கவிதைப் பட்டறையும் முத்தமிழ் முகாமும்

0

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும், தென்னகக் கலை பண்kavidhaippattaraiபாட்டு மையமும் இணைந்து நடத்தும் கவிதைப் பட்டறை (Poetry Work Shop) மற்றும் முத்தமிழ் முகாம் ஆகிய நிகழ்ச்சிகள், தமிழ் நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் 2011 பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை நடைபெற உள்ளன.

கவிதைப் பட்டறையில் தமிழின் முக்கிய கவிஞர்கள் கலாப்பிரியா, ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்தாளர் பிரபஞ்சன், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், ஓவியர் டிராட்ஸ்கி மருது போன்றவர்கள் பங்கேற்று, கவிதைக் கலை பற்றியும், இன்று உலகளவில் நிகழும் கவிதைப் போக்குகள் பற்றியும் உரையாற்றுகின்றனர். முக்கிய கவிஞர்கள் தங்களின் பிரபலமான கவிதையைத் தாங்கள் எழுதிய விதம் பற்றியும் விளக்க உரை ஆற்ற உள்ளனர்.

முத்தமிழ் முகாம் என்ற நிகழ்வில் நாவல், சிறுகதை, தமிழிசை, நவீன நாடகம் ஆகியவை பற்றி பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, பிரசன்னா ராமஸ்வாமி போன்ற முக்கிய படைப்பாளிகள் பங்கேற்கின்றனர்.

கவிதைப் பட்டறை, முத்தமிழ் முகாம் ஆகிய இந்த நிகழ்வுகளை கவிஞர் கனிமொழி, எழுத்தாளர் த.ஜெயகாந்தன் ஆகியோர் தொடக்கி வைக்கின்றனர்.

கவிதைப் பட்டறையில் பங்கேற்க விரும்புவோர் www.kavidhaippattarai.com என்ற இணையதள முகவரியிலும், முத்தமிழ் முகாமில் பங்கேற்க விரும்புவோர் www.muthamizhmugam.com என்ற இணையத்தள முகவரியிலும் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் தொடர்புகளுக்கு கவிஞர் உமா சக்தி (தொடர்பு எண் – 98409 78327) புவனேஸ்வரி (தொடர்பு எண் – 044-24937471) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு இயல் இசை நாடக மன்றச் செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *