3000 போட்டியாளர்களில் வெள்ளி விருது வென்ற சேவாலயா குழந்தைகள்!

0

 

சேவாலயா மாணவர்கள் 2012ம் ஆண்டிற்கான பிரேமரிக்கா வழங்குகின்ற சமூக விருதுக்கு இறுதிச்சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சமூகத்தை முன்னேற்றுவதற்காக பாடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவும் சமூகத்தின் தரத்தை உயர்நிலையில் கொண்டு செல்வதற்காக ஈடுபடுகின்ற் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக “ பிரேமரிக்கா “ என்னும் நிறுவனமானது சமூக விருதுகளை வழங்க முடிவு செய்தது. இந்த விருதினைப் பெற 3000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த உன்னதமான அறிவிப்பை அறிந்த சேவாலயா பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் M.S. மணிகண்டன் மற்றும் அவனது நண்பர்கள் ஒன்று சேர்ந்து சமூகத்தின் மீது ஓர் அக்கறை கொண்டு ஓர் உறுதியான முடிவினை எடுத்தனர். இம்முடிவின் முக்கிய நோக்கமானது இன்றைய விவசாயிகள் செயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் நிலங்களில் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதனை முற்றிலுமாக தவிர்த்து இயற்கை உரங்களான மாட்டுச்சாணம், மற்றும் கோமியம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், அதிகமான விளைச்சலைப் பெற முடியும் என்பதை அருகில் உள்ள பல கிராமங்களில் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.

இதனை சேவாலயா நிறுவனத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயன்படுத்தி விளைச்சலையும் பெருக்கிகாட்டியுள்ளார்கள். இந்த அபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக சேவாலயா அறக்கட்டளையானது பிரேமரிக்கா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

அந்த விருது பெறும் விழாவானது 02.04.12 அன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் சேவாலயா நிறுவனமானது இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்று வெற்றிபெற்றது. இதனை சேவாலயா மாணவர்களுக்கு சிறப்பு விருதினை திரு. யஷ்பால் (இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர்) அவர்கள் வழங்கி பெருமைப்படுத்தினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *