தொட்டுப் போகும்

—ஆர்.எஸ்.மணி

நாம் பிறந்ததிலிருந்து நம்மை எவ்வளவோ விஷயங்கள் ஒவ்வொரு கணத்திலும் தொட்டுச் செல்கின்றன. அவைகளில் சிலவற்றைக் கவனிக்கிறோம். சிலவற்றைப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம்.

எதை நாம் கவனிக்கிறோம் என்பது, வாழ்க்கையில் எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது.

அதோடு மட்டுமல்ல. எந்த ஒரு பொருளையும் பார்க்கும்போது பார்ப்பவர் எல்லோருக்கும் ஒரே விதமான எண்ணம் எழுவதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் வேறுபட்ட எண்ணங்கள் எழும். கலைஞன் கலைக்கண்ணோடு பார்ப்பான். வியாபாரி விலைக்கண்ணோடு பார்ப்பான்.

அண்ணாகண்ணனையும் பல பொருட்களும் காட்சிகளும் உணர்வுகளும் தொட்டுச் சென்றிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அழகாகத் தொகுத்து ஒரு கவிதையாகப் புனைந்திருக்கிறார். என்னைத் தொட்ட அந்தக் கவிதையை இசையில் அமைத்து இங்கு இட்டிருக்கிறேன்.

—ஆர்.எஸ்.மணி
(கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)

காணொளி: http://youtu.be/JgArHotZTPE

திரு.அண்ணாகண்ணனுடைய கவிதை:

 

“தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்”

குரல் மின்னிடும் இசை உன்னதம்
உரு எங்கிலும் உயிர் பொங்கிடும்
கரு வண்டினம் வலம் வந்திடும்
அரு மலர்வனம் அதன் நறுமணம்

தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

அருள் தூறிடும் அமுதூறிடும்
பொருள் மீறிடும் புதையல் தடம்
தலையாட்டிடும் மழலை மனம்
தாலாட்டெனும் தனி மந்திரம்

தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

சிலை சித்திரம் நடை நாடகம்
ஒளிர் கீர்த்தனம் ஒயில் நர்த்தனம்
உரு மாறிடும் நிழல் ஓவியம்
கலை மேவிடும் மலை மாருதம்

தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

கரை யாவையும் கரைத்தே எழும்
சிறை யாவையும் மறுத்தே எழும்
குறை யாவையும் அறுத்தே எழும்
நிறை அன்பெனும் நிஜ சுந்தரம்

தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

விரல் தள்ளினும் விழி துள்ளிடும்
சுழல் காற்றிலும் சுடர் பூத்திடும்
மனம் ஆடிடும் குடை ராட்டினம்
களி காதலின் துளிப் பாற்கடல்

தொட்டுப் போகும் – எனைத் தொட்டுப் போகும்

——————————————————————————-

ஆர்.எஸ்.மணி

ஆர்.எஸ்.மணி

கனடாவில் வசிக்கும் ஆர்.எஸ்.மணி, பல்துறை வல்லுநர்; சிறந்த ஓவியர், நிழற்படக் கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், கவிஞர்.

Share

About the Author

ஆர்.எஸ்.மணி

has written 14 stories on this site.

கனடாவில் வசிக்கும் ஆர்.எஸ்.மணி, பல்துறை வல்லுநர்; சிறந்த ஓவியர், நிழற்படக் கலைஞர், இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், கவிஞர்.

12 Comments on “தொட்டுப் போகும்”

 • ரிஷி ரவீந்திரன்
  ரிஷி wrote on 23 September, 2013, 20:53

  மெல்லிசையும் பிண்ணனி இன்னிசையும் நனி நன்று. கவிதை ஒரு கவிதையாக கவித்திருக்கின்றது.

  மனங்கவர்ந்த கவித்துவ வரிகள்

  “தலையாட்டிடும் மழலை மனம்
  தாலாட்டெனும் தனி மந்திரம்”

 • சச்சிதானந்தம் wrote on 23 September, 2013, 20:57

  தொட்டுப் போகும் கவிதைக்கு மெல்லிசையால் மெட்டுப் போட்டு மனதைத் தொட்டுச் செல்லுகிறீர்கள். வாழ்த்துக்கள். சீரான ஓசை நயத்துடன் அமைந்த கவிதை வரிகளே இனிமையான பாடலாக உருவெடுக்க மூல காரணம். திரு.அண்ணா கண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

 • Shobha premkumar wrote on 24 September, 2013, 15:16

  excellent really touched and went my heart.

 • ஆர்.எஸ்.மணி
  R.S.Mani wrote on 24 September, 2013, 16:20

  Dear Rishi, Sachidanandam and Shoba,
  I am glad that our creation pleased you!
  Thanks.

  Anbudan,
  R.S.Manil

 • ஷைலஜா
  shylaja wrote on 25 September, 2013, 14:30

  தொட்டுத்தான் போகிறது பாடல் வரிகளும் பாடுபவரின் குரலும்! ஆர் எஸ் மணிசாரின் அபிமான ரசிகைநான் முன்பு அவர் குரலில் வந்த ” ஒருநாள் உன் கூந்தலில் என்ற பாட்டை மறக்கமுடியுமா?!

 • ஆர்.எஸ்.மணி
  R.S.Mani wrote on 25 September, 2013, 20:43

  Hello Shylaja!
  Nice to hear from you!  I will try to publish your “IniyavaL” in Vallamai.
  You are an excellent poet!!
  Anbudanyk,
  R.S.Mani

 • தனுசு
  தனுசு wrote on 26 September, 2013, 10:00

  என்னால் ஒலி-ஒளியை பார்க்க முடியவில்லை . கவிதை படித்து ரசித்தேன் மனதை தொட்டது.

 • ஆர்.எஸ்.மணி
  R.S.Mani wrote on 26 September, 2013, 17:21

  Dear Danush,
  I find that if you click on the word “Ingu” in the last line of my intro (shown in bold letters) you will be able to hear the song.
  Thanks.
  Anbudan,
  R.S.Mani

 • அண்ணாகண்ணன்
  அண்ணாகண்ணன் wrote on 26 September, 2013, 20:59

  ஆர்.எஸ்.மணி அவர்களின் குரல், உள்ளத்தை உருக்கக் கூடியது. அதில் என் பாடல் இசை வடிவம் பெற்றது, எனது பேறு. பாடலுக்கு இசையமைத்து, பாடி, அழகிய விழியமாக உருவாக்கியுள்ள அவரது திறம் போற்றத்தக்கது. அவரது அன்புக்கு என் நன்றிகள்.

 • ஆர்.எஸ்.மணி
  R.S.Mani wrote on 27 September, 2013, 19:27

  Dear Anna Kannan,
  Thanks for your kind words.
  It was a pleasure to set music to your beautiful poem.

  Anbudan,
  R.S.Mani

  PS.  As I type this in iPad, I have no access to TAMIL fonts.  So please excuse me!

 • விஜயராகவன் wrote on 28 September, 2013, 21:49

  இப்போ ஐபேடிலிருந்து தமிழை டைப செய்யலாம் . iOS 7 (2 வாரம் முன் வந்தது) தமிழ் எழுத்துகளை கொடுக்கிறது . 

  விஜயராகவன் 

  (ஐபேடிலிருந்து அனுப்பப்பட்டது )

 • ஆர்.எஸ்.மணி
  R.S.Mani wrote on 29 September, 2013, 7:27

  Thank you for your information.
  —R.S.Mani

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.