‘மறுமுகம்’ – திரைப்படம்

0

‘ஊமைவிழிகள்’ படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் ‘மறுமுகம்’ என்ற படத்தை இயக்குகிறார்.

‘12 Hours’ – மலேசியாவில் வெளிவந்த தமிழ்ப்படம். அந்நாட்டின் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. அப்படத்தின் கதை, திரைக்கதையை அமைத்திருந்தார் கமல். ‘முத்திரை’ படத்திற்குப் பிறகு இரண்டு ஹீரோக்கள் படத்தில் டேனியல் பாலாஜி – அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். இந்த வருடத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கும் ஒரு நாயகியாக மும்பை இறக்குமதி ரன்யா வலம் வருவார் என்பது உறுதி. ஏனெனில் நடிக்கும் முதல் படத்திலேயே ஆணித்தரமான நடிப்பை வெளிப்படுத்தும் மிக வலுவான பாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

அன்புக்கு ஏங்கும் பணக்கார இளைஞர்கள் இன்றைய நவநாகாரிக வாழ்க்கையில் நிறைய உண்டு. தன்னை யாராவது நேசிக்கமாட்டார்களா? என ஒரு பணக்கார இளைஞன் (டேனியல் பாலாஜி) ஏங்கும்போது மனக்கூடை நிறைய அன்பை சுமந்து கொண்டு பறக்கும் ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறான். அவளோ இன்னொரு இளைஞனான (அனுப்) வாழ்க்கையில் முன்னுக்கு வரத் துடிப்பவனிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். உள்ளுக்குள்ளே காதலை வைத்துக் கொண்டு, அதை அடைவதற்காக காய் நகர்த்தும் உச்சக்கட்ட த்ரில்லரை சொல்கிறது ‘மறுமுகம்’. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு முகம் இருக்கும். டேனியல் பாலாஜியின் இன்னொரு ‘மறுமுகம்’ காண்பவர்களை உறையவைக்கும் திகிலுடன் இருக்கும் என்றார் இயக்குனர்.

பானு சந்தர், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெற்றோர் தேர்வு செய்யும் பையன் வாழச் சிறந்தவனா அல்லது பெண் தானே தேர்வு செய்யும் பையன் சிறந்தவனா என்பதற்கும் ஒரு விடையைச் சொல்லும் படமாக ‘மறுமுகம்’ இருக்கும்.

திரைப்படக்கல்லூரி மாணவனான கனகராஜ் (மலேசிய தமிழ்படம் ‘12 hours’ படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே) ஒளிப்பதிவு செய்ய, இசையமைக்கிறார் அகஸ்தியா. பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான அகஸ்தியா முதன்முறையாக தமிழில் இசையமைக்க, முழுப்படத்திற்கும் அதாவது எல்லா பாடல்களுக்கும் வரிகள் தீட்டுகிறார் ஏக்நாத். தயாரிப்பு நிர்வாகத்தை சீனுவும், நிர்மலும் கவனிக்க, இணைந்து தயாரிக்கிறார் சங்கீதா ரெபெக்கா.

படம் சென்னை கடற்கரை பகுதிகளிலும், கொடைக்கானலிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *