யாருக்கு தெரியும்?

 

ஜான் (பி.ஆர்.ஓ)

அருபெரே ஆர்ட் வென்சுரா பி லிமிடட் S  ஸ்ரீதரன் தயாரிக்க பெருசு, விலை. சுட்டபழம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் கணேசன் காமராஜ் 4 வது படமாக இயக்கியிருக்கும் படம் யாருக்கு தெரியும்

உலகளவில் எந்த சினிமாவை எடுத்துக் கொண்டாலும் ஒரு ஹீரோ-ஹீரோயின் – வில்லன் இப்படி ரெகுலரான ஒரு பார்முலாவில் தான் கதைகள் இருக்கும். அப்படியில்லாமல் எப்படி வித்தியாசப்படுத்தி கதை அமைக்கலாம் என்று யோசித்தபோது உதித்ததுதான் யாருக்கு தெரியும். இதில் வரும் முக்கியக் கதாபாத்திரங்களான 7 பேரில் யாருக்கும் யாரையும் தெரியாது.படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் முதலில் கண்டு பிடிக்க இயலாது. அப்படி ஒரு சிக்கலான முடிச்சினைப் போட்டு விட்டு விறுவிறுப்பான காட்சிகளுடன் படம் நகரும். இயக்குனர் பாக்யராஜ் தான் யாருக்கு தெரியும் இயக்குனர் கணேசன் காமராஜின் குரு. பாக்யராஜ் தனது திரைப்படங்களில் கிளைமாக்ஸில் வரும் முடிச்சினை முதலில் போட்டுவிட்டு அதனை அவிழ்ப்பதற்கான திரைக்கதையை இறுதியாக எழுதிமுடிப்பார். அதைப்போல இதில் முதல் பாதியில் வரும் 13 சீன்கள் வரை யார் யார் என்பது தெரியாமலே படம் நகரும். கடைசி 7 காட்சிகளில் அதற்கான முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு மர்மங்களுக்கான விடைகள் தெரியும். அந்த அளவிற்கு விறுவிறுப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

முழுவதும் இரவிலேயே படம்பிடிக்கப் பட்ட யாருக்குத் தெரியும் படத்தின் படப்பிடிப்புகள் தினமும் மாலை 6 மணிக்குத் தொடங்கி மறு நாள் காலை வரை நடந்திருக்கிறது. படத்தில் நடித்த அத்துனை நடிகர்களும் யாருக்குத் தெரியும் படப்பிடிப்பு முடியும் வரை அமெரிக்க நேரத்தை பின்பற்ற வேண்டியதாயிற்று. சில நடிகர்கள் பகலில் வேறு சில படங்களிலும் நடிக்க வேண்டியிருந்ததால் கிட்டத்தட்ட அத்துனை நாட்களிலும் தூக்கத்தை முழுவதுமாகவே தொலைத்து விட்டனர் என்றால் அது மிகையாகாது.

நிஷாந்த்,திலீப், அச்சுதா, ஹரிஷ் ராஜா, சஞ்சனா, கலாபவன் மணி மற்றும் ஜெயபிரகாஷ் நடிக்கும் மிகவும் புதுமையான திரில்லர் படமான யாருக்கு தெரியும் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கும். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட யாருக்கு தெரியும் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தினை 3 க்கும் மேற்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் மகேஷ் கே தேவ். தமிழ்ப்படத்திற்குப் பிறகு இசையமைப்பாளர் கண்ணன் இசையமைத்திருக்கும் படம் யாருக்கு தெரியும். சண்டைப்பயிற்சியை மூத்த சண்டைக்காட்சி அமைப்பாளர் சூப்பர் சுப்பராயனும், ஆர்ட் டைரக்‌ஷனை பி எல் தேவாவும் பார்த்துக்கொள்ள லைன் புரொடியூசராக கிருஷ்ணமூர்த்தியும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

 தயாரிப்பாளர் ஸ்ரீதரன் கூறுகையில், “ இந்தக்கதையை இயக்குனர் கணேசன் காமராஜ் என்னிடம் சொல்கையில் 18 இடங்களில் கேள்விகள் கேட்கவேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன்…ஆனால் அந்தக் கதையின் கடைசி 15 நிமிடங்களில் இயக்குனர் சித்தரித்திருக்கும் காட்சிகள் அதற்கான விடைகளாக இருந்தன. இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்கும் இதே அனுபவம் ஏற்படும். ரசிகர்களுக்கு முழு விருந்து அளிக்கும் படமாக யாருக்கு தெரியும் இருக்கும்” என்றார்.

யாருக்கு தெரியும் படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களை வாலியும் யுகபாரதியும் எழுதியுள்ளனர்.

 

செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

Share

About the Author

has written 222 stories on this site.

வல்லமை செய்தியாளர்-1

Write a Comment [மறுமொழி இடவும்]


six − = 5


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.