பிரான்சில் கம்பன் விழா – 2010

0

தகவல்:ஆல்பர்ட்,அமெரிக்கா

பிரான்சு க‌ம்ப‌ன் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்தும் ஒன்ப‌தாம் ஆண்டு தெய்வ‌ மாக்க‌வி க‌ம்ப‌ன் விழா, 2010 அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழ‌மை ஒரு நாள் பெருவிழாவாக‌ ந‌டைபெற‌வுள்ள‌து.

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாவை 31.10.2010 ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணிமுதல் மாலை 8.30 மணி வரை Maison de l’Inde , 7 (R) boulevard Jourdam, 75014 Paris என்ற இடத்தில் கொண்டாடுகிறது.

விழாவில் சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ராக‌, க‌லை இல‌க்கிய‌ ஆய்வ‌றிஞ‌ர் இந்திர‌ன் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ உள்ளார். விழாவில் எழிலுரை, த‌னியுரை,தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே!சூர்ப்பணகையே!இராவணனே என்கிற வ‌ழ‌க்காடு ம‌ன்ற‌ம் பேராசிரிய‌ர் பெஞ்ச‌மின் லெபோ த‌லைமையில் மூன்று அணியின‌ராக‌ வாதிடுகின்ற‌ன‌ர்.

க‌வியுரை க‌விச்சித்த‌ர் க‌ண.க‌பில‌னார் அவ‌ர்க‌ளும்,த‌மிழிசை திரும‌தி இராதா சிரீத‌ர‌ன் மாண‌வ‌ மாண‌விய‌ரும்,பாட்ட‌ர‌ங்கிற்குக் க‌விஞ‌ர் கி.பார‌திதாச‌னாரும் சிற‌ப்புச் சேர்க்க‌ உள்ள‌ன‌ர்.

த‌மிழ‌றிஞ‌ர் பெரும‌க்க‌ள் ப‌ல்வேறு ந‌க‌ர‌ங்க‌ளிலிருந்து வ‌ந்து க‌ம்ப‌ன் விழாவுக்கு சிற‌ப்புச் சேர்க்க‌ உள்ள‌ன‌ர்.இந்நிக‌ழ்வில் நாட்டிய‌க் க‌லைமாம‌ணி செலினா ம‌கேசுவ‌ர் மாண‌விய‌ரின் நாட்டிய‌ விருந்தும் ந‌டைபெற‌வுள்ள‌து.

விழா ஏற்பாடுக‌ளை பிரான்சுக் க‌ம்ப‌ன் க‌ழ‌க‌ம் சிற‌ப்பாக‌ ஏற்பாடு செய்துவ‌ருகிற‌து.

உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்குமாறு விழாக் குழுவின‌ர் வேண்டுகிறார்க‌ள்.

================================

  • * கவிஞர் கி. பாரதிதாசன், தலைவர்
  • * செவாலியே சீமோன் யுபர்ட், பொதுச்செயலாளர்
  • * பேரா. லெபோ பெஞ்சமின், செயலாளர்
  • * திருமிகு தணிகாசமரசம், பொருளாளர்
  • * செயற்குழு உறுப்பினர்கள்.
  • * விழாக் குழுவினர்,
  • * கம்பன் கழக மகளிர் அணியினர்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *