காம்போசம் – விளச்சி மலையில் நீராடும்1008 இலிங்கங்கள்

4

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


தமிழ் நாட்டில் சுந்தரர் காலம் பல்லவ மன்னன் கழற்சிங்கன் அல்லது இராசசிம்மன் (கிபி. 700-728) காலமாகும்.

நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பல்லவ மன்னன் தந்திவர்மனின் ஆட்சி (கிபி. 796-846) நடைபெற்ற காலம்.

அதே காலத்தில் காம்போசத்தில் இரண்டாம் செயவர்மன் ஆட்சி (கிபி. 802-850) தொடங்குகிறது. காம்போசத்தைக் கைப்பற்ற வந்த சாவக மன்னனை வீழ்த்திய இரண்டாம் செயவர்மன் காம்போசத்தின் 54 மாகாணங்களை ஒன்றிணைத்து மீண்டும் கெமர் அரச பரம்பரையை நீட்டித்தான்.

இந்த அரச பரம்பரையினர் காம்போசத்துப் பல்லவர் அரசர்களே. சிங்கமே காம்போசப் பல்லவர்களின் சின்னமும்.

காஞ்சிபுரத்துப் பல்லவ அரச பரம்பரையுடன் திருமணத் தொடர்பு கொண்டவர்கள். காஞ்சிபுரத்தில் உருவாக்கிய 42 எழுத்துக் கொண்ட கிரந்த வரிவடிவங்களையே தங்களின் வரிவடிவங்களாகக் கொண்டவர்கள்.

பல்லவ மன்னர்களைப் போலவே சைவ சமயத்தினர். வடமொழியைப் பேணியவர்கள். சைவ சித்தாந்த மரபுகளைப் பின்பற்றியவர்கள்.

சாவக அரசனை விரட்டிய இரண்டாம் செயவர்மன் காம்போச நாட்டின் நடுவணாக உள்ள மகேந்திர மலையில் அரண் அமைத்து வாழ்ந்தான்.

மகேந்திர மலையில் தொடங்கும் அருவி கீழே இறங்கிச் சியாம்றீப்பு ஆறாக ஓடுகிறது.

தொடக்க நிலையில் நீண்ட அந்த நீரோடையின் இருபுறமும் பூஞ்சோலைகள். நெடு மரங்கள். அந்த வற்றாத நீரோடையில் மழைக் காலங்களில் நீர் பெருக்கெடுத்தாலும் ஆழம் 30-50 செமீ. ஆகவே தொடரும்.

நீரோடையின் தளமாக அமைந்த நீண்ட பாறையில் 1008 இலிங்கங்களை வடிவமைத்து வழிபட்டான் இரண்டாம் செயவர்மன்.

1008 இலிங்கங்களை அமைத்த அதே நீரோடையில் திருமால், திருமகள், திருமால் உந்தியில் அயன் என மூவருக்கும் மூன்று இடங்களில் உருவங்களைச் செதுக்குவித்தான்.

இன்றுவரை 1008 இலிங்கங்களும் திருமால், திருமகள், திருமால் உந்தியில் அயன் ஆகியோரின் செதுக்கல்களும் அப்படியே உள. நீரோடிக்கொண்டே இருப்பதால் தேய்வு ஏற்பட்டாலும் 1200 ஆண்டுகளாக அவை வழிபாட்டுக்குரியனவாக உள.

இரண்டாம் செயவர்மன் கட்டிய சிவன் கோயில்கள் 54 அந்த மலையில் உள. காம்போசத்தின் 54 மாகாணங்களை அவை நினைவூட்டுவன.

காலப்போக்கில் 16ஆம் நூற்றாண்டில் அந்த மலையில் புத்த கோயில் எழுந்தது. மலை உச்சியாக உள்ள பகுதியை படுக்கைநிலைப் புத்தராகச் செதுக்கி அழகான கோயில் அமைத்துள்ளனர்.

மகேந்திர மலையை இக்காலத்தில் விளச்சி மலை (Phnom Koulen, Phnom = மலை, Koulen = Lychee = விளச்சி) என அழைப்பர்.

சைவ சமய மரபு, தமிழர் மரபு என்பன காம்போசத்தில் கொடிகட்டிப் பறந்த காலம். இப்பொழுது கேட்பாரற்று, பூசனை அற்று, சிதிலமடைந்து கிடக்கும் சிவன் கோயில்களையும் திருமால், அயன் கோயில்களையும் மீட்டு வழிபட்டுக் காப்பது தமிழர் கடன்.

விளச்சி மலையில் 1008 இலிங்கங்கள் காணொலி காண்க:
 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “காம்போசம் – விளச்சி மலையில் நீராடும்1008 இலிங்கங்கள்

  1. An interesting piece of information. Though Ankor Wat has become a world heritage attracting tourists from all countries, its historical link to the Pallava kingdom at Kaanjipuram and Mamallapuram has not been highloighted. The Pallava kingdoms flourished in South East Asia from Indonesia to Cambodia, The monumental works at Borobudur in Jojakarta and the Ankor Wat in Cambodia are living witnesses to the glory of the Pallavas. I wonder why proper research and history is not yet written on the Pallava influence in South East Asia. Even the Sri Vijaya Empire too seems to be that of the Pallavas. Thank you Sachithananthan for sharing with us this interesting historical facts with appropriate photos. Dr.G.Johnson.

  2. Wonderful.

    Delightful scenes. கணணுக்குக் குளிர்ச்சியாகவும் நெஞ்சத்துக்கு இதமாகவும் இருக்கிறது. 

    அன்புடன்
    திவாகர்

  3. Histoic trip ! History revisted. Words fail to describe the event as me and Dr. Iraiyasan during our trip in 2010 we could visit Angkorwat near Siem Reap and Phnom Penh only due to some reasons beyond our comprehension.

    I am grateful for the treasure of information. Siva woship in a far of plce. As you said imay have to revisit Cambodia.

Leave a Reply to jayaraman

Your email address will not be published. Required fields are marked *