மரணத்துக்கு நிகர் எவரிடமும் எதுவும் கேட்காதீர் ! கேட்கும் பொழுதே ... Full story

ஏன்? இந்த மாற்றம்!….

  முனைவர் சு.சத்தியா உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி தஞ்சாவூர்   இதயத்தில் ஈரமுள்ளவர்கள் வாழ்வால் - அன்று வயலில் ஈரமிருந்தது இன்றோ இதயத்தில் ஈரமற்றவர்கள் செயலால் வயலில் ஈரம் வற்றியது கழனிகள் புறவழிச்சாலைகளாயின சோலைகள் மயானமாயின கலப்பை ஏந்தியவன் கதியற்றவனானான் இயற்கையோடு இயைந்த வாழ்வு - இன்று செயற்கையாகிப் போனது நமக்குள் ஒற்றுமையின்மையால் பூமியும் பிளவுப்பட்டு நிற்கிறது நாம் பொறுமையை இழந்துப் போனதால்;... Full story

படக்கவிதைப் போட்டி (136)

படக்கவிதைப் போட்டி (136)
பவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே! வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்? சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார். இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக ... Full story

முறையாமோ!

        ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )   தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில் வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !   பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !   காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும் காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !   அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினம் !   சிங்கத்தைப் ... Full story

குறளின் கதிர்களாய்…(193)

  செண்பக ஜெகதீசன்     உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம் விட்டேமென் பார்க்கு நிலை. -திருக்குறள் -1031(உழவு)   புதுக் கவிதையில்...   உழவுத் தொழிலைச் செய்யாது உழவர் கைகட்டி அமர்ந்துவிட்டால், ஆசை விட்டு முற்றும் துறந்தோம் என்பவர்க்கும் வாழ்க்கையில்லை வையத்திலே...!   குறும்பாவில்...   உழவர் உழைக்காது போனால், வையத்தில் வாழ்வில்லை உலகாசை விட்டோம் என்பார்க்கும்...!   மரபுக் கவிதையில்...   வயலில் உழைத்திடும் உழவரவர் வேலை யேதும் செய்யாமல் பயனே யின்றி கைகட்டிப் படுத்துக் கிடந்தால் பாரினிலே, உயர்ந்த நிலையைப் பெற்றிடவே உலகின் ஆசை விட்டோமெனும் உயரிய துறவைக் கொண்டோரும் உய்ய வழியே இருக்காதே...!   லிமரைக்கூ..   உழைக்காதே உழவரிருந்தால் வீட்டில், உலகாசை விட்டோமெனும் துறவியர்க்கும் கூட வாழ்வென்பது ஏதுமில்லை நாட்டில்...!   கிராமிய பாணியில்...   ஒசந்தது ஒசந்தது ஒலகத்தில ஒசந்தது ஒழவுவேல ஒசந்தது..   வயலுல எறங்கி வேலசெய்யாம உழுறவன் ஊட்டுல ஒறங்கிக்கெடந்தா ஒண்ணுமே நடக்காது ஒலகத்துல..   ஒலக ஆசய உட்டோமுங்கிற சாமியாருங்க கூட ஒலகத்தில வாழ வழியிருக்காதே..   அதால, ஒசந்தது ஒசந்தது ஒலகத்தில ஒசந்தது ஒழவுவேலயே ஒசந்தது...!     Full story

“ஸ்ரீராம தர்ம சரிதம்” (18)

  (மீ.விசுவநாதன்) பகுதி: 18 பாலகாண்டம் "சரகன் வரலாறு"   சூர்ய குலத்து வழியினிலே சொல்லும் செயலும் ஒன்றான சுத்த அரசன் சரகனென்பான் சொந்தப் பிள்ளை வேண்டுமென பார்யாள் "சுமதி, கேசினீயை" பக்கம் அழைத்து வனம்சென்று பக்தி யுடனே தவம்செய்தான்! பரிவு கொண்ட ... Full story

பெண் முன்னேற்றத்தில் பாரதி

திருமதி பா. அனுராதா உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.     பெண்மையின் வழிகாட்டியே! நீ சென்ற ஒற்றையடி பாதையால்  உயர்ந்தனர் மாதர்;! அடுப்படியில் பூட்டி வைத்த நயவஞ்சகரே நாங்கள் அகிலத்தை அடுப்படிக்கு கொண்டு வந்தோம்! பெண்ணே! நீ இன்றி இவ்வுலகில் யாருமில்லை! அறிவாய் நீ! துணிந்து எழு பெண்ணே! வஞ்சகர் நாட்டில் பாரதியின் சொற்சுவையும் பொருள்சுவையும் மாதரின் மலர்ச்சியை மறுசுழற்சி செய்தனவே! நம்பிக்கையோடு பிறந்துவிட்டாய் பெண்ணே நாணம் கொள்ளாதே! உன் பெருமைதனை பேச இன்னொரு பாரதி பிறக்கவில்லையே! துகிலுரிக்கையில் மானம் காக்க நவீன கண்ணன் யாருமில்லை! பெண்ணே! உன் சபதத்தை ஏற்று போர் புரிய பாண்டவருமில்லை! பெண்ணிற்காக இதிகாசம் எழுத தாய்மண்ணில் யாருமில்லை! மதுரத் தேமொழி மங்கையரே! அவலம் எய்திக் கவலையின்றி வாழும் பாவையரே - உன் கவலையை உமிழ்ந்து தள்ளி பெண்ணறமாய் ... Full story

மழலை மொழி !

எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா குழலினிது யாழினிது என்பர்  ஆனால் குழந்தைகள் மொழியோ அதனினும் இனிது மழலைகள் நிறைந்திடும் போது அங்கு மகிழ்வெனும் ஊற்று பொங்கியே நிற்கும் !   கோடிகள்கொட்டி திருமணம் செய்வர் ஆனால் குழந்தைகள் இன்றில் கொடுமையோ கொடுமை கூழது குடித்துமே வாழ்வார் வீட்டில் குதூகலம் கொடுத்திட மழலைகள் குவிவார் !   ஓடிநாம் களைத்துமே வந்தால் அங்கு ஓடியே வந்துமே மடிதனில் அமர்ந்து நாவினால் மழலைகள் உதிர்ப்பார் அது நாளுமே நமக்கின்பம் நல்கியே நிற்கும் !   கோபங்கள் வந்திடும் வேளை வீட்டில் குழந்தைகள் அங்கு வந்துமே நின்றால் கோபங்கள் ஓடியே போகும் அவர் குறும்புகள் மழலைகள் கொடுக்குமே இன்பம் !   வறுமையிலே கிடந்தாலும் வாடிநாம் நின்றாலும் தலைதடவும் பிஞ்சுவிரல் ... Full story

வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிதைகள்

வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிதைகள்
க. பாலசுப்பிரமணியன் குழந்தையே மனிதனின் தந்தை (வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை ) தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன் வானவில்லைப் பார்க்கும்பொழுதெல்லாம் என் மனம் ஏனோ துள்ளி ... Full story

எழுத்து – 6

எழுத்து – 6
வேதா. இலங்காதிலகம்                 எண்ணங்களின் நிழல், எண்ணப் படங்கள் எண்ணப் பறவைகள், எண்ணங்களின் கும்மி எண்ணக் கொலுசுகள் வண்ணப் பரதம், திண்ணமான அகத் தீயின் கொழுந்துகள்! கைநழுவி உதிர்வதல்ல எழுத்துகள் கைகாட்டும் வழிகாட்டி, கைத்தடியின்னும் பல. திசையறியாது வீழும் இறகல்ல பெரும் நசையோடுதிரும் வாசமுடை மலர் எழுத்து. நீதிக் கதவின் திறவுகோல் எழுத்து. பீதியின்றி உலகையும் அளக்கிறது நிறுக்கிறது. தீதுடை உலக மௌனத்தை ஊடுருவுகிறது. ஆதி சைகை, குறியீடு, கல்வெட்டு ஓலைச்சுவடியென்று விழுந்த கற்பக விதை. மூலைகளில் ஒதுங்கிய துன்பம் கிழிக்கும் ஆழ்ந்த மௌனத்தை ஆலயமணி ஓசையாய் வீழ்ந்து சுவாசம் நிறைக்கும் எழுத்து. எழுத்துப் பால் உறிஞ்சி உறிஞ்சியே எழுச்சியுடன் ... Full story

இரவின் தனிமை

     சந்திரா  மனோகரன்     எனக்கும்  அவனுக்குமிடையே முறுவலின்  அலைகள் ! படகின்  மிதப்பில் --- குளிர்மாலை  ஒளியில் -- ஏரியின்  சிலிர்ப்பில்-- அடைபட்ட  எண்ணங்கள் அவன் எதிர்பார்ப்பின்றி *பட பட * வென்று ... அவன்  மௌனம்  இனியது சிற்றலைகளின்  அமைதியில் சிதறி  உடையும்  சொற்கள் மழைச் சாரல்  ஏரியை துளைத்தெடுக்கின்றன நீண்ட  நதிபோல் நெளிந்து கிடக்கும்  நீர்க்குளம் அவன்  மோனமும்  துணிவும் முடிவற்ற  பரிச்சயம்  எனக்கு இடையிலென்ன  இரும்புத்திரை .... தடுப்புச்சுவர்  அழியட்டும் நீரலைக்குள்  நீர்த்துப்போகட்டும் கரிய இரவுப்பயணம்  முடிந்துவிடும் கரைந்த  மோனத்தின் சில்லுகள் நிழல்களாய்ப்  படிகிறது , நீரில் மங்கலாய்த்  தெரியும்  கரையில் பளீரிடும்  நம்பிக்கை ! சிற்றொளியில்  உதிரும்  சோகம் அவன்  மட்டும் கால்பதிக்க ... பாவம்  பேதை வாழ்வின்  இரகசியம் புரியாதவள் ! ஏரியும்  தோணியும் துணையற்ற  இருளும் என்னை ஏந்திய வண்ணம்  !             Full story
Page 1 of 23212345...102030...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.