பன்னிரு திருமுறை – குரலிசைப் பதிவு

1

 

 

சித்திரை 27, 2043
தவத்திரு குருமகாசந்நிதானம் அவர்கள்
தருமபுரம் ஆதீனம்
மயிலாடுதுறை 609001

திருவடிகளுக்கு வணக்கம்.

தேவாரம் மின்னம்பல தளத்தில் பன்னிரு திருமுறைகள் முழுவதையும் குரலிசையாகக் கேட்கும் முயற்சிக்கு முழுமையான நன்கொடைத் தளம் அமைப்பவர்கள் சிங்கப்பூர் திருமுறை அன்பர்கள். பெரிய புராணப் பதிவு, தருமபுரம் சுவாமிநாதன் குரலிசை உரிமம் பெறுதல் தொடர்பான பணிகளை முன்பு உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். சிங்கப்பூர்த் திருமுறைத் தொண்டர்களின் இந்த நற்பணிக்குத் தங்களின் ஆசியை வழங்கினீர்கள். குரலிசைப் பதிவாகாத திருக்கோவையார், திருமந்திரம், 11ஆம் திருமுறை தொடர்பான பணியின் விவரங்களைக் கீழே தருகிறேன்.

நன்கொடையாளர். திரு. கே. ஆர். குமார், திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர்: 34499 திரு. ஏ. கே. வரதராசன், திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர்: 34230
திரு. இரா. சிவசுப்பிரமணியன், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர் 34230
திரு. எல். வேங்கடராமன், திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன்சிங்கப்பூர்: 17115
திரு. எல். சுரேசுக்குமார் திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர்: 17115
திரு. இராம. கருணாநிதி, திருமுறை மாநாட்டுக் குழுத் தலைவர். சிங்கப்பூர்: 17115
பேரா. அனந்தநாராயணன், திருமுறைத் தொண்டன், கனடா: 17115
திரு. ஜீ. சுந்தரம், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 17115
திரு. எல். சிறி கணேசன், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 10269
கே. எச். கே. அரங்கன், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 10001
திருமதி மருத்துவர் சித்திரா சங்கரன், திருமுறைத் தொண்டர், சிங்கப்பூர்: 8558
திரு. ஆர். எசு. இரவி, திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 8558
திரு. செல்வக்குமார், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 8558

ஆகியோர் திருக்கோவையார் (400), திருமந்திரம் (3000), 11ஆம் திருமுறை (1395) ஆக மொத்தம் 4795 பாடல்களைப் பதிவு செய்ய முற்பணமாக மொத்தம் ரூ. 234,476 நன்கொடை வழங்கினார்கள்.

14.5.2009 தொடக்கம் திருமந்திரப் பதிவு தொடங்கியது. 19.07.2009 வரை ஓதுவார் தருமபுரம் ஞானப்பிரகாசம் குரலிசைத்தார், 193 பாடல்கள் பதிவாயின.
4.4.11 தொடக்கம் ஓதுவார் திருவரங்க யயாதி 10.8.11 வரை திருக்கோவையார் 400 பாடல்களைக் குரலிசைத்தார், பதிவாகின.

29.6.11 தொடக்கம் ஓதுவார் சற்குருநாதன் திருமந்திரப் பாடல்களைத்தொடக்கப் பாடலிலிருந்தே குரலிசையாக்கினார், பதிவாகிறது. 8.5.12 வரை 1080 பாடல்கள் பதிவாகி உள்ளன. பதிவுகள் தொடர்கின்றன.

14.5.2009 தொடக்கம் 8.5.12 வரை 193+400+1080=1673 பாடல்கள் பதிவு (193 திருமந்திரப் பாடல் பதிவு மேலதிகமாக) செலவு ரூ. 159,506 ஆகும். ஒரு பாடலுக்குச் செலவு மதிப்பு ரூ. 100. ஏற்பட்ட செலவு ரூ. 95.35. பாடல் தரவேற்றத்துக்கு ரூ.5*1673 = ரூ. 8365 நன்கொடையாளர் தந்த 234,476இல் செலவு போகக் கையிருப்பாக ரூ. 66,605 உண்டு.

16.2.2009இல் தொடங்கிய பெரியபுராணப் பதிவுக்குப் பாடலுக்கு ரூ. 100 என்ற விகிதத்தில் செலவுசெய்து வந்தோம். திருக்கோவையார், திருமந்திரப் பதிவுகளுக்கும் அதே தொகை செலவாகி வந்தது. மூன்று ஆண்டுகள் கடந்தன, விலைவாசிகள் ஏறின. பதிவகச் செலவு, இசைவாணர் சன்மானம், ஓதுவார் சன்மானம் , புலவர் சன்மானம், தேனீர்ச் செலவுகள் என யாவும் கூட்டிக் கொடுக்கவேண்டிய நிலையில் நேற்று யாவருமாக இணைந்து பாடலுக்கு ரூ. 150 செலவாகும் எனத் தீர்மானித்தோம். எங்கள் தீர்மானம் இதுவாயினும் நன்கொடையாளர் ஒப்புதலின்றி அத்தீர்மானம் வலுவற்றதே. நன்கொடையாளர் ஒப்புதலை நாடி நிற்கிறோம்.

ஆனி மகம் மாணிக்கவாசகர் குருபூசை. அன்று திருக்கோவையார் பதிவுகளைக் குறுந்தட்டாக வெளியிடலாமா? சிங்கப்பூர்த் திருமுற மாநாட்டிலும் அக்குறுந்தட்டை வெளியிடலாமா? நன்கொடையாளர் அறிவுறுத்துவாகளாக. பதிவான பாடல்களைத் தேவாரம் மின்னம்பல தளத்தில் ஏற்றிவருகிறோம்.
யாவும் தருபுரம் குருமகாசந்நிதானத்தின் ஆசியுடன் நடைபெற்று வருகின்றன.  அனைவரையும் இப்பணியில் ஈடுபடுத்தி, நம் தலைமுறையிலேயே திருமுறைப் பாடல்கள் முழுவதும் குரலிசையாக்கச் சிவபெருமான் ஆட்கொண்டவாறு நாம் பெற்ற பேறு.

திருவடிகளுக்கு வணக்கம்
நன்றி

அன்புடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

படி
புலவர் க. ஆறுமுகம் அவர்கள்
சேக்கிழார் அடிப்பொடி அவர்கள்
பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பன்னிரு திருமுறை – குரலிசைப் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *