- Tuesday, November 28, 2017, 16:28
- இலக்கியம், கட்டுரைகள், பெட்டகம்
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156
முன்னுரை
முதற்பகுதியில், பதினெட்டுப் பாடங்கள் வாயிலாகக் கல்வெட்டு எழுத்துகள் பற்றிய பயிற்சி ஓரளவு நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கக்கூடும் என நம்புகிறேன். சற்று விரிவான பயிற்சியை இந்த இரண்டாம் பகுதியில் காணலாம். அதற்கு முன்பாக, மாணாக்கருக்கு ஒரு குறிப்பு. மாவட்ட அளவில், தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டிருக்கும் கல்வெட்டுத் தொகுதி நூல்களை மாணாக்கர் வாங்கி வைத்திருத்தல் இன்றியமையாதது. அவற்றில் உள்ள கல்வெட்டுப் பாடங்கள், இன்றைய வழக்கில் உள்ள தமிழ் அச்சு ...
Full story
- Monday, November 20, 2017, 21:43
- இலக்கியம், கட்டுரைகள், பெட்டகம்
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
மீண்டும் தஞ்சைக்கோயிலின் ஓரிரு கல்வெட்டுகளைக் காண்போம்.
இவை, கோயிலின் சுற்று மாளிகையின் தூண்களில் இருப்பன. விமானத்தின்
அதிட்டானப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளைக்காட்டிலும் இவற்றில் அழகும் திருத்தமும் குறைவு.
கல்வெட்டு-1
பதினாறு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு, தூணின் ஒரு முகத்தில் உள்ளது. கொடையாளி, இறைவரின் செப்புத்திருமேனி ஒன்றையும் அதன் பீடத்தையும் அளித்து, உருத்திராக்கம் (ருத்ராக்ஷம்) ஒன்றைப் பொன்கொண்டு பொதித்தளித்திருக்கிறார்.
கல்வெட்டின் படத்தை உருப்பெருக்கம் செய்து எழுத்துகளைச் ...
Full story
- Sunday, November 12, 2017, 15:04
- இலக்கியம், கட்டுரைகள், பெட்டகம்
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 7
தஞ்சைப்பெரியகோயிலின் அதிட்டானப்பகுதியில் அமைந்துள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் எழுத்துகளை நாம் கற்றுவருகிறோம். அவ்வெழுத்துகளுக்கு முந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பிந்தைய காலக் கல்வெட்டு எழுத்துகளும் பலவாறு மாற்றம் கொண்டவை. அம்மாற்றங்களோடு அவ்வெழுத்துகளையும் இனம் கண்டு படிக்க இங்கே பயிற்சி தொடங்குகிறது.
சோழர்களுக்கு முன் தமிழகதிலிருந்த பல்லவர் காலத்திலேயே தமிழ் எழுத்துகள் கல்வெட்டுகளில் வழக்கத்துக்கு வந்தன என்றாலும் குறைவான எண்னிக்கையிலேயே அவை ...
Full story
- Friday, November 10, 2017, 12:44
- இலக்கியம், கட்டுரைகள், பெட்டகம்
கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – பகுதி-1
து.சுந்தரம், கோவை
அலைபேசி: 9444939156.
கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.
கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் ...
Full story
- Wednesday, August 2, 2017, 4:58
- இலக்கியம், கட்டுரைகள், பெட்டகம்
**********************************************
வைத்திய கலாநிதி
தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
(தி. ஞானசேகரன் – பகுதி-I)
*********************************
தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார்.
15.4.1941 பிறப்பு (74 வயது).
நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார்.
பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மலையகத்திலே நீண்ட காலமாக ...
Full story
- Friday, July 21, 2017, 12:34
- இலக்கியம், கட்டுரைகள், பெட்டகம்
சிறீ சிறீஸ்கந்தராஜா
சிற்றிதழ் என்றால் என்ன?
அதன் வரையறைகள் யாவை ?
அவற்றின் வரலாற்றுப்பின்புலம் என்ன?
******************************************************
சிற்றிதழ்கள் - 06
******************************
ஈழத்துச் சிற்றிதழ்கள்
********************************************04MAY
இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
கோப்பாய் சிவம்
இலங்கையில்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
(1841-1984)
ஒரு கையேடு
கோப்பாய் - சிவம்...
Full story
செ.இரா. செல்வக்குமார்.
அயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம்
வேற்றுமொழிச்சொற்கள் இல்லாமல் எழுதுதல் தனித்தமிழ். ஆனால் அப்படியான தனித்தமிழ் எப்பொழுதும் எங்கும் இருந்ததே கிடையாது, இருக்கவும் முடியாது. ஆனால் எல்லோருக்கும் புரியும்படியாகவும் தமிழ்வேரிலிருந்து கிளைக்கும் நல்ல தமிழ்ச்சொற்களை எடுத்தாண்டு நல்ல இலக்கணத்தைப் பின்பற்றி எழுதலாம் என்பதே குறிக்கோள். தமிழ் மரபுக்கு மீறிவரும்பொழுது ஒலியைத் தோராயமாகக் காட்ட எழுதலாம். கிரந்தம் இல்லாமல் எழுதுவதால் தமிழில் 66+ 13 = 79 எழுத்துகள் குறைவாகப் பயன்படுத்தலாம். எழுத்தைக் குறைப்பது மட்டுமே நோக்கமன்று, வேறுபல சிக்கல்களில் இருந்தும் பிழைக்கலாம். மிஞ்சிப்போனால் ஃக, ...
Full story
ஹரி கிருஷ்ணன்
பாரதி தன் வடமொழிப் புலமையைப் பற்றி ஓரிடத்தில் போகிற போக்கில் குறிப்பிட்டிருக்கிறான். தற்போது சுயசரிதை என்றறியப்படும் ‘கனவு‘ நெடும்பாபடலில் குருதரிசனம் என்ற தலைப்பின் கீழ் பின்வருமாறு சொல்கிறான்:
அன்றொருநாள் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா ...
Full story
ஹரி கிருஷ்ணன்
பாரதிக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்பது இணையத்தில் நெடுங்காலமாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. விக்கிபீடியா பாரதிக்கு 29 இந்திய மொழிகளும் 3 வெளிநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்று சொல்கிறது.
https://en.wikipedia.org/wiki/Subramania_Bharati இது மிகவும் தவறான தகவல். என்னதான் பாரதி நம் நேசத்துக்குரியவன் என்றாலும் இப்படிப்பட்ட மிகைநவிற்சிகள், சொல்லப்படுவதன் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றன. இந்தியாவின் அலுவல் மொழிகள் (official languages) மொத்தமே 22 என்னும்போது, இவற்றைத் தாண்டி வேறு என்னென்ன ஏழு மொழிகளை பாரதி அறிந்திருக்கக்கூடும் ...
Full story
ஔவையார் எழுதிய புகழ்பெற்ற அறநூல்களில் ஒன்று ’ஆத்திசூடி’ என்பது அனைவரும் அறிந்ததே. ஆயினும், அதில் ஆத்திசூடியாகக் குறிக்கப்படுபவர் யார் என்பதில் அறிஞர் பெருமக்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதுகுறித்து ஓர் சுவையான கருத்தாடல் நிகழ்த்தி ஆத்திசூடி குறித்த பல புதிய தகவல்களை வாசகர்களுக்கு அறியத் தரலாமே என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ‘ஆத்திசூடி யார்? – ஓர் சுவையான கருத்தாடல்’ எனும் இப்பகுதி.
இதில் அறிஞர்கள் பலர் பங்கேற்று ’ஆத்திசூடி’ பற்றித் தங்கள் கருத்துக்களை, விளக்கங்களை நம்முன் படைக்க இருக்கின்றார்கள்.
முதலில், ’ஆத்திசூடி’ என்பது சமண சமயத்தைச் ...
Full story
- Friday, May 9, 2014, 19:35
- இலக்கியம், கவிதைகள், பெட்டகம்
கிரேசி மோகன்
-----------------------------------
ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
பூசலா நாயனார் போலவே -யோசனையில்
கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
குண்டு குமாரனே காப்பு....(1)....
----------------------------------------------------------
கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
----------------------------------------------------
சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
மீண்டுமவன் காண மதுரையில் மீனாட்சி
ஆண்டவன் கல்யாணம் ஆம்....(2).......
Full story
- Wednesday, May 7, 2014, 22:45
- பெட்டகம்
கிரேசி மோகன்
அதர்மமே யானாலும் அஞ்சாது செய்யும்
சுதர்மம் சுதந்திர சொர்கம் -பதமுறும்
பாதுகையே போய்ச்சொல் தூதுவனாய்க் கண்ணனிரு
காதுகளில் காத்திருப்பே னென்று....(1)....
அகங்காரம் ஆசை பயம்கோபம் என்றும்
சுகம்காணும் சொந்த நலத்தில் -புகுந்தாடும்
மால்கட்டு நீங்கிட மாலோலன் பங்கயக்
கால்கட்டும் பாதுகாய் காப்பு....(2)....
அகஸ்மாத்தாய்க் கேட்டோர் அதிசயிக்கும் வண்ணம்...
Full story
- Wednesday, May 7, 2014, 22:12
- பெட்டகம்
கிரேசி மோகன்
பிள்ளையார் வெண்பாக்கள்
சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
சீமந்த மைந்தன் சதுர்த்தியின்று -மாமன்தன்
சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
வக்கிர துண்டனை வாழ்த்து....(1)
தம்பிக்கு காதல் துணைசென்ற தந்தியே
தும்பிக்கை வேழமே, தேவர்கள் -ஸ்தம்பிக்க
...
Full story
- Saturday, April 5, 2014, 11:18
- பெட்டகம்
கிரேசி மோகன்
காப்பு
--------
பழமளித்த தந்தை புரமெரித்த போது
தொழமறக்க தேர்கால் துணித்த -அழகா
தளைதட்டா வெண்பாக்கள் தந்ததில் பக்திக்
களைகட்ட கற்பகச்சேய் காப்பு....03-07-2011
-------------------------------------------------------------
நூல்
-------
அப்பர் தமிழ்கேட்டு வெப்பக் களவாயை
அப்பிய சந்தனமாய் ஆக்கியோய் -தப்பில்
குதியிட்டுத் ...
Full story
ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் மற்றும் வல்லமை இணைய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தையும், ஐக்கியா டிரஸ்ட் நிறுவனரும் மற்றும் எழுத்தாளருமான திரு. வையவன் அவர்கள் ’வல்லமைச் சிறுகதைகள்’ என்ற பெயரில் நூலை மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் கிரவுன் அளவில், 102 பக்கங்களில், எழுத்தாளர்களின் படங்களுடனும் சுருக்கமான அறிமுகத்துடனும் இந்நூல் வெளிவந்துள்ளது. வாசுவின் பல்வண்ண ஓவியங்கள், அட்டையை அலங்கரிக்கின்றன. திரு வையவன் அவர்களுக்கும், இந்த ...
Full story