செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு

 

வெங்கட் சாமிநாதன்

செப்டம்பர் மாதம் போட்டிக்காக வந்துள்ள சிறுகதைகளுள் பழமைபேசி எழுதியுள்ள செவ்வந்தி என்ற கதை தான் முன்னிற்கிறது.  கிராமத்து எதிர்பார்ப்புகள், ஆசைகள். தன் மருமகள் பெற்ற இரண்டும் பொட்டைப் பிள்ளைகளாக பிறந்தது அவளுக்கு ஒரு ஆற்றாமை. அடிக்கடி சொல்லித் தீர்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் சினை கண்டிருக்கும் வீட்டுமாடு மட்டும் என்ன கிடரிக்கன்னாவா போடும், அதுவும் காளைக்கன்னைத் தான் போடும், தன் அவதியைப் பெருக்கும் என்று வேதனைப் படுகிறாள். இது ஒரு முரணாக அவளுக்குப் படுவதில்லை.  வெகு இயல்பான சாதாரண எதிர்பார்ப்பு என்று தான் தோன்றுகிறது. கடைசியில் அதுகிடாரி என்றும் செவ்வந்தி என்று  ஆசையாக வளர்க்கலாம்.  இந்த மாறிய முரணான வாழ்க்கை மதிப்பீடுகள் உறுத்துவதில்லை. பொருளாதாரம், மாறும் வாழ்க்கைச் சூழல் எல்லாம் காரணமாகின்றன்.

இந்த முரண் வாழ்க்கையில் இயல்புதான். எதுவும் வலிய புகுத்தப்படவில்லை. ஆனால் அந்த முரணை பழமை பேசி கொஞ்சம் அழுத்திச் சொல்கிறார். தான் சொல்ல வந்தது அந்த முரணைப் பற்றி என்று தெரியா வண்ணம், ஒரு நிகழ்ச்சியை இயல்பாக, வேதனைக் குரல் அதிகம் பீறிடாமல் வெளியிட்டிருந்தால் நன்றாக் இருந்திருக்கும்.

ஆனாலும்  வந்திருக்கும் கதைகளில் இது தான் இயல்பான ஒரு சித்திரத்தைத் தருகிறது. சம்பவங்கள், பாத்திரங்கள், பேச்சுக்கள் எதுவும் செயற்கையாக உருவாக்கப்படவில்லை.  பெரும்பாலான கதைகள், “இதை வச்சு ஒரு கதை ஒண்ணு எழுதிட்டாப் போச்சு” என்கிற தோரணையிலேயே இருக்கின்றன. கதை எழுதப்படுவதுதான். ஆனால் அது எழுதப்பட்டதாக தோன்றாதிருக்க எழுதுவது தான் எழுத்துத் திறன்.

இந்த மாதப்  போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறுகதைகள்:

தலைவா…தலைவா….

காக்கா ஃபார்முலா

வண்ணமற்ற எண்ணங்கள்

ஆத்மாவின் கோலங்கள்

தண்டனைக் காலம்

இந்த அப்பா வேண்டாம்

பிரம்மாவின் தலையெழுத்து

குயில் சத்தம்

புரிதல்கள்

ஒரு ஊஞ்சல் பேசுகிறது

உறைந்த புன்னகை

மணல் கயிறு

செவ்வந்தி

பாட்டிக்கு உடம்பு சரியில்லை

லட்சியக் கணவன்

கரையாத மெழுகுவத்தி

.பெயர் சொல்லும் பிள்ளைகள்

 

போட்டியில் பரிசு பெற்ற  பழமைபேசி அவர்களுக்கு பாராட்டுகள்.  பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தொடர்ந்து முயற்சி செய்யவும் வாழ்த்துக்கள்.

அன்புடன்

பவள சங்கரி

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் எழுத்தாளர்

Share

About the Author

வெங்கட் சாமிநாதன்

has written 62 stories on this site.

வெங்கட் சாமிநாதன் எழுத்தாளர்

3 Comments on “செப்டம்பர் மாத சிறுகதைப் போட்டி முடிவு”

 • தமிழ்த்தேனீ
  தமிழ்த்தேனீ wrote on 1 October, 2012, 17:26

  முதற் பரிசு பெற்ற திரு பழமைபேசி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்

  அன்புடன் தமிழ்த்தேனீ

 • Naanjil Peter wrote on 1 October, 2012, 21:10

  தம்பி பழமைபேசி வணக்கம்.
  தங்கள் சிறுகதை செவ்வந்திக்கு வல்லமை இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள், பாராட்டுக்களுடன்

  அண்ணன்
  நாஞ்சில் பீற்றர்

 • பழமைபேசி
  பழமைபேசி wrote on 1 October, 2012, 21:54

  எத்தனையோ பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன். விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் போட்டி என ஒன்றை வைத்து, பரிசு பெறுவது இதுவே முதல் முறை. வல்லமை இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!! குறிப்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கும் மதிப்புரைக்கு!!

  வாழ்த்துவோருக்கும் நன்றி!!

  பணிவுடன்,
  பழமைபேசி.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.