இன்னம்பூரான்

எங்கே போகிறோம்? உலகெங்கும் இதழ்கள் இந்தியாவை கேலி செய்கின்றன. சர்வதேச சந்தையில் உரைகல் தேய்க்கும் Standard & Poor போன்றோர் இந்தியாவை நிதி நிலை மதிப்பீட்டில் ‘அம்போ’ என்று இறக்கிவிடுகிறார்கள். இந்திய ரூபாய் அதலபாதாளம். புள்ளி விவரங்கள் எல்லாம் தகாலடி என்று பெரிசுகள் பேசுகின்றன. ரிசர்வ் வங்கி பரமபத சோபான மயக்கத்தில். ஆடிட்டர் ஜெனெரலோ 2ஜி, ரிலையன்ஸ் எரிவாயு, நிலக்கரியையே காசை கரியாக்குவது என்றெல்லாம் கிடுக்கிப்பிடி போட்றார். உச்ச நீதி மன்றத்தில் சொச்சம், மிச்சம் இல்லாமல் எல்லாரும் Sorry-go-round அடிக்கிறார்கள்.

இன்று வந்த செய்தி: ஆனானப்பட்ட துணிமணி இலாக்காவும், கனரக தொழில் இலாக்காவும், தங்களுடைய வருடாந்திர மானியத்தில், 63% & 60% செலவை மார்ச் 31 அன்று செய்திருக்கிறார்கள். 364 நாட்கள் என்ன செய்து வந்தார்கள் என்பது கேள்விக்குறி. ஆனால், ஒன்று திண்ணம். கொடுக்கல், வாங்கல், விளம்பரம், சின்ன/பெரிய கட்டுமானங்கள், வீண் செலவு, அள்ளி தெளிப்பது எல்லாவற்றுக்கும் இந்த வருடக்கடைசி ஊதாரித்தனம் தான் ஊற்றுக்கண்.

அன்று (1956) வந்த செய்தி: கொடுக்கல், வாங்கல், விளம்பரம், சின்ன/பெரிய கட்டுமானங்கள், வீண் செலவு, அள்ளி தெளிப்பது எல்லாவற்றுக்கும் இந்த வருடக்கடைசி ஊதாரித்தனம் தான் ஊற்றுக்கண்.

அன்று ஆடிட்டர் ஜெனெரல் சொன்னது: சுக்கு, மிளகு, திப்பிலி. அன்றிலிருந்து, இன்று வரை அரசு காதில் விழுந்தது: ‘சுக்குமி, ளகுதி, ப்பிலி…’!

ஃபோட்டோ நன்றி: ஆழ்கடல் களஞ்சியம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “‘சுக்குமி, ளகுதி, ப்பிலி…’ (1)

  1. அன்பினிய நண்பரே ,
    சிறியதோர் கற்கண்டுத் துண்டில் பெரிய சுவை இருப்பது போல், அருமையான சிந்தனையைத் தூண்டும் விடயத்தை சுப்வைபடக் கூறியுள்ளீர்கள்.
    அன்பான வாழ்த்துக்கள்
    அன்புடன்
    சக்தி

  2. நன்றி, சக்தி,பாருங்களேன். பல்லாண்டு, பல்லாண்டுகளாக அழுத்தம் திருத்தமாக கண்டித்தும், சண்டித்தன்அம் செய்யும் அரசை என்னவென்று சொல்வது!. இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனெரல் பதவி ஆயுசு பரியந்தம். ஆனால்,  எனக்கு அறிமுகம் உள்ள ஸர் ஜான் போர்ன் 20 வருடம் பதவியிலிருந்தார். பதவி மோஹம் தலைக்கேறியது. வேலை போய்டுத்து. இந்தியாவில் அரசு வேண்டப்பட்ட ஆளை தேடுகிறது, ஜனாதிபதி பதவிக்கும், இந்த பதவிக்கும்! இருந்தாலும், எங்கள் ஆகர்ஷணத்தால், அப்படி வந்தவர்கள் கூட நம்ம பக்கம், திரு.வினோத் ராய் மாதிரி.இந்த பத்தி  சகல கலா கல்கண்டாக வர, உங்கள் மாதிரி வாசகர்களின் கருத்து வரவேண்டும். என் பணி விழிப்புணர்ச்சியை கூட்டுவது.ஆமாம், இந்த வல்லமை ஏன் இந்த நீர்த்த நிறத்தை பயன் படுதுகிறது? படிக்க முடியவில்லஇ. அதான் கருத்துக்கள் வருவதில்லையோ?லண்டன் வரும்போது, சந்திப்போமாக.இன்னம்பூரான்

  3. சரியான தலைபிட்டீர்கள்!

    சுக்குமி – ளகுதி -இப்பிலி

    தில்லான ஸ்டைலில் இந்த சிலேடை
    மார்ச் 31 திகிடுதத்த நாட்டியத்துக்கு ஜோரான பொருத்தம்!

     உடம்பில் ஜலதோஷம் ஏறினால் – கடுகுப் பத்தும்
    தோற்படை ஏற்பட்டால் கடுக்காய்ப் பத்தும்

    வயிற்றைக் கழுவ கடுக்காய்க் கஷாயமும்
    கண்ட ஜூரத்துக்குக் கடுகுத் துவையலும்

    இந்தப் பொருளாதாரப் பிணியாளர்களுக்கு, கடுகுக்குள் கடுக்காய் வைத்து – சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துப் புடம் போட்டுச் சிந்தூர பஸ்பம் தயாரித்தளித்தாலும்காணாது

    திட்டமிடல் இல்லாதப் பொருளாதாரம் – இங்கு ஆதாரமே சேதாரம்!

    சுத்தியை சுலபாய் முழுங்குபவர்களுக்கு

    சுக்குமி – ளகுதி -இப்பிலி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *