பாக்., பயங்கரவாதிகளின் புகலிடம்

0

osama bin laden

பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்டிருப்பது, பல்வேறு பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளன என்பதையே எடுத்துக் காட்டுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர்  உறுதிப்படுத்தியிருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி பின்லேடன் கொல்லப்பட்டதாக இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு இன்று தகவல் அளித்தது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒசாமா பின்லேடனையும், அவனது கூட்டாளிகளையும் நீதியின் முன் நிறுத்த அமெரிக்காவுக்கு நியாயமான காரணங்கள் உண்டு.

ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானின் அபோதாபாதில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பது, பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளன என்ற உண்மையை எடுத்துக் காட்டுகிறது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்களும் பாகிஸ்தானில் தொடர்ந்து அடைக்கலம் புகுந்திருப்பதாக இந்தியா நம்புகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ள நபர்களைக் கைது செய்யுமாறு மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சில நபர்களின் குரல் மாதிரிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

======================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

படத்திற்கு நன்றி: http://www.mirror.co.uk

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *