செண்பக ஜெகதீசன்

 

கன்றை நினைத்து கொட்டில்பசு

கண்ணீர் விட்டே அழைப்பதுவும்,

குன்றில் யானை ஏறிநின்று

குரலை உயர்த்திப் பிளிறுவதும்,

தின்று விடாமல் தாய்ப்பறவை

திசைக்கும் திரும்பிக் கூவுவதும்,

என்றும் காணும் உண்மைதானே

ஏற்றம் மிக்கது தாய்மைதானே…!

 

படத்துக்கு நன்றி: http://designbeep.com/2010/05/09/25-emotional-mother-and-baby-animal-photos-from-wildlife/

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “தாய்மை

  1. அருமையாக இருக்கிறது, மிகவும் எளிய வரிகளால் மனதைத் தொட்ட கவிதை. நன்றி.

    ….. தேமொழி

  2. தாய்மைக்கு இது போல் இனிமையாய் எளிமையாய்  பல கோடி பாசுரங்கள் கொடுத்தாலும் தகும்

  3. தேமொழி மற்றும் சத்தியமணி இவர்களின்
    பாராட்டுரைக்கு மிக்க நன்றி…!
    -செண்பக ஜெகதீசன்…

  4. ஒரு தாய் தன் மகவை ஈன்றெடுத்து, அதனுடன் கொண்டாடும் உறவுக்கு ஒப்பில்லை, மேலும் இந்த நல்லுறவு ஒன்றுதான் அப்பழுக்கில்லாதது. ஒரு பெண்ணாயிருக்கின்ற தாயானவள் மட்டும்தான் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டியதில்லை, தந்தையாகிய நானும் அனுபவிக்கிறேன் என்று நம்மாழ்வார் தமது பாசுரத்தில் கண்ணனை தம் குழந்தையாக பாவித்து, ஒரு தாயைப் போல பிள்ளைகளின் சேஷ்டைகளை அனுபவித்து, தாயாகிய நானும் இளைத்து விட்டேன் என்கிறார். “தாய்மை” என்ற தலைப்பில் தங்கள் எழுதிய கவிதை வரிகளைப் படிக்கும் போது, நம்மாழ்வார், முதலாம் திருமொழியில் தாய்/சேய் உறவை மேம்படுத்துவது என் நினைவுக்கு வருகிறது.

    “கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
    எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும்
    ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

    மிடுக்கில் லாமையால் நான் மெலிந்தேன்”

  5. திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களின்
    கருத்துச் செறிந்த பாராட்டுரைக்கு மிக்க நன்றி…!
                       -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *