Archive for the ‘மறு பகிர்வு’ Category

அந்த வருடம், புதிய வருடம்

சத்தியமணி வருவது யாரோ??...புது வருடமா!! தருவது தானோ ?? இனிய வரமா!! முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா? உறவுகள் கூடி விருந்து தருமா? எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக் இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங் மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே... (வருவது யாரோ?) தாயுடன் பாட நேரமில்லையா? தந்தையுடன் பேச வார்த்தையில்லையா? உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே? நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே? இந்த வருத்தம் நீக்கிடுமோ அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?) அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம் பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம் அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம் அதற்கும் மேலே தனித்துத் தவிர்த்தோம் இந்த வருத்தம் நீக்கிடுமோ அந்த வருடம் ... Full story

துடித்துப் பிரிந்த துணைப் பறவை – 4 &5

  ஒருவரி ஒருவரி எழுதினால் எழுதென ஒன்பது வரிகள் வாசலில் வரிசையாய் காத்திருக்கும், கண்ணீரோடு ! புண்பட்ட வரிகள் ! வரிசை கலைந்து முதலில் என்னை எழுது, என்னை எழுது என்று கெஞ்சும் ! என் டைரியில் உன் கையெழுத்தை இடுவென முந்தும் ! எழுதி, எழுதி, எழுதி என் மனம் தினம் ... Full story

துடித்துப் பிரிந்த துணைப் பறவை

தமிழ்வலை உலக நண்பர்களே, எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன. உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள். என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்ர்து கொள்ள விழைகிறேன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மனைக்கு விளக்கு மடவாள். நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும் பெருமை ... Full story

நடிக்கப் பிறந்தவள்

நிர்மலா ராகவன்   `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன். சிரிப்புடன், `இது நடிக்கவே பிறந்திருக்கு! பெரிய நடிகையா வரும்!’ என்று அங்கிருந்தவர்கள் சிலாகிப்பார்கள். அம்மாவுக்கு அதுதான் டானிக். தன்னைத்தான் நடிகை என்று யாருக்கும் தெரியாமலே போய்விட்டது, மகளுக்கும் அதே நிலைமை வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள். அவர்கள் வாக்கு பலித்தது. எல்லாருக்கும் அபிமானமான குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்தேன். ஒன்பது வயதில் நான் வயதுக்கு மீறி உயர்ந்தபோது, எனக்குப் பெருமையாக இருந்தது. கலங்கியவள் அம்மாதான். ... Full story

விலகுமோ வன்மம்?

நிர்மலா ராகவன் தேங்காய் எண்ணையில் பொரித்த அப்பளத்தை நொறுக்கி, அந்த ஒலியையும் சேர்த்து ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் ரமா. `இவ்வளவு நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு எவ்வளவுகாலமாகிவிட்டது!’  அவளது எண்ணப் போக்குக்கு ஒரு திடீர் நிறுத்தம் அம்மாவின் குரலிலிருந்து: “கெட்டதிலேயே ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (10)

ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் அங்கம் -7 காட்சி -1 அவளோர் தர்க்க ராணி! வாயாடி மாது! அவளைப் பற்றிவை  இவற்றுள் அடங்கும்: திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்! கொதித்தெழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி, உன் கவனம் கவரும்! போற்ற விழைவாய்! உண்மை யாய்த் தோன்றும் அவை உனக்கு! …..  ஆண்டனி   வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) .   நாடகப் பாத்திரங்கள்: எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (9)

அங்கம் -6 காட்சி -4 எங்கே ஆண்டனி? எவருடன் உள்ளார்? என்ன செய்கிறார்? என்னைக் கூறாய் உன்னை அனுப்பிய தென்று! ஆண்டனி சோகமா யிருந்தால், சொல்வாய் அவரிடம், ஆடிப் பாடி உள்ளேன் என்று! அவர் பூரித்தி ருந்தால் நோயில் துடிப்பதாய்க் கூறிடு! போய்வா சீக்கிரம் ! … (கிளியோபாத்ரா) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) கண்ணியப் பிரபு! ஒரு வார்த்தை புகல்வேன்! பிரியத்தான் வேண்டும் நீங்களும் நானும்! அது மட்டு மில்லை! நேசிப்ப துண்மை நீங்களும், நானும் ! அது மட்டு மில்லை! நிச்சயம் அறிவீர் நீவீர்! சொல்கிறேன், மறக்கும் என் நினைவு, ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (8)

அங்கம் -6 காட்சி -1 வாழ வேண்டும் நீ! அல்லது மதிப்போடு மீள வேண்டும் வாழ நீ,  குருதியில் மூழ்கி மாள எதிராகப் போரிட்டு! …. (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) தைபர் நதி ரோமில் உருகிப் போகட்டும்! ரோம் சாம்ராஜி யத்தின் தோரண வளையம் குப்புற வீழட்டும்! என் வசிப்புத் தளம் இதுதான்! அரசு மாளிகை அனைத்தும் களிமண்! சாணிப் பூமி யானது, மானி டனுக்கும் மிருகத் துக்கும் தீனி யிடுவது வெவ்வேறு முறையில்! வாழ்வின் புனிதம் இவ்விதம் புரிவது: ஒருவரை ஒருவர் விரும்பி யிருவர் ஒன்றாய்ப் பின்னிப் ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (7)

அங்கம் -5 காட்சி -11 சீஸரின் புண்கள் பேசா வாய்கள்! எனக்காய் நீவீர் இயங்கிடச் செய்வீர்! ….. இங்குதான் குத்தினான் வஞ்சகக் காஸ்கா! இனிய புரூட்டஸ் குத்தியது இங்கே !… பாம்ப்பியின் சிலைக் காலடியில் சீறிடும் குருதி சிந்தச் சிந்த சீஸரும் வீழ்ந்தார் ! சீஸர் வீழ்ந்ததும் மோசச் சதிதான் நேசர் நம்மேல் வீசிச் சென்றிட நீங்களும் நானும் ஏங்கியே வீழ்ந்தோம்! எத்தகை வீழ்ச்சி என்னாட் டவர்காள்! …. (ஆண்டனி) வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகப் பாத்திரங்கள்:  ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (6)

அங்கம் -5 கட்சி -4 வானத்தின் வயிறைக் கிழிக்குது மின்னல் வைர நெஞ்சில் அடிக்குது பேரிடிச் சத்தம் நாட்டின் வடிவைச் சிதைக்குது பேய்ப்புயல் நகர்த் தெருவை நிரப்புது பெருமழை! ************** பாதிக் கோளத்தில் (பரிதியின் மறைவால்) இறந்து விட்டன இயற்கை நிகழ்ச்சிகள்! வேதனைக் கனவுகள் சீரழிக் கின்றன, திரைமறைவில் எழுந்திடும் துக்கமதை. வில்லியம் ஷேக்ஸ்பியர் (சீஸர்) மரணத்தால் மட்டும் தீரும் சிக்கல். சினமில்லை எனக்குத் தனித்த முறையில் குடிமக்கள் நலத்தை எண்ணுபவன் நான் முடி சூட்டுவார் பேராசைச் சீஸருக்கு. முடி ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (5)

அங்கம் -5 காட்சி -1   ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்   கிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும், கிளியோ பாத்ராவின் மேனிக் கவர்ச்சி! வானத்து நிலவையும் கவ்வி வசப்படுத்திடும் ! தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்! பேசத் தொடங்கின் இரவு பகலை நீடிக்கும் ! வயது அவளைப் பார்த்து மொட்டு விடும்! வாலிபத்தைக் கண்டு பொங்கி எழும்! பாதிரியும் வைத்தகண் வாங்காமல் பார்ப்பார், பாவையின் புன்சிரிப்பு இதழில் மின்னிலால்!   ஆங்கில நாடக மேதை: ஜான் டிரைடன் ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா – [பேரங்க நாடகம்] (4)

எழிலரசி கிளியோபாத்ரா - [பேரங்க நாடகம்] (4)
அங்கம் -4 காட்சி -1 பூரிப்பு அடைகிறேன், எனது வலுவிலாச் சொற்கள் தீப்பற்ற வைத்தன, புரூட்டஸ் நெஞ்சிலே! காஸ்ஸியஸ் பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்தில் வரட்டும், மென்மை மூளையோடு ஓய்வும் எடுப்போர் ! அதோ பார் ஆண்டனி! பசித்த பார்வையும், நலிந்த மேனியும் படைத்த காஸ்ஸியஸ் ! ஆழ்ந்து உளவிடும் அத்தகை மாந்தர் அபாய மனிதர்கள்! ஜூலியஸ் சீஸர் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ன சாதித்து விட்டார் ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (3)

எழிலரசி  கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (3)
அங்கம் -3 காட்சி -1 கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப்பொழுதில் மலர்ந்து கருகுவது! ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல!” ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி “உலகத்தின் வாக்குறுதிகள் பெரும்பான்மையாக வீண் மாயைகள்தான்! ஒருவன் தன்மீது உறுதியாக நம்பிக்கை கொண்டு, ஒரே ஒரு வினையில் தகுதியும், மதிப்பும் பெறுவதே மானிடத்தின் மிகச் சிறந்த ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (2)

எழிலரசி  கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (2)
அங்கம் -2 பாகம் -11 மேலங்கியை மாட்டு! எனக்கு மகுடத்தைச் சூட்டு! மேலோங்கி எழுகிற தெனக்குள் தெய்வீக வேட்கை! … (கிளியோபாத்ரா) கடவுளுக் களிக்கும் சுவைத் தட்டு மடந்தை யவள் என்று நானறிவேன், உடல் மீது பிசாசு அவளுக்கு ஆடை அணியா விட்டால்! வில்லியம் ஷேக்ஸ்பியர் “ஆத்ம உள்ளுணர்வு கைகளோடு ஒன்றி ... Full story

எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (1)

எழிலரசி  கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்] (1)
மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++ வயது ஏறினும் வாடாது அவள் மேனி வழக்க மரபுகளால் குலையாதவள் வாலிபம் வரையிலா விதவித வனப்பு மாறுபாடு ......! படகில் அவள் அமர்ந்துள்ளது பொன்மய ஆசனம்! கடல்நீரும் பொன் மயமாகும் அதன் ஒளியால். படகின் மேற்தளப் பரப்பு தங்கத் தகடு மேடை மிதப்பிகள் நிறம் பழுப்பு! பரவும் நறுமணத் தெளிப்பு காற்றுக்கும் அதனால் காதல் ... Full story
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.