செய்திகள்

சேவாலயாவிற்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது

 

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் அமைந்துள்ளது சேவாலயா தொண்டு நிறுவனம்.

இச்சேவை மையத்தை தொடர்ந்து 24 ஆண்டுகளாக முற்றிலும் இலவசமாக சிறப்புடன் நடத்தி வரும் சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திரு.முரளிதன் அவர்களுக்கு புதிய தலைமுறை சார்பில் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்த புதிய தலைமுறைத் தொலைக்காட்சியானது மக்களிடருந்து வாக்குகள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையம் மூலமாக இவ்விருதுக்குரிய நபரைத் தேர்ந்தெடுத்தது.

சேவாலயா சேவை மையத்தில் மகாகவி பாரதியார் பெயரில் பள்ளி இயங்கி வருகிறது. இதில் ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் 1500 பேர் முற்றிலும் இலவசமாக கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியானது தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 100% தேர்ச்சியை பெற்று வருகிறது. மேலும் ஆதரவற்றக் குழந்தைகளுக்காக சுவாமி விவேகானந்தர் இல்லம், அன்னை தெரெசா இல்லத்தை இலவசமாக நடத்தி வருகிறது. சுவாமி இராமகிருஷ்ணர் பெயரில் ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லத்தையும் வினோபாஜி பெயரில் பால் வற்றிய பசுக்களையும் பராமரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களுக்காக இலவச தையற் பயிற்சியும் இயற்கை விவசாயப் பயிற்சிகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

http://youtu.be/7hidoc3tOwQ

சேவாலயாவுக்காக

திரு.கிங்ஸ்டன்
(மைய நிர்வாகி, கசுவா)

Share

Comment here