மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டி

1

சிங்கப்பூர் தமிழ் வமணற்கேணிலைப்பதிவர்களும் தமிழ்வெளி.காம் இணையத்தளமும் இணைந்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:

உங்களுக்கு எழுத்தின் மேல் ஆர்வம் இருக்கிறதா? சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்றுலாவைப் பரிசாக வெல்ல ஒரு வாய்ப்பு.

இணையப் பெருவெளியில், வலைப்பதிவுகளில் எழுத்துலா வரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும், எழுத்தார்வம் உள்ள தமிழன்பர்களுக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்களும் தமழ்வெளி.காம் இணையத்தளமும் இணைந்து நடத்தும் மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டிக்கு இந்த ஆண்டுக்கான அழைப்பு வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்…

சென்ற ஆண்டு நடைபெற்ற மணற்கேணி 2009 போட்டிக்கு சிறப்பான ஆதரவு தந்த பதிவர்களுக்கும், தமிழ் எழுத்தார்வலர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், நடுவர்களுக்கும் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகச் சிங்கப்பூர் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம்(http://www.tamilveli.com) இணையத்தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி போட்டியில் அரசியல்/சமூகம், இலக்கியம், அறிவியல் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பல தலைப்புகளில் கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது. பிரிவுக்கு ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வாரம் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். போட்டிக்குக் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள், டிசம்பர் 31, 2010. மேலும் விபரங்களுக்குப் பார்க்க – http://www.sgtamilbloggers.com

இந்த ஆண்டு நடைபெறும் மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டிகளில் மூன்று பிரிவுகளில் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று பிரிவுகளிலும் தலா ஒரு வெற்றியாளர் தகைசான்ற நடுவர்களால் முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட அம்மூவரும் ஒரு வார காலச் சிங்கப்பூர் சுற்றுலாவைப் பரிசிலாகப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு சிங்கப்பூருக்கு அழைக்கப்படுவார்கள்! (இரண்டு வழிகள் மட்டும்: சென்னையிலிருந்து சிங்கப்பூர், கொழும்பிலிருந்து சிங்கப்பூர்) சிங்கப்பூரில் ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பங்கேற்கும் மற்ற சிறந்த கட்டுரைகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழை முன்னிறுத்தி நடைபெரும் நிகழ்வு / போட்டியாதலால் ஆக்கங்களில் இயன்ற வரை தனித்தமிழ் முயற்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

அரசியல் / குமுகாயம்

1.களப்பிரர் காலம்
2.இலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் – நன்மை தீமைகள்
3.எல்லாச் சாதிகளும் ஒடுக்கப்பட்ட உணர்வு கொண்டிருப்பது ஏன்?
4.இந்தியக் கூட்டமைப்பில் தமிழர் நிலை
5.தமிழகத்தில் நகரமயமாக்கலும் விளைவுகளும்
6.கருத்துரிமைச் சுதந்திரம், ஊடகங்களின் வணிக நோக்கம், மாற்று ஊடகங்கள்
7.ஈழத் தமிழர் நிலை – நேற்று இன்று நாளை
8.சமச்சீர் கல்வி
9.கூட்டாண்மை(Corporate) அரசியல் – நவீன சுரண்டல்
10.புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தில் தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டு விழுமங்கள் – நேற்று இன்று நாளை

தமிழ் / இலக்கியம்

1.பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்
2.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
3.நாட்டுப்புற இலக்கியங்கள்
4.சேரர்கள்
5.உரையாசிரியர்கள்
6.தமிழ் விக்கிப்பீடியா
7.மெல்லத் தமிழினி வாழும்
8.எழுத்துச் சீர்திருத்தம்

அறிவியல் தமிழ் / தமிழில் தொழில்நுட்பம்

1.மரபுசாரா ஆற்றல் வளம்
2,தமிழ் கலைச் சொற்களைப் பயன்படுத்தி அறிவியல் கட்டுரை
3.தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை
4.அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும்
5. கணினித் தமிழ்

உங்கள் கட்டுரைகளை மின்னஞ்சலாக அனுப்பி வைக்கவும், போட்டி இறுதி நாள் டிசம்பர் 31, 2010 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும்.

அரசியல் சமூகம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி: politics@sgtamilbloggers.com
தமிழ் இலக்கியம் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி: literature@sgtamilbloggers.com
தமிழ் அறிவியல் பிரிவில் கட்டுரைகள் அனுப்ப வேண்டிய மின் மடல் முகவரி: science@sgtamilbloggers.com

போட்டி தொடங்கும் நாளுக்கு முன்னர் அல்லது போட்டிக்கான ஆக்கங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாளுக்குப் பின்னர் வரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது.

நன்றி!

இங்ஙனம்,

சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள் | தமிழ்வெளி.காம் இணையத்தளம்
http://www.sgtamilbloggers.com          | http://www.tamilveli.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மணற்கேணி 2010 கருத்தாய்வுப் போட்டி

  1. நல்வாழ்த்துகள்!

    //தமிழை முன்னிறுத்தி நடைபெறும் நிகழ்வு / போட்டியாதலால் ஆக்கங்களில் இயன்ற வரை தனித்தமிழ் முயற்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.//

    என்று அறிவித்ததைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

    கட்டுரையின் நீளம் அல்லது சொற்களின் எண்ணிக்கை பற்றிய கட்டுப்பாடுகள் என்ன என்பதையும் குறித்தல் நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *