செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி தொடர்பானது

 

 

ராமநாதன் விதூசன்

வன்னியில் நடத்தப்பட்ட பெரும்போர் காரணமாக ஏராளம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.அதிலும் உழைக்கும் வலுவுள்ள பலர் உடலில் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக மாற்றுவலுவுள்ளவர்களாக மாறியுள்ளனர். நூற்றுக் கணக்கானவர்கள் இடுப்புக்கு கீழ் இயங்காதவர்களாக படுத்த படுக்கையான நிலையில் பெரும் துன்பத்தை சுமந்துள்ளனர். அவர்கள் சீரான வீடுகளும் வசதிகளும் மருத்துவத்திற்கான பண வசதியும் இல்லாத நிலையில் வலிகளோடு வாழ்ந்து வருகின்றனர். வீட்டுத் திட்டங்களை முற்றிலுமாக பெறாத நிலையில் தறப்பாள் கொட்டகைகளின் வாழ்வு தொடர்கின்றது. இதில் இடுப்புக்குக் கீழ் உணர்வற்று இருக்கும் உறவுகளின் நிலை கவலைக்குரியது. அவர்களுக்கு படுக்கை வசதிகள் மருத்துவப் பராமரிப்பு, போசாக்கான உணவுகள் என்பன முக்கியமானது.

இவ் விடையத்தில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்து வாழ்வாதரத்திற்கு வழியின்றி மிகவும் கஷ்டப்படுகின்றோம் எங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு நல்ல பதிலை தங்களிடம் இருந்து எதிர்பாக்கின்றேன் தங்களின் பார்வைக்காக இரண்டு புகைபடம் அனுப்புகின்றேன் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

முகவரி = VAROD LIFE ,PAMPAIMADU,MANAAR ROD,VAVUNIYA, SRILANKA

Comment here