முறையற்ற செயல்கள் (மகிழ்ச்சி) என்றும் நிரந்தரமில்லை…!

1

சித்திரை சிங்கர்

முறையற்ற செயல்கள் கொஞ்ச நாட்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த மகிழ்ச்சி ரொம்ப நாட்கள் நிலைக்காது என்பது இந்த “அங்காடி தெருவுக்கு வந்த ஆபத்து” மூலமாக அனைவரும் உணர முடிகிறது. இந்த அங்காடிகளினால் பெரும் பணம் பார்த்தது வியாபாரிகள்தான். அங்கு உழைத்த பணியாளர்கள் நிலை கொஞ்சம் மோசமானதாகத்தான் இருந்தது என்பது நேசமான உண்மை. இப்பகுதியில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும் என்பது ஒருபுறம் உண்மை என்றாலும், அந்த வியாபார இடங்களின் நெருக்கடி மக்களுக்கு அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை என்பது நாம் அனைவரும் கண் கூடாக கண்ட உண்மை. எப்படியோ இப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் நியாயமானதாகவே அனைவராலும் கருதப்படுகிறது. அவ்வப்போது எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக நமது நாடு ஜனநாயக நாடு என்பது உலக அரங்கில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப் பட்டு வருகிறது.

இந்த “அங்காடித்தெரு” திரைப்படம் வந்த பின்புதான் இப்பகுதியில் இயங்கும் பெருமையான நிறுவனங்களின் “உண்மை நிலை”யை அனைவரும் உணர முடிந்தது. திரைப்படங்களில் கொஞ்சம் மிகைப்படுத்தி காட்சிகள் இருந்தாலும் அடிப்படையில் உள்ள உண்மையினை யாரும் மறுக்க/மறைக்க முடியாது எனபது உண்மைதானே…? இப்படிப்பட்ட நிறுவனங்கள் இத்தனை நாட்களாக விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடங்கள் மூலமாக வந்த வருமானம் முழுவதையும் அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம். விதிமுறைகள் மீறி கட்டிய கட்டிடங்கள் மட்டும் உடனடியாக இடிக்கப்பட்டு, முறையான வியாபரத்துக்கு உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள். இதனால் “நியாயமாக வியாபாரம் செய்யும் சிலர் பாதிக்கபடாமல் இருக்க உதவியாக இருக்கும்”.கண்டிப்பான நடவடிக்கை தேவைதான்…! இந்தக் கண்டிப்பு கொஞ்சம் கருணை உள்ளத்துடன் இருக்க வேண்டும்…! இந்த நடவடிக்கையில் “அரசியல் புகுந்து சித்து விளையாட்டுகள் விளையாடாமல்”, நீதிமன்றத்தின் நேரிடையான பார்வையில் கண்காணிப்பில் இப்பகுதியில் உள்ள கடைகள் நல்ல முறையில் பொது மக்கள் வந்து செல்லும் விதமாக விசாலமாக “முறையான அனுமதியுடன் நமது அங்காடி தெரு புதிய பொலிவு” பெறுவதைத்தான் பொதுமக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மேலும், இப்போது அங்காடி தெருவுக்கு அந்த ஆபத்து விரைவில் அடுக்கு மாடி குடிஇருப்புகளுக்கும் வரவேண்டும்… கண்டிப்பாக வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதும் உண்மைதான். அப்போதுதான் அடுக்குமாடி வீடுகள் கட்டிட அனுமதி பெறுவது ஒருவிதம்…  கட்டுவது வேறுவிதம்…  என்று இரட்டைவேடம் போடும் “பில்டெர்ஸ” நிஜ முகம் வெளிச்சத்துக்கு வரும. இன்று அங்காடி தெருவுக்கு வந்த ஆபத்து போல, அனைத்து அரசு அனுமதி இல்லாத… மற்றும் முறையற்ற செயல்களுக்கு “ஆபத்து” வந்தால்தான் அனனத்து செயல்களும் “முறையாக நடக்கும்” என்பது திண்ணம்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “முறையற்ற செயல்கள் (மகிழ்ச்சி) என்றும் நிரந்தரமில்லை…!

  1. இந்த கட்டுரையை வரவேற்கிறேன். ‘…முறையற்ற செயல்களுக்கு “ஆபத்து” வந்தால்தான் அனனத்து செயல்களும் “முறையாக நடக்கும்” என்பது திண்ணம்…’ என்பதும் உண்மையே. நிறைய, கூட்டுக்களவாணித்தனமும், மக்கம் நலம் பதிக்கும் செயல்களும் முப்பது வருடங்களுக்கு மேல், ‘போர்வை யாதாயினும்’ சமூக விரோதிகளால் அமலில் இருந்துள்ளன. கடுமையான தண்டனைகள் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *