செய்திகள்

சேவாலயாவில் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பிரிவு உபச்சார விழா

SEVALAYA
(Registered Charitable Trust)
63/32, I Main Road, Gandhi Nagar, Adyar, Chennai 600020.
Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.
Phone: 0442441009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.
E-mail:Sevalayamurali@gmail.com, Sevalaya2@gmail.com, Sevalayapro@gmail.com,Visit us at: www.Sevalaya.org.

09.02.12

செய்திக்குறிப்பு

இங்கிலாந்து, சீனா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து சேவாலயாவிற்கு தன்னார்வத் தொண்டு செய்ய வந்திருக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கு சேவாலயா சேவை மையத்தில் இன்று 09.02.2012 காலை 11 மணியளவில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.

உலகெங்குமிருந்து தன்னார்வத் தொண்டர்கள் சேவாலயாவை நோக்கி அதன் நற்பணி உணர்ந்து சேவையைப் புரிந்து தொண்டாற்றுவதற்காக வந்த வண்ணம் உள்ளனர். இன்று தன்னார்வத் தொண்டர்கள் சேவாலயாவில் ஆங்கிலம், வேளாண்மை, கலை, விளையாட்டு மற்றும் பற்பல துறைகளில் ஈடுபட்டு குழந்தைகளுக்கு அக்கலைகளை விதைகளாக விதைத்து விட்டு செல்கிறார்கள். சேவாலயாவின் புனிதமான சேவைகளையும், பணிகளையும் தங்களின் நாடுகளுக்கு எடுத்துச் சென்று ஒரு சிறந்த அமைப்பாக உருவாக்குகிறார்கள்.

ஸ்காட்லாந்திலிருந்து வந்திருக்கும் செல்வி. கிம் ஆண்டர்சன், இங்கிலாந்து பிரிஸ்டல் நகரத்திலிருந்து செல்வி. சார்லட் சாப்மென், சீனாவிலிருந்து செல்வி. கேரல் வென் மற்றும் பெவர்லி லோகென் தற்போது சேவாலயாவில் தன்னார்வத் தொண்டு புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

கிம் மற்றும் பெவர்லி Project Trust என்னும் அமைப்பு மூலம் சேவாலயாவின் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க வந்திருக்கிறார்கள். அவரிடம் நாம் பேசும் போது “சேவாலயாவில் வாழ்வின் ஒரு புதுக் கண்ணோட்டத்தை நான் கண்டுணர்ந்தேன்“ என்று புலகாங்கிதம் அடைந்தனர்.

இங்கிலாந்தின் Children’s Art Village லிருந்து வந்திருக்கும் சார்லஸ் சாப்மென் சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சிக்காக பழைய, பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தேவையற்ற காகிதங்களைப் பயன்படுத்தி குழந்தைகள் மூலம் அழகிய பறவைகளைத் தயாரித்தார்கள். இவை சென்னையில் ‘Russian Cultural Centre’ ல் பிப்ரவரி 20 மற்றும் 21 கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது.

இதைப் பற்றி சேவாலயா நிறுவனர் வி. முரளிதரனிடம் சார்லட் சாப்மென் பேசும்போது “சேவாலயா தனக்கு ஒரு இணையற்ற அனுபவமாக, ஒரு சிறந்த படிப்பினையாக திகழ்வதாகவும் சேவாலயா குழந்தைகளின் படைப்பாற்றலைக் கண்டு தினம் தினம் வியந்து போவதாகவும் இக்குழந்தைகள் வருங்காலத்தில் சிறந்த மனிதர்களாகவும், வல்லுநர்களாகவும் நிச்சயம் திகழ்வார்கள்” என்றும் உறுதிபட தெரிவித்தார்.

கேரல் வென் குழந்தைகளுக்கு ஆங்கிலம், இசை மற்றும் டேபிள் டென்னிஸ் கற்றுக்கொடுத்தார். தன்னுடைய தோழிகளுடன் சேவாலயாவின் பணிகளை இண்டர்நெட் மூலமாக தினமும் பகிர்ந்து கொள்கிறார். இதன் மூலம் பலர் சேவாலயாவிற்கு வர வேண்டும் என்று ஆர்வம் தெரிவிக்கிறார்கள்.

‘Cunningham Hill Junior School’ இருந்து கல்வி, கலாச்சார மற்றும் பண்பாட்டு சேவாலயாவிற்கு வந்து ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும் என்ற ஆழமான கருத்தை உணர்த்தி, “வசுதெய்வ குடும்பம்“ என்னும் தலைப்பில் அழகிய வீடுகளை அவர்களுடன் சேர்ந்து உருவாக்க வைத்தார்கள்.

ஏழ்மையான குடும்பங்களிலிருந்து அடித்தட்டு மக்களின் நம்பிக்கைத் துளிர்களாக முளைத்திருக்கும் இந்த சேவாலயா குழந்தைகள் உலக கண்ணோட்டம் வெளி உறவு மட்டுமின்றி உலக மக்களுடன் உறவு மேற்கொள்ள சேவாலயா ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு வருவது எதிர்கால சந்ததியருக்கு ஒரு விடிவெள்ளியாக திகழ்கிறது.

முன்னதாக சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.வி.முரளிதரன் அவர்கள் வரவேற்க, சேவாலயாவின் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. அன்னபூர்ணா அவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

 

சேவாலயாவுக்காக

(வி.முரளிதரன்)
நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்

 

Board of Trustees:
Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)
Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Dr.K.Kannan, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,
Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.N.Vikram
Advisory ommittee: Mr. A. Annamalai, Mr.K.Mohan, Mr.Muthaiah Ramanathan, Dr.G.Nammalwar,
Dr.D.K.Oza, IAS(Retd) Mr.R.Nataraj,IPS(Retd) Ms.Saalai Manikkam,
Hony, Co-Ordinator: Hony.Correspondent:
Mr.T.S.Venkataramani Mrs. Bhuvaneshwari Muralidharan

 

Share

Comment here