ஷைலஜா

Aravindharஅரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது

1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயர் சூட்டப்ப்பட்டது. சிறுவனாக இருக்கும் போதே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்றுத் தரப்பட்டது. அயர்லாந்த்து கன்னித்துறவியர்களால் நடத்தி வரப்பட்ட, டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை அவர் இங்கிலாந்தில் தொடர்ந்தார். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்யார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தார்.

1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த், ஷேக்ஸ்பியர் என பலரது இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்விக் கூடத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

தந்தையின் விருப்பத்திற்காக லண்டனில் படித்தாலும் ஐசிஎஸ் தேவில் வெற்றிபெற்றால் ஆங்கிலேய்ரகளின் சம்பளத்தைவாங்கிக்கொண்டு உயர் அதிகாரியாக இருக்க விரும்பாததற்குக்காரணம் ந்ம் இந்தியாவை அடிமைப்படுத்திய. வெள்ளையர்மீது அவருக்கிருந்த கோபம் அவர்களிடமிருந்த பாரதமாதாவைக்காப்பற்றவே 1893ல் இந்தியா திரும்பினார்.

இந்துபிரகாஷ் மற்றும் வந்தே மாதரம் என்ற பத்திரிகைகள்மூலம் விடுதலை எழுச்சியை ஏற்படுத்தினார்.

மணமான சில நாட்களிலேயே அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் பொய்கேசில் அரவிந்தரை உள்ளே தள்ளினர் பிறகு வழக்குப்பொய் என வெள்ளையர்களே விடுதலையும் செய்தனர்.

சிறைவாசத்தில் அவருக்கு கிருஷ்ணதரிசனம் கிட்டியது. பூரண யோகத்திற்குவித்திடவே இச்சிறைவாசத்தை இறைவன் தமக்கு அமைத்ததை உணர்ந்தார்.

மகாகவி பாரதியார் தான் புதுவையில் அரவிந்தரை வரவேற்ற முதல் தமிழர்.பகவான் அரவிந்தரின் திருப்பாதம் புதுவையில் தொட்ட நாள்DSC08198

4 4 1910 ஆகும். அரவிந்தரின் தரிசனம் கிட்டியமாத்திரத்தில் பலகாலம் தாம் தேடிய தெய்வம் இவர்தான் என பிரான்சிலிருந்து வந்த மிர்ரா கூற , .இந்த உலகத்து அனைத்து ஈவராசிகளுக்கும் எனக்கும் தாய் மிர்ரா அல்பொன்சா ..அன்னைதான் அவரை வணங்குங்கள் வாழ்வு மேலோங்கும்” என்றார் அரவிந்தர்.

இரண்டு மகா அவதாரப்புருஷர்கள் ஒரே இடத்திலேயேயோகம் செய்து ஒரே சமாதியிலேயே இருந்துகொண்டு உலகத்தை ரட்சித்து வருவது என்பது பாண்டிச்சேரியின் அரவிந்த ஆஸ்ரமத்தில்தான்.

இறைவன் தனக்கென்று ஒருநாட்டைதேர்ந்தெடுத்துள்ளான் அது இந்தியத்திருநாடு என்றார் அரவிந்தர்

சாவித்ரி என்ற மகா மந்திர நூலைப் படைத்த அரவிந்தர் 1950 டிசம்பர் 5ம்தேதி அதிகாலையில் தனது உயிரைத்தன் விருப்பத்தின்படி உடலிலிருந்து விலக்கிக்கொண்டார்.

இதன் மூலம் சத்திய ஜீவ சக்தியை ஐந்துநாட்கள் அதாவது 111மணிநேரம் பொன்னொளியைத்தன் உடலில் வெளிப்படுத்தொக்கொண்டு இருந்தார்.

இன்றும் சூட்சம உலகில் இருந்துகொண்டு அன்னையெனும் மகாசக்தியுடன் தனது அருளையும் அளிக்கும் மகான் அரவிந்தரின் பிறந்த நாளும் தாயகம் சுதந்திரம்பெற்ற திருநாளும் ஒன்றாக அமைந்து.ள்ளதில் வியப்பென்ன!!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மகான் ஸ்ரீ அரவிந்தர்

  1. சுருக்கமாக எழுதவே அதிகத் திறமை வேண்டும். அற்புதமான ஒரு ஆன்மாவைக் குறித்த அற்புதமான தகவல்களை “வாமன ரூபேண” – குறு வடிவில் கொடுத்துள்ளீர்கள். அன்பே வடிவான அன்னையையும் இந்நாளில் நினைவு கூர வைத்த மேன்மைக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த நன்றி.
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள், அம்மணி.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  2. அருமை!
    ஒரு மகாபுருஷரை பற்றிய நல்லொதொரு கட்டுரை.

    நன்றிகள் சகோதரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *