எங்கே நீயோ

உமா மோகன் 

friends 2

–பிரியம் சொல்லில் தளும்பல்

உன் ப்ரியம்

கருணை கண்ணில் வழிவது

பார்வைக்கு அழகு

பார்ப்பவர்க்கு அழகா ..?

என் ஆன்மாவை

துடைத்துத் தூபம் காட்டி

இறுகப் பூட்டிவிட்டேன்

புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

 

அழுக்கு தின்று மூச்சு விடும்

மீன் அது என்பதை அறியாயோ

அகவிழி திறந்து ஆன்மாவை

உலவவிடு…

தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு

நீந்தும்போதில்

நீயும் கற்பாய் பிரியமும் கருணையும்

விரல் வழியும் வழியும் என்பதை…

 

உமா மோகன்

பணி-அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளர்
ஊர்-புதுச்சேரி
ஆர்வம்-எழுத்தும் வாசிப்பும்.
வலைப்பூ-குரல் -கவிதைகளுக்கான தளம்
புள்ளிக்கோலம்-கட்டுரைகளுக்கான தளம்.
விகடன்,கல்கி,செம்மலர் வண்ணக்கதிர்.இதழ்களிலும் உயிரோசை,திண்ணை,அதீதம் ,
இணைய இதழ்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன.

Share

About the Author

has written 11 stories on this site.

பணி-அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளர் ஊர்-புதுச்சேரி ஆர்வம்-எழுத்தும் வாசிப்பும். வலைப்பூ-குரல் -கவிதைகளுக்கான தளம் புள்ளிக்கோலம்-கட்டுரைகளுக்கான தளம். விகடன்,கல்கி,செம்மலர் வண்ணக்கதிர்.இதழ்களிலும் உயிரோசை,திண்ணை,அதீதம் , இணைய இதழ்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]


one + 7 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.