புத்தகம்
மலைப்பாம்பு
வாசிக்கிறவர்
எழுதுகிறவர்
அச்சடிக்கிறவர்
விற்கிறவர்
யாரானால் என்ன?
வளைத்துக்கொண்டால்
விடாது
உயிருள்ளவரை
பழைய காகித
வியாபாரி உட்பட!

http://arthuride.wordpress.com/2011/12/29/serpent-in-the-garden/

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புத்தகம்

  1. இப்படித்தான் புத்தக வாழ்க்கை
    காசு பணம் பார்க்காது – கண்ட மேனிக்கு – பார்க்குமிடமெல்லாம்
    புத்தகங்கள் வாங்கியானது!
    காய்கறி வாங்கப்போனபோதும் வந்தன
    சேலை எடுக்கப் போகும் போதும் வந்தன
    செய்தித் தாட்களை வீசைக்குப்  போடும்போது வந்தன!

    ஏற்கனவே தந்தையார் வைத்திருந்த – வாங்கிக் கொண்டிருந்த புத்தகங்கள் வேறு!!
    புக்ககம் போன பின்பும் புத்தக ஆசை மலையாய் வளர
    அள்ளித் தந்தார்கள் அனைத்தையும்
    யாவும் நீயே ஆகித் தாங்குகவென்று
    கோவர்தணகிரி போல், மச்சிலும் மாடியிலும்
    மீதி கோணியிலும்

    பார்க்குமிடமெல்லாம் அலமாரியும் வாங்கினேன்
    போதாக்குறைக்கு தச்சனிடம் நேர்த்தியாய்ப் பல செய்தேன்!
    நூலகம் கெட்டது என்பார்கள்! அப்படி வகை வகை
    என் வீட்டு புத்தகம் – ஒவ்வொன்றின் வாசம் எனக்குத் தெரியும்
    தூக்த்தில் எழுப்பிக் கேட்டாலும் இந்த அலமாரியில் இந்தத் தட்டில் இத்தனாவது புத்தகம் எது எங்க கேட்டால் சொன்னேன்!
    எப்போதும் புத்தகமும் கையுமாய் இவள் போன ஜென்மத்தில் சரஸ்வதி தேவியாக இருந்தாளோ என்னவோ எனக் கிண்டலடித்தவர்கள் உண்டு.

    அன்னியப் பாம்பு வந்துது!
    விழுங்கியது ஆசைகளை!!
    எண்ணியபோது பதினேழாயிரம்!
    வகைபிரித்து, நூலகங்களுக்குக் கையெழுத்திட்டு
    தானம் செய்து விட்டுவந்து
    காலியான வீட்டில் துடித்தழுதேன்!
    புத்தகங்கள் அடுக்கிய வீட்டில் இருந்த காந்தம் இல்லை – கந்தம் இல்லை
    நூலகங்களில் என் புத்தகத்தை ஆயிரம் பேர்
    படிப்பார்கள என்று மனம் சொன்னாலும்
    என் வீட்டின் 
    வெறிச்சோடிய இருள் குறுக்கம்
    மரணவலி!
    மலைப்பாம்பு விழுங்கியது!

    இங்கு வந்தேன்!
    புத்தக ஆசைத் துரத்தித் துரத்த்தி விழுங்குகிறது!
    ஏகப்பட்ட புத்தகங்கள் சேர்ந்திருக்கின்றன!
    நேற்று தான் தொடங்கினேன் இவற்றை இன்டெக்ஸ் செய்து முறைப் படுத்த
    மலைப்பாய் இருக்கிறது இத்தனையா?
    மலையாய் வளருகிறது வேலையும்!
    மலைப்பாம்பாய் விழுங்குகிறது காலத்தையும்!

    குழந்தைகள் பார்வையால் கேட்கிறார்கள்-
    அடுத்த மரணவலிக்கு இது அச்சாரமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *