சீராசை சேதுபாலா

 

மொழிபெயர்ப்பைப் படித்தவுடன் எழுந்த சிந்தனைகளும் நூல் அறிமுகமும்।

 

படிக்கும் வாய்ப்பைத் தந்த பெரியவர், கண்ணதாசன் பதிப்பகம் மூலமாக 30க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்களை வெளிட்ட பெரியவர் லயன் சீனிவாசன்।
( அவரது ஆங்கில வலைப்பூ : http://densrinivasan.blogspot.in/p/blog-page_09.html

 

மாணாக்கர்கள் மத்தியில் பள்ளி/கல்லூரிகளில் மாதிரி சட்டமன்றம்/பாராளுமன்றம் நடத்துவதைக் கேள்விப்பட்டிருக்கின்றோம்। நுகர்வோர் மன்றம் துளிர்விடத் துவங்கியிருக்கின்றது। சில மாவட்டங்களில் வருடத்திற்கொரு கூட்டம் தவறாமல் நடந்து விடுகின்றது। ஆனால் மாதிரி நீதிமன்றங்கள் நடத்தப்பட்டிருகின்றனவா என்று கேட்டால் இல்லை என்றே பதில் சொல்ல முடியும்.

மாதிரி மாணாக்கர்கள் குறிப்பாகாகக் குழந்தைகள் நீதிமன்றங்கள் நடத்தவேண்டிய கால கட்டத்தில் நாம் வாழ்கின்றோம்। ஏனெனில் இந்தியாவிலும் குறிப்பாக, தமிழகத்திலும் விவாகரத்துகள் பெருகிவிட்டன. மாதிரி நீதி மன்றங்கள் நடத்தி குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்ச்சியூட்டினால் பெற்றோர் விவாகரத்து வழக்குத் தொடர மாட்டார்கள்.

உலகத்தில் உள்ள நீதிமன்றங்கள் எல்லாம் விவாகரத்து வழக்குகளை ஏற்று நடத்தக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டியிருக்கும்। வழக்கறிஞர்கள் விவாகரத்து வழக்குகளை நாங்கள் ஏற்று நடத்த மாட்டோம் என்ற வாக்குறுதி எடுக்க வேண்டியதிருக்கும்।

ஒவ்வொரு நாட்டிலும் நீதிமன்றத்தால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றன। விவாகரத்துப் பிரச்சனையை அந்தந்தக் குடும்பங்களே தீர்த்துக் கொள்ளட்டும்। முடிந்தால் சேர்ந்து வாழட்டும் இல்லை என்றால் பிரிந்து போகட்டும்। இத்தகைய குடும்பங்களின் சதவிகிதக் கணக்குகள் சொற்பமே. சதவிகிதக் கணக்குகள் பார்ப்பது தேர்தலோடு நிற்கட்டும். குடும்பங்களுக்கிடையில் ஒரு நீதிபதியும், இரு வழக்கறிஞர்களும் குறுக்கிட வேண்டாம்। நீதிமன்றத்தின் நேரமும் மிச்சமாகும். விவாகரத்துப் பெற்றபின் சேர்ந்து வாழும் தம்பதிகளும் இருக்கின்றனர்। நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அவர்களுக்கு விவாகரத்துப் பெற்றுத் தந்த வழக்கறிஞர்கள் அவர்கள்மீது தொடர்வார்களா? அத்தகையோரைப் பார்த்தால் புன்னகையோடு விலகிச் சென்று விடுவர்। நீதிமன்றத் தீர்ப்பைக் கிழித்தெறிந்து கட்டிப்பிடித்துக் கொண்ட தம்பதியரோடு கதையை முடித்த தமிழ்ப்படம் கூட வந்திருக்கின்றது।

சட்டத்திற்குப் புறம்பான கதையமைப்பு நீதிமன்றங்களை அவமதிக்கின்றது என்று எந்த வழக்கறிஞராவது நீதிமன்றத்தை நாடவில்லையே ஏன்? அவர்களுக்கு யார் பணம் கொடுப்பார்கள்?

கொத்தடிமை அகற்றல், சிறுவர்களை வேலைக்குச் சேர்க்காதிருத்தல், தெருவோர குழந்தைகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்தல், ஊனமுற்றோருக்கு உதவுதல் (எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே ?????) எதுவுமே முழுமை பெறவில்லை। சிறப்பாகச் செயல் படுவோரை இந்த வினாக் குறிகள் குறிக்காது।

விவாகரத்துப் பெற்றவர்களின் குழந்தைகள் அனைத்தும் பாதுகாப்பாக வளர்கின்றனவா? தீர்ப்பிற்கேற்றபடி குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனவா? பாதிப்புக்குள்ளானவர்கள் மீண்டும் வழக்கறிஞர்கள உதவியுடன் மீண்டும் நீதிமன்றத்தைத்தானே நாட வேண்டியதிருக்கின்றது।

சொத்துள்ள-பசையுள்ள குழந்தைகள் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றன। ஓய்வூதியம் பெறும் தாய்/தந்தையைச் சற்றுக் கவனித்துக் கொள்வது போன்று। பாசமும் நேசமும் கொண்ட தந்தையை /தாய/ தாத்தா/ பாட்டியை/ அம்மாவை முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டவர்கள் நல்ல பாதுகாப்பைப் பெறுவதும் உண்டு।

சிறுவர்கள் பாதுகாப்பு இல்லங்களுக்குச் சென்று பார்த்தால் சில உண்மைகள் தெரியவரும்। சிங்கிள் பேரண்ட் சில்ரன்ஸ்। தாத்தா-பாட்டியால் சேர்க்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர் – தாத்தா – பாட்டி- அல்லது இதர உறவினர்கள் யாருமே இல்லாதவர்கள் என்று அவர்கள் படும்பாடு ரத்தக் கண்ணீர வரவழைக்கும்। அவர்கள் தங்களை யாரும் நேசிக்க மாட்டார்களா என்று ஏங்குவதைப் பார்த்தவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவு செய்வதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்வார்கள்।

நீதிபதியின் கண்ணீர் என்று ஆரம்பித்துவிட்டுக் கதை எங்கோ செல்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்। இது மனம் போன போக்கெல்லாம் எழுதப்படுகின்ற கற்பனைக் கதையுமல்ல; நினைத்தபடியெல்லாம் எழுதுகின்ற சரித்திர நாவலுமல்ல। உண்மை நிகழ்வு.

உண்மையிலேயே ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றார்। நம் நாட்டில் அல்ல। வெளி நாட்டில்। பிரபல எழுத்தாளர் ஒருவரிடம்। அவரது பெயர் சார்லோட் ஹார்ட்விக் (CHARLOTTE HARTWICK – 12-05-1894-19-11-1988) ஹார்ட்விக் என்பது குடும்பப் பெயர்। தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்தவர்। இவரைப் பற்றிய தகவல்கள் ஆங்கில விக்கி பீடியாவில் இருப்பதாகத் தெரியவில்லை। இவரது பெயரில் பல்கலைக் கழகங்கள் எல்லாம் இயங்குகின்றன। ஆனால் அவரை உலகிற்கு அறிமுகப் படுத்திய பதிப்பகம் அவரைப் பற்றிய தகவல்களை நமக்குத் தருகின்றது। அந்தப் பதிப்பகம் அவர் உ.வே.சாமிநாதையர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்து வெளியிட்டது போன்று குழந்தைகளைப் பற்றிய அவரது ஆறு நூல்களை அவரது கையெழுத்துப் பிரதிகளை ஹார்ட்விக் குடும்பத்தாரிடமிருந்து கேட்டு வாங்கி வெளியிட்டுள்ளது

அந்த ஆறு நூல்களில் ஒன்றுதான் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்ணீர் ஆம்! கண்ணீர் சிந்திய கண்களுடன் தாம் பணியில் இருந்தபோது இளம் பிள்ளைகள் 90 பேர் அனுப்பிய கடிதக் கட்டுகளை சார்லோட் ஹார்ட்விக்கிடம் தருகின்றார். விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்குகளின்போது (தீர்ப்பளிக்குமுன்/ தீர்ப்பளித்தபின் ) அஞசலில் வந்து சேர்ந்தவை இவை। விவாகரத்திற்கு வந்த விசித்திரமான பெற்றோர்கள் பலரைப் பார்த்து விட்டேன்। எனக்கே ஒப்புதல் இல்லாத தீர்ப்புகளை வழங்கியதால் எத்தனையோ இரவுகள் நான் தூங்கவே இல்லை। என்றெல்லாம் பேசியிருக்கின்றார்। இவற்றைப் பற்றி எல்லாம் தாங்கள் எழுத வேண்டும். சமூகம் திருந்த வேண்டும். என் பெயரைக் குறிப்பிட வேண்டாம்। கடிதங்களின் உண்மைகள் மட்டும் மக்களிடம் போய்ச் சேரட்டும்।

இன்று இருவருமே இல்லை। உண்மைகள் அவரது நூல்கள் மூலம் சமூகத்திற்குச் சென்று கொண்டேதான் இருக்கின்றன.। ஆனால் சமூகம்தான் திருந்தியபாடில்லை। அந்த நீதிபதி விரும்பிய வண்ணம் விவாகரத்து வழக்குகள் இல்லாமற் போகவில்லை। அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றன। தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை।

அளப்பரிய சமூக நலம் சார்ந்த குறிக்கோளுடைய இந்த நூல் சென்னை அமைந்தகரையில் வாழும் எழுபது வயதுப் பெரியவர் லயன் சீனிவாசன் முனீஸ்வராவின் கண்ணில் பட்டுவிட்டது। சுமார் தொண்ணூறு குழந்தைகளின் கடிதங்களை உடனே மொழி பெயர்த்து விட்டார்। அச்சுக்குச் சென்றுள்ள நூலின் ஒரு பிரதியைப் படிக்கக் கொடுத்தது எனக்குக் கிடைதத நல்ல வர்ய்ப்பு। பெரியவர் குறித்து முதலிலேயே குறிப்பிட்டுவிட்டேன்.

விவாகரத்திற்கு விண்ணப்பித்த பெற்றோரின் குழந்தைகள் நீதிபதிக்கு எழுதிய கடிதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை:-

१ கனம் நீதிபதி அவர்களே!
நான் ஒரு வழக்கறிஞராகவோ அல்லது ஒரு நீதிபதியாகவா இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை। எதில் அதிகப் பணம் கிடைக்கும்? தங்கள் உண்மையுள்ள- ஸ்டீபன்

२।கனம் நீதிபதி அவர்களே!
நான் என் பெற்றோர்களை விவாகரத்து செய்யப் போகிறேன் … அவர்கள் இருவரும் விவாகரத்தைப் பெற்று விட்டார்கள் என்பதினால் இருவரில் ஒருவரைக் கூட எனக்குப் பிடிக்கவில்லை।

என்னிடம் பணமே கிடையாது। அங்கே ஓரிடத்தில் சந்தித்த வழக்கறிஞர், அவர்கள் (தாயோ-தந்தையோ) என்னை அடித்தாலொழிய தான் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சொல்லிவிட்டார்। நான் சந்திக்கும்போது இருந்த சூழ்நிலையில் அவர்கள் என்னை எதுவும் செய்யவில்லை। ஆனால் என் இதயம் நன்றாகக் காயப்பட்டு விட்டது.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் இதுவரை நேசித்தார்கள்। அவர்கள் இருவரும் இப்பொழுதும் என்னை நேசிப்பதாகச் சொல்லுகிறார்கள் இன்னும் கொஞ்ச நாட்களில் என்னையும் வெறுக்கத் துவங்குவார்கள் என்று நினைக்கிறேன்।

உங்களால் எப்படியாவது இதில் தலையிட்டு ஏதேனும் செய்யமுடியுமாவென்று பாருங்கள்। தங்கள் உண்மையுள்ள- வெண்டி.சி

கனம் நீதிபதி அவர்களே!
நாங்கள் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு நீதிமன்றத்தைத் துவக்கி இருக்கிறோம்। நீதிபதிக்கு ஒரு மேஜையும், சாட்சிக்கு ஒரு நாற்காலியும்இருக்கின்றன।

யாராவது நண்பன் குற்றம் செய்தால் உடனே இந்த நீதிமன்றம் விசாரிக்கும்। வாரம் முழுவதும் பள்ளி இருப்பதால் நீதிமன்றம் சனிக்கிழமைகளில் மட்டும்தான் செயல் படுகின்றது।

யாரோ ஒரு தாய், தன் குழந்தையை அடுத்த பகுதியிலிருந்து இங்கு கொண்டுவந்து சேர்த்திட முயற்சிக்கின்றார்। நாங்கள் அதை அனுமதிக்கலாமா? நன்றி! தங்கள் உண்மையுள்ள -விட்னி।

பி.கு. நான் இதுவரை நான்கு முறை தங்களைப் போல் நீதிபதியாக உழைத்திருக்கின்றேன்.

அனைத்தையும் சுருக்கிச் சொன்னால் பட்டியலிட்டது போல்தான் இருக்கும்। ஒவ்வொரு கடிதத்திலும் சோகம் இழையோடுகின்றது। எனவேதான் மூன்று பேரின் உணர்வுகளை உள்ளது உள்ளபடிக் கொடுத்துவிட்டேன்।

விவாகரத்து பெற்று விட்ட தம்பதியரின் வாரிசுகளுக்கு உரிய பதில் உலகில் இன்னும் கிடைக்கவில்லை। விவாகரத்தை நீதிமன்றம் தீர்ப்பாக வழங்கினால் அந்த பெற்றோரின் குழந்தைகளை வளர்த்திடும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்।

உரிய தொகைகளைப் பெற்றோரிடமிருந்து கண்டிப்பாக வசூலித்துவிட வேண்டும்। பெரும்பாலும் பெற்றோர் இருவரும் பணியாற்றுபவர்களாக இருக்கும் குடும்பங்களில்தான் இது அதிகம் சம்பளத்திலிருந்து நேரடியாகப் பிடித்தம் செய்து அரசிற்குக் கிடைக்குமாறு செய்து விடலாம்। வழியில்லாத சிறுவர்களை இலவசமாக வளர்த்து ஆளாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு।

மரண தண்டனையை விடக் கொடியது விவாகரத்துத் தீர்ப்பு। ஏனெனில் குடும்பத்திற்குள் வாழ்ந்த குழந்தைகள் பெற்றோர் பிரிவால் அன்பிற்காக ஏங்குகின்றனர்। அன்பை இழந்தவர்களில் பலர் குற்றவாளிகளாவதும் கண்கூடு। மனநோயாளிகளும் அதிகரித்து வருகின்றனர்।

மரண தண்டனையை ஒழிக்க இயக்கம் நடத்துவோர் அத்துடன் விவாகரத்து வழக்குகளையும் நீதிமன்றம் ஏற்கக் கூடாது தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்
போராட வேண்டும், சட்டங்கள் மாற்றப்படும் வரை।

வெகு விரைவில் வெளிவரப்போகும் இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழாவே வித்தியாசமாக இருக்கும்। எப்படி என்று சொன்னால் வியப்படைவீர்கள் ।

மிகவும் குறைந்த விலையே வைக்கப்படும்। வருமானம் முழுவதும் வித்தியாசமான முறையில் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனத்திடம் சேர்க்கப்படும்।

வழக்கு மனுதாக்கல் செய்யும் ஒவ்வொரு பெற்றோருக்கும் சார்லோட் ஹார்விட்விக் விருப்பப்படி இலவசமாகத் தரப்படும்। யார் இவர்? அவர்தானே மூல நூலை எழுதியவர், மறந்தா விட்டீர்கள், அதற்குள்।?

 

 

சீராசை சேதுபாலா

india.azhagi.com :: service to mankind 

http://rssairam.blogspot.com/

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “நீதிபதியின் கண்ணீர்

  1. நன்றி. எழுதத் தூண்டியவர் வல்லமையின் நிறுவனர் அண்ணா கண்ணன் அவர்களே..
    வல்லமையில் பிரசுரித்தமைக்கு நன்றி. இயங்கும் இணைய இதழ்கள் அனைத்தையும் ஐக்கியப் படுத்துங்கள். வாய்ப்புள்ளபோது வாய்ப்புள்ள இடங்களில் வாசகர் வட்டக் கூட்டம் நடத்துஙகள் இடம், இலவசமாகக் கிடைக்கும் மதியம் ஒரு வேளை உணவை அவரவரே கவனித்துக் கொள்ளட்டும். முடிந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

  2. இரண்டு, மூன்று முறை படித்தேன். என் கருத்து வேறு. சிக்கலான விஷயங்களுக்கு எளிய வழிகளில் தீர்வு காண விழைவது எஸ்கேபிஸம். ‘விவாகரத்துப் பிரச்சனையை அந்தந்தக் குடும்பங்களே தீர்த்துக் கொள்ளட்டும்।’ என்பது அந்த வகை. கொஞ்சம் விவாகரத்து சட்டங்கள் வந்த வரலாற்றை பாருங்கள். முனைவர் நாகபூஷணத்தின் முதல் கட்டுரையை படியுங்கள். நான் சொல்வது விளங்கும். இது ஒரு உதாரணம். பொத்தாம்பொதுவில் பேசினால், உண்மை மறைந்து கொள்ளும். சாரி, சீராசை சேதுபாலா.

  3. இரண்டு முறை படித்தேன். இதில்.அந்தந்தக் குடும்பங்களே தீர்த்துக் கொள்ளட்டும்।’குழப்பமாகவே உள்ளது. தெளிவாக இல்லை. இதுதான் தேவை என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கவேண்டும். மேலும் வெளி நாட்டு நடைமுறை குடும்ப வாழ்க்கைக்கும் நமது நாட்டு குடும்ப வாழ்க்கைக்கும் வித்தியாசம் நெறைய உள்ளது. சமீபத்தில், திருமணமான மூன்றாவது மாதமே , மதியம் சமையல் செய்து தரவில்லை என்பதற்காக கோவித்துக்கொண்ட கணவனும்…
    அந்த கோவத்தை சகித்துக்கொள்ள முடியாத மனைவி தற்கொலை செய்துகொண்டதையும் அதை பார்த்த கணவனும் தற்கொலை  செய்துகொண்டதையும் நாம் மறக்க முடியாது. இது போன்ற சின்னசின்ன விசயங்களுக்கு எல்லாம் மனதை சமாதனபடுத்திட முடியாத இந்திய குடும்ப வாழ்கையில் விவாகரத்து என்கின்ற நிலயில் “குடும்ப நீதிமன்றங்கள்” செயல்பாடுகள் இல்லையென்றால் இதுபோன்ற “இறப்புக்களை” தடுக்கமுடியாததாகிவிடும். இந்த இறப்புக்களைனால் தனிமையில் தவிக்கவிடப்பட்ட பிள்ளைகள் இருக்கின்ற அநாதை இல்லங்கள் இன்னும் வீதிதோறும் அதிகமாகிவிடும். எவ்வளவோ. குடும்பங்கள் சண்டை சச்சரவுகளுடன் ஆனாலும் குடும்பத்திவிட்டு பிரியாமல் கருத்து – மனம்.. வேறுபட்ட நிலையிலும் ஒன்றாக பிள்ளைகளின் நலன் கருதி ஒன்றாக வாழும் தம்பதியர்கள் நமது இந்தியகுடும்பங்களில் அதிகமாக உண்டு. இன்னமும் நமது இந்திய பெண்களுக்கும் ஆண்களுக்கும், “உன்பிள்ளையும் என்பிள்ளையும் நம் பிள்ளையுடன் விளையாடட்டும் என்று சொல்லும் மனபக்குவம்” வெளிநாட்டு தம்பதியர்களை போல இன்றுவரை வரவில்லை. இன்று கூட வெளிநாடுகளில் வசிக்கும் நமது இந்திய குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை பத்து வயதுக்கு மேல் குறிப்பாக பெண்பிள்ளைகளை அங்கு வசிக்க விரும்புவதில்லை.இந்தியாதான் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்று இங்கு கூட்டி வந்துதான் வளர்க்க விரும்புகிறார்கள். அது போல ஒற்றுமையான குடும்ப வாழ்க்கைக்கும் நமது இந்தியாதான் இன்று வரை உலக நாடுகளினால் விரும்பபடுகிறது என்பதும் உண்மை. பொத்தாம்பொதுவில் பேசினால், உண்மை மறைந்து கொள்ளும்.

Leave a Reply to ramasami

Your email address will not be published. Required fields are marked *