வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்

0

evmதமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 2011 ஏப்ரல் 13 அன்று, சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தேர்தல் நாள், தாய்த் திருநாடு குடிமக்களுக்கு கொடுத்திருக்கும் சிறந்த கொடை!

உங்கள் அரசையும் அதற்கான பிரதிநிதிகளையும் தேர்ந்தெடுக்கக் கூடிய பொன்னான வாய்ப்பு!

நீங்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, கடந்த பல மாதங்களாக அரசு எந்திரம் இரவு பகலாக உழைத்துள்ளது. இனி வாக்களிப்பது உங்களது கடமை. வாக்குச் சாவடிக்குச் செல்லும் போது, உங்கள் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறவாதீர்! அடையாள அட்டை வழங்கப்படவில்லையெனில் குறிப்பிட்ட 15 ஆவணங்களில் ஒன்றை எடுத்துச் செல்ல மறவாதீர்!

வாக்குப் பதிவேட்டில் பெயர் உள்ள அனைத்து வாக்காளரும் தவறாமல் வாக்குச் சாவடிக்கு வந்து மின்னணு வாக்கு எந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்தி, உங்கள் எதிர்காலத்தைப் பதிவு செய்யுங்கள். கையிலிடப்பட்ட மையுடன் பெருமையுடன் வீடு செல்லுங்கள்.

உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்

பயமின்றி வாக்களியுங்கள்

எவ்வித வற்புறுத்தலுமின்றி வாக்களியுங்கள்

என இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

====================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

படத்திற்கு நன்றி: http://www.bel-india.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *