அன்பு நண்பர்களே,

 வணக்கம். ஐக்கியா தொண்டு நிறுவனம் மற்றும் நம் வல்லமையும் இணைந்து நடத்தும் சிறுகதைப் போட்டிக்கு மகத்தான ஆதரவு அளித்து வரும் அனைத்து படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நல்ல படைப்புகள் வாசகர் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றுவிடுகிறது. இது போன்று நிலைத்து நிற்கச் செய்யும் படைப்புகளை ஊக்குவிப்பதே  இப்போட்டியின் முக்கிய குறிக்கோள். அந்த வகையில் நம் படைப்பாளிகள் அனைவரும் பாராட்டும், வாழ்த்தும் வாசகர்களிடமிருந்து பின்னூட்டமாகவும் பெற்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற ஊக்கங்களே மேலும் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கக்கூடியது. ஆக, வாசகர்களின் முழுமையான ஈடுபாடும் மிகஅவசியமாகிறது. தொடர்ந்து அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறோம். தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டிருக்கும் ஐக்கியா தொண்டு நிறுவனர் திரு வையவன் அவர்களுக்கும், சிறுகதைகளை பொறுமையாக வாசித்து அதற்கான மதிப்பீட்டை பாரபட்சமின்றி வழங்கி வரும் பிரபல விமர்சகர் உயர்திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கும் நம்முடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இதோ சென்ற பிப்ரவரி மாதத்தின் போட்டி முடிவுகள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறும்  விடாமுயற்சியில் இருப்பவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே. தொடர்ந்து உங்கள் படைப்புகளை வரவேற்கிறோம்.

அன்புடன்
பவள சங்கரி

வெங்கட் சாமிநாதன்

இம்மாதம் கதைகள் குறைந்துள்ளது வழக்கமாக நிறைய கதைகள் அனுப்புகிறவர்கள் பலனின்றி உற்சாகம் குறைந்த காரணமாகவும் இருக்கலாம். ஆனாலும்  இரண்டு கதைகள் நன்றாக எழுதப்பட்டுள்ளனவை வந்துள்ளன. வழக்கம் போல் பழமை பேசியின் ”பணவிடையும்”, மணி ராமலிங்கத்தின்  ”சூரியன் வந்து வாவென்றபோது” என்னும் இரண்டு கதைகளும் நன்றாக எழுதப்பட்டுள்ளன். உண்மையில் கதைகள் என்று எழுதப்பட்டுள்ளவை இவை இரண்டு தான். இரண்டுமே தடம் மாறும்போது திரும்ப தடம் வந்து சேரும் மனிதப் பண்பைச் சொல்கின்றன. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

வெ.சா.

போட்டியில் பங்கு பெற்ற கதைகள்:

வறு கடலை

முதல் நாள்

வயோதிகருக்குமுண்டு வெறி

கல்லூரி கட்டணம்

பழங்கணக்கு

உறவுகள்

பறவை மனசு

ஆட்ரா ராசா”

பச்சை நிறமே இல்லை”

குறையொன்றுமில்லை”!…..

ஆதிரையின் தீர்மானம்

தொடர்ந்து இந்த முறையும் பரிசு பெற்றுள்ள திரு பழமைபேசி மற்றும் மணி ராமலிங்கம் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  தொடர்ந்து அனைவரும்  இப்போட்டியில் பெங்கெடுத்து தங்கள் வல்லமையை  வெளிப்படுத்தி பரிசுபெற வாழ்த்துக்கள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “பிப்ரவரி (2013) மாதச் சிறுகதைப் போட்டி முடிவுகள்

  1. நான் மிகவும் ரசித்துப் படித்த ‘பணவிடை’ இந்த மாதத்தின் சிறந்த கதையாக திரு.வெ.சா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முகநூலில் கூட என் நண்பர்களிடம் இந்தக் கதையை பகிர்ந்து கொண்டேன். கதாசிரியர் திரு.பழமைபேசி அவர்களுக்கு என் வாழ்த்துகள்!!!

    திரு.மணி ராமலிங்கம் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

    மேலும், இந்த மாதப் போட்டியில் பங்குபெற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!!!

  2. புதுமையான பல உவமைகளைப் “பணவிடை”யில் கையாண்ட திரு. பழமைபேசி அவர்களுக்கும், “சூரியன் வந்து வாவென்ற போது” கதாசிரியர் திரு. மணி ராமலிங்கம் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  3. அன்பு பழமைபேசி மற்றும் திரு மணி ராமலிங்கம் ஆகியோர் மீண்டும் சிறந்த கதை எழுத்தாளர்களாகத் தங்களை நிரூபித்துள்ளார்கள்.  இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  அவர்கள் கதைகளை படிக்கும் பொழுது நாமும் உடனிருப்பது போல, அருகிருந்து பார்ப்பது போல கதை சொல்லும் நேர்த்தி மிகவும் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. பாரட்டுக்கள். தொடர்ந்து இது போன்ற படைப்புகளை அளித்து எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    ….. தேமொழி 

  4. சிறந்த கதைகளின் ஆசிரியர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. பழமைபேசி, திரு. மணி ராமலிங்கம் இருவருக்கும் என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    -மேகலா

  5. இந்த மாதம் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாசிரியர்கள் திரு பழமைபேசி மற்றும் மணி ராமங்கலிங்கத்திற்கு எனது பாராட்டுக்கள்.

    சிறுகதை விமர்சகர் மதிப்பிற்குறிய வெங்கட் சாமிநாதன் அவர்கள் போட்டிச் சிறு கதைகளுக்கு மதிப்பீட்டை வழங்கும்போது, ஒவ்வொரு எழுத்தாளருக்கும் அடுத்த முறை தமது எழுத்துக்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகிறது. 

    சிறுகதைப் போட்டிக்குப் பரிசுகளை வழங்கும் திரு வையவன், மற்றும் சிறுகதைகளைப் படித்து, தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யும் வல்லமை வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    பெருவை பார்த்தசாரதி

  6. அன்பு பழமைபேசி  திரு மணி ராமலிங்கம்  இருவருக்கும் என் மனம் நிறைந்த  வாழ்த்துகள்     சிறந்த படைப்பு.,,,,,,,

  7. பாராட்டியோர், போட்டியைச் செவ்வனே நடத்திக் கொண்டு வருவோர், ஆதரவளிப்போர் அனைவருக்கும் நன்றி!!

  8. அனைவருக்கும் வணக்கம். வல்லமை வலைதளத்தில் என்னுடைய சிறுகதையை எப்படி சமர்பிப்பது என்று கூறி உதவுவீர்களா? நன்றி 🙂

  9. அன்பின் திரு பார்கவ் கேசவன்,

    வருக வணக்கம். தங்களுடைய படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    பவள சங்கரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *