இராஜராஜேஸ்வரி

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே – இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே

வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து

போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா

விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா
கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்

தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்

சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்

பிரார்த்திக்கும் உதடுகளைவிட, பிறருக்கு உதவும் கரங்களே புனிதமானது”.

உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை !
மீசைக் கவிஞன்
அன்று வைத்த
சிந்தனை !!

வரப்புயர” நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்
கோன் உயர அரசு உயரும்
மே மாதம் முதல் நாளை உலகெங்கும் சர்வதேசத் தொழிலாளர் நாளாக நாம் கொண்டாடுகிறோம்.

உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்!

உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்!

1990ஆம் ஆண்டு மே தின நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை நேப்பியர் பூங்காவிற்கு, “மே தினப் பூங்கா” எனப் பெயரிட்டு; அங்கு மே தின நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது;

மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ உருவாகவில்லை.

மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது.

அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகத் தொழிலாளர்களே விழித்தெழுங்கள் என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொள்ளவேண்டிய உழைக்கும் திருநாள் .. விடுமுறை தினமல்ல.. உழைத்து சிறக்கவேண்டிய நன்நாள்..

ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *