வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை நிர்வாகிகள் தேர்வு

 

 

மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

வட அமெரிக்காவில் உள்ள, ஐக்கிய அமெரிக்கா மாகாணங்கள் மற்றும் கனடா நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ்க் கொண்ட கூட்டமைப்பாக, கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளக வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இப்பேரவையானது எதிர்வரும் ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் பால்டிமோர் நகரில் தனது வெள்ளி விழாவையும் கொண்டாடவிருக்கிறது.

வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின், 2012-2014 ஆகிய ஆண்டுகளுக்கான தேர்தல் பணிகள் கடந்த ஒரு மாதமாக, தேர்தல் அலுவலர் திரு.சிவானந்தம் மாரியப்பன் (மின்னசோட்டா தமிழ்ச்சங்கம்) அவர்களின் மேற்பார்வையில் இடம் பெற்றன.

இத்தேர்தலில், கிட்டத்தட்ட 26 தமிழ்ச்சங்கங்கள், பேரவைப் பேராளர்கள், வாழ்நாள் உறுப்பினர்கள் எனப் பலரும் நேரடியாகப் பங்கு பெற்றார்கள். முடிவில், கீழ்க்கண்டவர்கள் பேரவை நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி நியூயார்க் நகரில் அறிவித்தார்.

தலைவர் : முனைவர் தண்டபாணி குப்புசாமி
(பனை நிலம் தமிழ்ச் சங்கம் – சார்ள்சுடன் – தென் கரோலினா)
துணைத் தலைவர்: திரு.பீற்றர் யெரோணிமூஸ்
(வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் – வாசிங்டன் டி.சி.)
செயலாளர்: பதிவர் பழமைபேசி என்கிற திரு. மெளன.மணிவாசகம்
(தென்-மத்திய தமிழ்ச் சங்கம் – மெம்ஃபிசு – டென்னசி)
துணைச்செயலாளர்: திருமதி. செந்தாமரை பிரபாகர்
(சார்லட் நகர தமிழ்ச் சங்கம் – வட கரோலினா)
பொருளாளர்: திரு. தங்கமணி பாலுச்சாமி
(அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் – அட்லாண்டா – ஜார்ஜியா)
இயக்குநர் 1: திரு. கரு மலர்ச்செல்வன்
(பேரவை ஆயுட்கால உறுப்பினர் – ஃக்யூசுடன் – டெக்சாசு)
இயக்குநர் 2: திரு. யோபு தானியேல்
(மிசெளரி தமிழ்ச் சங்கம் – செயிண்ட் லூயிசு – மிசெளரி)
இயக்குநர் 3: திரு. பிரகல் திரு
(கனடியத் தமிழர் பேரவை – கனடா)
இயக்குநர் 4: திரு. சாரங்கபாணி குகபாலன்
(இலங்கை தமிழ்ச் சங்கம் – அமெரிக்கா)

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் அரசு செல்லையா, முன்னாள் தலைவர் திரு.க.தில்லைக்குமரன் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் அனைவரும், ஜூலை மாதம் பால்ட்டிமோர் நகரில் கோலாகலமாய் இடம் பெறவிருக்கும் பேரவை வெள்ளிவிழாவில் தத்தம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள்.

செய்தியாளர்-1

வல்லமை செய்தியாளர்-1

Share

About the Author

has written 225 stories on this site.

வல்லமை செய்தியாளர்-1

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.