வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

25

தேமொழி

 

புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது
       பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே – அதைக்
       கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.       

தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை.

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை
-பாரதியார்

 

 

 

<< வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 9                                                          வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 7>>

பதிவாசிரியரைப் பற்றி

25 thoughts on “வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8

  1. அன்புள்ள தேமொழி,
    “வண்ணச் சிதறல்கள்” என்ற தலைப்பு ஏற்றதாக இல்லை என்பது என் யூகிப்பு. “ஓவியக் காவியங்கள்” என்று தலைப்பிடுவது ஏற்றதாக இருக்கும் என்பது என் ஆலோசனை.

    சி. ஜெயபாரதன்.

  2. புல்லாங் குழல் கொண்டு வருவான் – அதனைப்
    பொன்னி கைப் பற்றிக் கொள்வாள்.

    சொல்லால் மயக்கு வான் கண்ணன் – பின்னர் சொகுசாய்ப் பிடுங்குவான் குழலை. சி. ஜெயபாரதன்

  3. படம் அழகு. கொடுத்திருக்கும் வரிகளோடு, ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான்’ வரிக்கும் பொருந்துகிறது படம். கண்ணனின் முகபாவம் அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி.

  4. அன்பின் தேமொழி,

    அற்புதமான ஓவியத்திறன் உங்கள் கைகளில் இருக்கிறது. வாழ்த்துக்கள். இந்த ஓவியம் உயிரோவியம்…

    அன்புடன்
    பவள சங்கரி

  5. மயக்கம் தந்தது யார்
    கண்ணனா?
    புல்லாங்குழலா?

    மயங்கி இருப்பது யார்
    கண்ணனா?
    பூங்குழலியா?

    இப்படி
    ஓவியத்துற்கு பொருள் கொண்டாலும்
    இந்த
    ஓவியம் கொடுக்கும் கிரக்கம் என்னவோ
    ஓபியம் அருந்தியது போல் ஒரு மயக்கம்!

    வாழ்த்துக்கள் தேமொழி.

  6. வாவ்! அற்புதம்! கை வண்ணத்தில் கண்ணன் வண்ணம் கண்டு, மனம் மகிழ்ச்சி வண்ணம் பூசிக் கொண்டது. நன்றி தேமொழி!

  7. திரு. ஜெயபாரதன் ஐயா சொல்வது போல் உங்கள் ஓவியம் ஒவ்வொன்றும் ஓர் காவியம் என்றே சொல்லலாம் தேமொழி. முறையாகப் பயின்று வரையப்பட்ட ஓவியங்களா அல்லது தாங்கள் ஓர் ஏகலைவியா (ஏகலைவனின் பெண்பால் பெயர்)?
    பாராட்டுக்கள்!

    -மேகலா

  8. கண்ணனின் கைக்குழல்
    காரிகை கையில்- கற்பனை அழகு..
    காவிய வரிகளைக் கண்ணில் நிறுத்தும் ஓவிய அழகு…!
    -செண்பக ஜெகதீசன்…

  9. தேமொழி ! அருமை எளிமை ! உங்களின் வண்ணச் சிதறல்கள் எட்டிற்கு தமிழின் எண்ணச் சிதறல்கள் வல்லமை ஏட்டில் கண்ணன்  வாழி!வாழி! என வரவிருக்கிறது…..விரும்பிய பாரதியின் பாணியில் பாராட்டுக்கள்!

  10. பாராட்டியமைக்கு நன்றி பழமை பேசி 
    ….. தேமொழி 

  11. பாராட்டுக்களுக்கு நன்றி அன்பு ஜெயபாரதன் ஐயா. 
    உங்கள் கவிதை வரிகள் மேலும் பொருத்தமாக இருக்கிறது இந்த ஓவியத்திற்கு, நன்றி. 
    “ஓவியக் காவியங்கள்”  என நானே சொல்லிக் கொண்டால் நன்றாக இருக்காதே… [என்று ஒரு தன்னடக்கத்தோடு இந்த தலைப்பைப் போட்டுக் கொண்டேன் :D] 
    நீங்கள் கொடுக்கும் தலைப்பு மிகவும் மன நிறைவைத் தருகிறது.
    நன்றி ஐயா.  
    அன்புடன் 
    ….. தேமொழி 

  12. நன்றி பார்வதி, உங்கள் பாராட்டு மகிழ்ச்சியைத் தந்தது. நீங்கள் சொல்வது போல  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான்’  என்ற வரிகளும் பொருத்தம்தான்.  அந்த வரிகளையும் சேர்த்திருக்கலாம்.  தோன்றாமல் போயிற்று. 

    அன்புடன் 
    ….. தேமொழி 

  13. பாராட்டிற்கு நன்றி பவளா 😀 
    அன்புடன் 
    ….. தேமொழி 

  14. அன்புள்ள தேமொழி,

    “காவிய ஓவியங்கள்” , “வண்ணத் தூரிகைக் காவியங்கள்” என்றும் அழைக்கலாம்.

    சி. ஜெயபாரதன்

  15. கவிதை வரிகளால் பாராட்டு பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன் தனுசு.  அடுத்த ஓவியத்திற்கு உங்கள் கவிதை வரிகளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன்.  
    அன்புடன் 
    ….. தேமொழி 

  16. “வண்ணத் தூரிகைக் காவியங்கள்” என்ற தலைப்பில் இனித் தொடர்கிறேன் அன்பு ஜெயபாரதன் ஐயா. 
    முத்தைத்திரு என்று அடியெடுத்துக் கொடுக்கப்பட்ட அருணகிரிநாதர் போல மனம் மகிழ்கிறேன்.   நன்றி. 
    அன்புடன் 
    ….. தேமொழி 

  17. மெத்த மகிழ்ச்சி தேமொழி. நிழல் நிஜமாகிறது ! குழலோசை வரும் முன்னே ! கண்ணன் வருவான் பின்னே ! சி. ஜெயபாரதன்

  18.  ஓவியத்திற்கு தாங்கள் அளித்த பாராட்டிற்கு  நன்றி  கவிநயா.

    ….. தேமொழி 

  19.  நன்றி மேகலா, ஓரளவிற்கு நான் ஏகலைவிதான், பள்ளி ஓவிய வகுப்புகளுக்குப் பிறகு அஞ்சல் வழியில் சில பாடங்களைத் தருவித்து சில அடிப்படைகளைத் தெரிந்து கொண்டேன்.  என்னை சுற்றி இருந்து உங்களைப் போல ஊக்குவிதவர்கள் கொடுத்த உற்சாகம் தான் எனக்கு சிறு வயதில் ஓவியம் எழுதும் ஆர்வத்தைத் தூண்டியது. 

    ….. தேமொழி 

  20. தங்கள் கவிதை வரிகளின் வழியே கிடைத்த பாராட்டிற்கு நன்றி திரு. செண்பக ஜெகதீசன் ஐயா.  என் கற்பனை இங்கே குறைவுதான்.  ஒரு நாட்காட்டியில்  வரைந்திருந்த ஓவியருக்கு சொந்தமானது இந்தக் கற்பனை.  நான் அதனைப் போலவே வரைந்து வர்ணம் தீட்ட செய்த முயற்சி இந்த ஓவியம்.

    ….. தேமொழி 

  21. பாரதியின் பாணியில் பாராட்டுரைத்த திரு. சத்திய மணி அவர்களே. உங்கள் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி.

    ….. தேமொழி  

  22. இன்னும் பதிப்பாகவில்லை ? அதற்குள்ளாகவா?  

  23. தேமொழி .. வண்ணத் தூரிகைக் காவியங்கள்..
    கண்டேன்.  உவகை கொண்டேன்.
    வண்ணம் சிதறாமல் எழுதிவைத்தால் ஓவியம் 
    எண்ணம் சிதறாமல் எழுதிவைத்தால் காவியம் 
    பலவித திறமைகள் உள்ளடக்கி வலம் வரும் வல்லமையாளர்களை காண்கிறேன்.
    மேலும் மேலும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் 
    நீ சொன்னால் காவியம் – என்றார்  கண்ணதாசன்..
    சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்.. உங்களுக்கு அது 26 வருடங்களுக்கும் மேலான பழக்கம் போலும்.  எண்ணிய உருவத்தை ஏட்டில் வடிக்கும் கலை..
    கண்ணன் ராதை ஓவியம் கண்ணில் நிற்கிறது.
    கலைமகள் ஓவியம்கூட உங்கள் கைவண்ணம் காட்டியது..
    இன்னும் இன்னும் நீங்கள் வண்ணம் தீட்டும் காலையில் முன்னனிபெற 
    மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    காவிரிமைந்தன் 

  24. உங்கள் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவிஞர் காவிரிமைந்தன்.

    அன்புடன்
    …..தேமொழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *