இலக்கியம்கவிதைகள்

வெம்மையிலுருகும் நமதிந்த பிரியங்கள்

வருணன்

சூழலின் குளுமையில் நடுங்கும் விரல்கள்
தேடுகிறது வெம்மையினை எங்கெங்கோ
அருகிலிருக்கும் உனதிருப்பை மறந்து
அவ்வப்போது எதேச்சையாய்
நமதிந்த நெருக்கத்தில் ஸ்பரிசிக்கின்றன
கரங்களில் குத்திட்ட ரோமங்கள்
நமக்கும் முன்னே
வெம்மை நுகரத் துடிக்கும் மறத்த விரல்கள்
கரையத் தவிக்குமுன் கழுத்து வளைவின்
ரோமக் காட்டில்
மௌனத்தில் கரைத்து நம்மிருப்பில்
உரைந்து உருகிக்கொண்டிருக்கட்டும்
நமதிந்த பிரியங்கள் இப்படியே….

 படத்துக்கு நன்றி

 http://depositphotos.com/6500277/stock-illustration-Portrait-of-a-girl-in-love.html

Comments (2)

  1. உணர்வுகளை….. உணர்வுப் பூர்வமாய்….. உருக்கி…..உன்னத….உருவாக்கமாய்
    வடித்துவிட்ட வருணன் அவர்களே…வாழ்த்துகிறேன்

  2. மிக்க நன்றி முகில்.

Comment here