இன்னம்பூரான்  

1.16: இனி ஸன் ட்ஸு பேசுவார். முதல் பகுதி: திட்டம் வகுப்பது: 

1.17: சமர்க்கலை நாடாளுவதற்கு இன்றியமையாதது.

1.18: வாகை சூடினால் வாழ்வு. தோல்வி தழுவினால் சாவு. அரண் (இருந்தால்) காக்கும். (எதிரி) அகழ் கடந்தால் எல்லாம் இழந்தோம். எனவே, தீவிரமான ஆய்ந்து அறிதல் வேண்டும். சூழல் அறிய வேண்டும், அரசே.

1.19: தமிழிலக்கியம் கூறுவது என்ன? ஐயனாரிதனார் என்ற புலவரின் புறப்பொருள் வெண்பா மாலை என்ற நூலின் ஆறாவது செய்யுள் நோக்குக.  

நிலையும் நிரையும் நிரைப்புறத்து நின்ற 

சிலையும் நெருமுனையுள் வைகி, இலைபுனைந்த 

கள்ளவிழ்க் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து 

நள்ளிருட்கண் வந்தார் நமர்… 

1.20: பொருள்: மலரும் தழையுமாகத் தொடுத்த மாலைகள் அணிந்த அரசே! வீரக்கழல் அணிந்தவனே! நமது ஒற்றர்கள் எதிரியின் நாட்டை ஊடுருவி, அவனுடைய சொத்து ஆன பசுக்கூட்டங்கள், வீரர் பலம் எல்லாம் அறிந்து கொண்டு வந்துள்ளனர். நீ அவற்றைக் கேட்டறிந்து, திட்டமிடு.  

 

படத்திற்கு நன்றி: http://dedroidify.blogspot.com/2009/06/sun-tzu-art-of-war.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *