கலைமகள் தினம்
வணக்கம், வாழியநலம்
1979ஆம் ஆண்டு. சென்னை அசோக்லேலண்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த தினங்கள். உடன் பணியாற்றிய ராமகிருஷ்ணன் அற்புதமான குரல்வளம் உடையவர் – ஹிந்தித் திரை இசையின் அந்நாள் மெலடிகளைப் பாடுபவர் – அவரது விருப்பத்திற்காக
(Senior- Late) திரு ரோஷன் அவர்களின் இசையில் அமைந்த ” Oh Re Taal Mile Nadi Ke Jal Mein” ( காணொலி :▶ Oh Re Taal Mile Nadi Ke Jal Mein Mukesh Film Anokhi Raat (1968) Roshan / Indeewar – YouTube http://www.youtube.com/watch?v=eUq7jDt_sgc ) பாடலின் மெட்டில் ஆஃபீஸ் சரஸ்வதி பூஜையில் அவர் பாட, எழுதிய கலைமகள் துதி இதோ:
படகே போல் உயிர் வாழ்வெனும் நதிமேல்
விரைந்திடும் ஆறங்கே
கரையிலா ஆழியில் விழுமுன்
கலாதேவிவா! ( படகே)
அறிவெனுமோர் தீபம் ஒளிர்ந்தால்
உடலம் இதோர் கோவிலாம்
உடலம் இதோர் கோவிலாம்
அறிவருள்வாய் கோவிலில் நானும்
உனதுருவம் காண்கிறேன்!
உனதுருவம் காண்கிறேன்!
என்கலைவாணீ !
தாமரைமேல் மேவிடும் தாயே!
காலமெலாம் போகுதே!
வாழ்வில்நான் அறியாமையினால்
வருந்தலாமா? (படகே)
இசையெனும் ஓர் தேரில் இவர்ந்தால்
இக உலகோர் தூசியாம்
இக உலகோர் தூசியாம்
இசையருள்வாய் ஒருகணமேனும்
மன்னவனாய் வாழ்கிறேன்
மன்னவனாய் வாழ்கிறேன்!
என் கலைவாணீ !
நான்மறைகள் ஓதிடும் தாயே
நாட்கள்விரைந் தேகுதே!
தேவிநீ அருள்புரியாமல்
வருத்தலாமா? ( படகே)