மூன்று முடிச்சு மெகா தொடர் – பாலிமர் டிவி

 

செல்வரகு

நகர்ப்புற நடுத்தர வகுப்பு குடும்பத்துப் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அழகுற சித்தரிக்கும் தொடர் மூன்று முடிச்சு. கட்டுப்பாடான ஒழுக்கம், எதிர் காலத்தில் கணவன் வீட்டில் அடங்கி வாழ வேண்டிய போதனை இவற்றுடன் வாழ்கிறாள். அவள் தந்தையையும் தந்தை தன் மகளையும் உயிருக்குயிராய் நேசிக்கின்றனர்.

வீட்டில் சீமாவுக்கும் பிரேமுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கிறது. வீட்டிற்குத் தெரியாமல் ஆடல் போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு சுற்றாக முன்னேறிக் கொண்டிருக்கும் சீமாவுக்கு வெற்றி இன்னும் சில சுற்றுகளில் காத்திருக்க…. வீட்டிற்குத் தெரியாமல் எவ்வளவு நாளைக்குத்தான் மறைப்பது என்கிற தவிப்பில் சீமாவும்… சீமா ஆடினால் நிச்சயம் வெற்றிபெறுவார் அத்துடன் தங்களது நிகழ்ச்சி நல்ல முறையில் ரசிகர்களைச் சென்றடையும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பக்கம் சீமாவைத் துரத்த… ஒரு சாதனையாளர் நம் வீட்டில் உருவாவது தெரியாமலே சீமாவுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை அவரது பெற்றோர் நிராகரிக்க… சீமா என்ன செய்யப்போகிறார்… போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டு வெற்றிபெறப்போகிறாரா..?அல்லது குடும்பத்தினருக்குப் பயந்து இதுவரை பெற்ற வெற்றிகளையும் தியாகம் செய்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடப்போகிறாரா..? என்பது தான் இந்த வார விறுவிறுப்பு.

வாழ்க்கையில் அவளது கனவுகளுக்கும் கட்டுப்பாடான வளர்ப்பு முறைக்கும் இடையே அவள் எதிர்கொள்ளும் சவால்களுடன் சுவையான திருப்பங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது மூன்று முடிச்சு. பாலிமர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வரை வெள்ளி வரை தினமும் இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகிறது.

Thanks & Regards

S.Selvaragu-PRO (Film & Channel)
9003024334
9382209649
8015765631
selvaragu.s.pro@gmail.com

About the Author

has written 54 stories on this site.

செல்வரகு