நாஞ்சில் நாடனுக்குச் சாகித்திய அகாதெமி விருது

1

நாஞ்சில் நாடன்தமிழின் நவீன படைப்பாளிகளில் முக்கியமானவரான நாஞ்சில் நாடன், தமது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக, 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார்.

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் மும்பையில் வாழ்ந்தார். தற்போது கோயம்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். தலைகீழ் விகிதங்கள் இவரது முதல் நாவல்.

இவரின் மிக முக்கியமான அடையாளம், நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்து நடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

இவர், சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், கட்டுரைகள் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பங்களித்துள்ளார். அவற்றுள் சில இங்கே.

புதினங்கள்

* தலைகீழ் விகிதங்கள்
* மாமிசப்படைப்பு
* என்பிலதனை வெயில்காயும்
* மிதவை
* எட்டுதிக்கும் மதயானை

சிறுகதை தொகுதிகள்

* தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்
* வாக்குப்பொறுக்கிகள்
* உப்பு
* பேய்க்கொட்டு
* பிராந்து

கவிதை

* மண்ணுள்ளிப்பாம்பு

கட்டுரைகள்

* நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று
* நதியின்பிழையன்று நறும்புனல் இன்மை
* தீதும் நன்றும்

இயல்பான படைப்புகளால், நேர்மையான பதிவுகளால், உண்மையான வாழ்வைச் சித்திரிக்கும் நாஞ்சில் நாடனுக்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை வாசகர்கள் சார்பில் வல்லமை வாழ்த்துகிறது.

நாஞ்சில் நாடன் வாழ்க்கைக் குறிப்பு

==========================

தரவுகளுக்கு நன்றி – விக்கிப்பீடியா

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நாஞ்சில் நாடனுக்குச் சாகித்திய அகாதெமி விருது

  1. நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு குறித்து மிக்க மகிழ்ச்சி. அவருடைய வாசகர் சார்பில் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *