சாந்தி மாரியப்பன்

“எப்போதான் கண் திறந்து
பார்க்கப்போறியோ?”
அங்கலாய்த்த பக்தனுக்குக்
கூரையைப்பிய்த்துக்கொண்டாவது
உதவிடும் துடிப்பில்
ஓடி வந்த கடவுள்
பேச்சற்று நின்றார்..
பிய்ப்பதற்குப்
பொத்தல் கூரைக்கும் வழியின்றி
வானமே கூரையாய்
உறங்கும்
நடைபாதை வாசியாய்க்கண்டு.

 

படத்திற்கு நன்றி:http://www.123rf.com/photo_10678670_kolkata-india–february-03-streets-of-kolkata-man-sleeping-on-the-streets-of-kolkata-india-on-februa.html

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “கையறு நிலையில்

  1. கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்…அவன் கரண்ட் கட்டில் வெந்து வெந்து சாக வேண்டும்

  2. ஓ. நோ ! யுத்த பேரிகையையும்,  மந்திரச்சொல்லையும் தந்த உங்களிடமிருந்து இப்படி ஒரு படைப்பை எதிபார்க்கவில்லை. ஏமாற்றி விட்டீர்கள் சாந்தி! 

  3. கடவுளைப் பேச்சற்று நிற்கவைத்த
    கவிதை,
    தடையின்றிப் பேசவைக்குதே நம்மை..
    நன்று…!
         -செண்பக ஜெகதீசன்…

  4. இயல்பானதொரு கவிதை! என்னுடைய வலைப்பூவிலும் இதுபோன்றதொரு படத்துடன் கவிதையை போட்டிருக்கிறேன்! வருகை தாருங்கள்!வலைப்பூ மாயவரத்தான் எம்ஜிஆர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *