கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள் விழாவில் மாணவர்களுக்கு பரிசளிப்பு – செய்திகள்

0

திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் செயல்பட்டு வரும் சேவாலயா அறக்கட்டளையில் 24.12.2011 அன்று கணித மேதை இராமானுஜன் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் திரு.கண்ணன் பி.சீனிவாசன் (Chairman, P.K. Srinivasan Math Education & Research Trust), அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திறனாய்வு கணிதத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார். அவர் பேசுகையில் இராமனுஜன் அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும் தம் முயற்சியால் சிறந்த மேதையாக உருவெடுத்தார். சிறுவயதில் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார். ஆசிரியர்களின் உதவியோடு கணிதத்தை மென்மேலும் வெளிக்கொணர்ந்தார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலே பாராட்டப்பட்டவர். 3500க்கும் மேற்ட்ட கணிதத் தேற்றங்களை கண்டு பிடித்துள்ளார்.

கணிதத்தில் சிறந்ததற்க்காக Royal Fellowship பட்டத்தை பெற்றார். இவரைப் பற்றிய நூல்கள் 22க்கும் மேற்பட்ட பகுதிகள் வெளிவந்துள்ளன. மாணவர்களாகிய நீங்கள் நல்ல லட்சியங்களை மேற்கொண்டு எதிர் காலத்தில் சிறந்த மேதையாக வர வேண்டும் என்றும் ஒவ்வொருவர் மனதிலும் நல்ல தூண்டுதல் இருக்க வேண்டும் அவற்றை செயல்படுத்தி வெற்றிபெற வேண்டும் எனவும். ”நம் அன்றாட வாழ்வில் எந்த ஒரு செயலும் கணிதத்தின் பயன்பாடு இல்லாமல் நடைபெறுவதில்லை. மாணவர்கள் ஆழ்சிந்தனையை வளர்த்துக் கொள்ள கணிதத்திறன் பயன்படுகிறது. மாணவர்கள் கணிதத்தில் தேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள் மற்ற பாடங்களை பயில்வது மிகவும் எளிதாக இருக்கும். கணிதத்திறனை மேம்படுத்தும் வகையில் சேவாலயா வருடந்தோறும் நடத்தி வரும் இந்த திறனறித் தேர்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல கணித மேதைகளை உருவாக்கவும் இது வழி வகுக்கும்” என்று கூறினார்.

செல்வி.ஜிங், கனடாவைச் சேர்ந்த திரு.ரே. ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூரைச் சேர்ந்த இந்த தேர்வானது தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின்படி, அமைந்துள்ள பாடப்பகுதியிலிருந்து வினாக்கள் அமைக்கப்பெற்று 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்பெற்றது. தேர்வானது தமிழிலும், ஆங்கிலத்திலும் கொள்குறி வினா வகை (Objective Type ) முறையில் அமைந்திருந்தது.   இந்தப் போட்டியில் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 30 பள்ளிகளிலிருந்து 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

R.ஸ்ரேயா, எஸ்.ஆர்.வி.மெட்ரிக்ப்பள்ளி, பெருமாள்பட்டு, J.ஜான்சிலின், ஆர்,சி,எம் பள்ளி ஆவடி, R.புருஷோதமன், மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி,கசுவா,  J.ஷாம்லி, புனித தெரேசா மெட்ரிக்ப்பள்ளி, மண்ணூர்பேட்டை, S.அன்புசெல்வன், எஸ்.ஆர்.எம்.பள்ளி, அம்பத்தூர், S.ஷோபனா, மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி, கசுவா, விஜயலட்சுமி, சி.எஸ்.ஐ.மெட்ரிக்ப்பள்ளி, இராயப்பேட்டை ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளிதரன் அவர்கள் வரவேற்புரை வழங்க, திரு.ஜி.இளையராஜா, அறங்காவலர் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *